Sat Sep 12, 2026 | 12:45 AM IST

Expert

சப்ளிமெண்ட்ஸ் எடுத்தும் இரும்புச்சத்து இல்லையா? அதற்கான காரணங்களும், அயர்ன் லெவலை அதிகரிக்கும் வழிகளும்

உடலுக்குப் போதுமான அளவு சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக் கொண்ட பிறகும், உடலில் சில சமயங்களில் இரும்புச்சத்து அதிகரிக்காமல் போகலாம். இதில் உடலில் இரும்புச்சத்து அளவை அதிகரிக்க உதவும் வழிகள் குறித்து ஊட்டச்சத்து நிபுணர் பகிர்ந்துள்ளதைக் காணலாம்.

உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும், உடலில் பல்வேறு செயல்பாடுகளை மேற்கொள்வதற்கும் உடலுக்குப் போதுமான அளவு ஊட்டச்சத்துக்களை எடுத்துக் கொள்வது அவசியமாகும். இந்நிலையில், அன்றாட உணவில் பல்வேறு வகையான வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் இன்னும் பிற ஊட்டச்சத்துக்கள் அவசியமானதாகக் கருதப்படுகிறது. அவ்வாறு உடலில் இரும்புச்சத்துக்கள் பல்வேறு முக்கிய செயல்பாடுகளில் பங்கு வகிக்கின்றன. இரும்புச்சத்து என்பது ஆரோக்கியமான இரத்த சிவப்பணுக்களை பராமரிப்பதிலும், நோயெதிர்ப்பு செயல்பாட்டை ஆதரிக்கவும் உதவுகிறது.

மேலும், இது உடல் முழுவதும் ஆக்ஸிஜன் போக்குவரத்தை எளிதாக்குவதிலும் முக்கிய பங்கு வகிக்கும் ஒரு அத்தியாவசிய ஊட்டச்சத்தாகக் கருதப்படுகிறது. இந்நிலையில் சிலருக்கு சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக் கொண்டாலும், நம்மில் பலர் இரும்புச்சத்து குறைபாட்டின் அறிகுறிகளைச் சந்திக்கும் நிலை ஏற்படுகிறது. இதன் அறிகுறிகளாக, சோர்வு, பலவீனம் மற்றும் இன்னும் பிற உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படலாம். இதில் சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக் கொண்ட பிறகும், உடலில் இரும்புச்சத்து அளவு ஏன் உயரவில்லை என்பது குறித்து ஊட்டச்சத்து நிபுணர் லோவ்னீத் பத்ரா அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அதைப் பற்றி இங்குக் காண்போம்.

இரும்புச்சத்து அதிகரிக்காமல் இருப்பதற்கான காரணங்கள்

ஊட்டச்சத்து நிபுணர் லோவ்னீத் பத்ரா அவர்கள், சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக் கொண்ட பிறகும், இரும்புச்சத்து அளவு ஏன் உயரவில்லை என்பது குறித்து விளக்குகிறார். அவரின் கூற்றுப்படி, "உண்மை எளிது: இரும்பு எப்போதும் உண்மையான பிரச்சனை அல்ல. சில நேரங்களில் உடலால் அதை சரியாக உறிஞ்சவோ அல்லது பயன்படுத்தவோ முடியாது" என்று அவர் இன்ஸ்டாகிராமில் குறிப்பிட்டார்.

இதன் உண்மையான தீர்வானது அதிக இரும்பைச் சேர்ப்பது அல்ல. உண்மையில் இரும்பை செயல்பட வைக்கும் ஊட்டச்சத்துக்கள் மற்றும் அமைப்புகளை ஆதரிப்பதாகும்.

உடலில் இரும்பு அளவை அதிகரிப்பதற்கான எளிய வழிகள்

வயிற்று அமிலத்தை ஆதரிக்க

பொதுவாக, வயிற்று அமிலம் இரும்பு உறிஞ்சுதலுக்கு முக்கியமானது. ஏனெனில் இது ஹீம் அல்லாத இரும்பை உடல் எளிதில் உறிஞ்சக்கூடிய வடிவமாக மாற்ற இந்த அமிலம் தேவைப்படுகிறது. இரும்புச்சத்தை மேம்படுத்த, உணவின் தொடக்கத்தில் புரதத்தை உட்கொள்வது வயிற்று அமில உற்பத்தியைத் தூண்ட உதவுகிறது. அதன் படி, தயிர், சார்க்ராட் மற்றும் கிம்ச்சி போன்ற புளித்த உணவுகள் குடலுக்கு நன்மை பயக்கும் பாக்டீரியாக்களை அறிமுகப்படுத்துகின்றன. இவை குடல் பாக்டீரியாவை சமநிலைப்படுத்தவும், செரிமானத்தை ஆதரிக்கவும் உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: பீரியஸ் டைம்ல ஒவ்வொரு பெண்ணும் தங்கள் உணவில் சேர்க்க வேண்டிய சூப் வகைகள்..

உறிஞ்சுதலை அதிகரிப்பதற்கு

உறிஞ்சுதலை அதிகரிக்க சரியான உணவுகளை இணைப்பதும், "தடுப்பான்களை" தவிர்ப்பதும் அவசியமாகும். அதன் படி, வைட்டமின் சி ஊட்டச்சத்துக்கள் ஹீம் அல்லாத இரும்பை உடல் எளிதாக உறிஞ்சக்கூடிய வடிவமாக மாற்ற உதவுகிறது. மேலும், தாவர அடிப்படையிலான இரும்பு மூலங்களுடன் இறைச்சி, மீன் அல்லது கோழி இறைச்சியை சாப்பிடுவது ஹீம் அல்லாத இரும்பின் உறிஞ்சுதலை மேம்படுத்த உதவுகிறது.

தாமிரத்தை அதிகரிப்பது

தாமிரம் இல்லாமல், உடல் இரும்பை சரியாகத் திரட்டவோ, பயன்படுத்தவோ முடியாது. இது ஒரு வகையான இரும்புச்சத்து குறைபாடு ஆகும். இவை இரத்த சோகைக்கு வழிவகுக்கிறது. இந்நிலையில், தாமிரத்தை மீண்டும் கட்டியெழுப்புவது, இந்த செயல்முறையை மீட்டெடுக்க உதவுகிறது. பெரும்பாலான மக்கள் உணவு மூலம் தங்கள் அன்றாட தாமிரத் தேவைகளைப் பூர்த்தி செய்யலாம். இதற்கு நட்ஸ், விதைகள், பருப்பு வகைகள் மற்றும் முழு தானியங்கள் போன்றவை சிறந்த ஆதாரமாக விளங்குகிறது.

View this post on Instagram

A post shared by Lovneet Batra (@lovneetb)

குடலைக் குணப்படுத்துவது

இரும்புச்சத்து அளவை அதிகரிப்பதற்கு குடலைக் குணப்படுத்துவது முக்கியமாகக் கருதப்படுகிறது. ஏனெனில் சேதமடைந்த அல்லது வீக்கமடைந்த செரிமானப் பாதையானது இரும்பு உறிஞ்சுதல் குறைபாடு மற்றும் நாள்பட்ட உள் இரத்த இழப்புக்கு வழிவகுக்கிறது. நீண்டகால இரும்பு ஆரோக்கியத்திற்கு அடிப்படை குடல் நிலைமைகளை நிவர்த்தி செய்ய வேண்டும். ஏனெனில், சப்ளிமெண்ட்ஸ் சரியாக உறிஞ்சப்படாவிட்டால் பயனற்றதாக இருக்கலாம். குடல் ஆரோக்கியத்திற்காக உணவில் புளித்த உணவுகள், நார்ச்சத்து (ஓட்ஸ், பருப்பு, வாழை மாவு) போன்றவற்றை சேர்க்கலாம்.

அதன் படி, "சில நேரங்களில் இது குறைந்த இரும்புச்சத்து பற்றியது அல்ல - இது மோசமான உறிஞ்சுதலைப் பற்றியது" என்று லோவ்னீத் பத்ரா தனது பதிவில் பகிர்ந்தார்.

பொறுப்புத்துறப்பு

இதில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. எனினும், தனிப்பட்ட தகவல்களைப் பெற விரும்புபவர்கள் அல்லது புதிய முயற்சிகளைக் கையாள விரும்புபவர்கள் எப்போதும் தகுதிவாய்ந்த நிபுணரை அணுகுவது நல்லது.

இந்த பதிவும் உதவலாம்: சுவரொட்டி.. இரும்புச்சத்தின் பொக்கிஷம்.! மருத்துவர் விளக்கம்..

Image Source: Freepik

Read Next

வின்டர் சீசனில் ஹார்மோன் சமநிலைக்கு சாப்பிட வேண்டிய சூப்பர் உணவுகள் இதோ

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

கௌதமி சுப்ரமணி

கௌதமி சுப்ரமணி

இளைய உள்ளடக்க எழுத்தாளர்

நான் கௌதமி சுப்ரமணியம், டிஜிட்டல் மீடியாவில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறேன். ஆரோக்கியம், உணவு, உடற்பயிற்சி, உடல் நலம், அழகு குறிப்பு போன்றவை தொடர்பான விவரங்களை ஆராய்ந்து கட்டுரைகளை எழுதி வருகிறேன். நான் எழுதும் ஒவ்வொரு பகுதியும் ஈர்க்கக்கூடியதாக இருப்பதை உறுதிசெய்து, விவரங்களுக்கு ஒரு தீவிரமான பார்வையை வளர்த்துக்கொண்டேன். மக்களுக்குத் தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான இலக்கை மேம்படுத்துவது எனது நோக்கம் ஆகும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

    Nov 27, 2025 14:24 IST

    Published By : கௌதமி சுப்ரமணி

Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content