Sat Sep 12, 2026 | 12:07 AM IST

Doctor Verified

குளிர்காலத்தில் சருமம் வறண்டு போகும் கவலையா? நீரேற்றமாக இருக்க நீங்க பின்பற்ற வேண்டியவை

கடுமையான குளிர் காலநிலை காரணமாக, முகம் விரைவாக வறண்டு போவது பலரும் சந்திக்கும் ஒரு பொதுவான பிரச்சனையாகும். ஏனெனில் குளிர்ந்த காற்று மற்றும் குறைந்த ஈரப்பதம் போன்றவை சருமத்தின் ஈரப்பதத்தை உறிஞ்சிவிடும். குளிர்காலத்தில் சருமத்தை வறட்சியிலிருந்து பாதுகாக்க எந்த விதிகள் உதவும் என்பது குறித்து காணலாம்.

இந்த ஆண்டு என்றும் இல்லாத வகையில், பல்வேறு இடங்களில் மக்கள் அதிக குளிரை சந்திக்கின்றனர். குளிர்காலம் அனைவருக்கும் நிம்மதியான, மகிழ்ச்சியான காலநிலையாக இருப்பினும், பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தும் காலநிலையாக அமைகிறது. கடுமையான குளிர்கால மாதங்களில் பலர் வறண்ட மற்றும் உரிந்து விழும் சருமத்தை அனுபவிக்கின்றனர். இதற்கு குறைந்த ஈரப்பதம் மற்றும் குளிர்ந்த காற்று போன்றவை காரணமாக இருக்கலாம். இது சருமத்தின் இயற்கையான ஈரப்பதத் தடையை சேதப்படுத்துகிறது.

பொதுவாக, சருமத்தின் மேல் அடுக்கில் உள்ள லிப்பிடுகள் குறைந்துவிட்டால், அது இனி தண்ணீரை உறிஞ்ச முடியாது. இதனால் சருமம் வறண்டு சங்கடமான நிலையை உருவாக்குகிறது. குளிர்காலத்தில் வறட்சியைத் தடுப்பதற்கு சரியான நீரேற்றம் மற்றும் தோல் பராமரிப்பு வழக்கம் அவசியமாகும். இதற்கு, குளிர்காலத்தில் சரும வறட்சியைத் தடுக்க உதவும் சில எளிய நீரேற்ற விதிகளைக் கையாள வேண்டும். இது பற்றிய கூடுதல் தகவலுக்கு, குளிர்காலத்தில் வறட்சியிலிருந்து உங்கள் முகத்தை எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்த வழிகாட்டியை ஹைதராபாத், யசோதா மருத்துவமனைகள், ஆலோசகர் தோல் மருத்துவர், டாக்டர் ஷெரின் ஜோஸ் அவர்கள் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

குளிர்காலத்தில் வறண்ட சருமத்தை நீரேற்றமாக வைப்பது எப்படி?

நீரிழப்பு தடுப்பு

  • முதலில், உடலில் தண்ணீர் பற்றாக்குறையை அனுமதிக்கக் கூடாது. குளிரில் தாகம் குறைவாக உணரலாம் என்றாலும், சுவாசம் மற்றும் வறண்ட உட்புற காற்று தொடர்ந்து உடலில் ஈரப்பதத்தை இழக்கச் செய்கிறது.
  • இந்நிலைக்கு மருத்துவர், நாள் முழுவதும் வெதுவெதுப்பான நீர், சூப், மூலிகை தேநீர் அல்லது சூடான எலுமிச்சைப் பழத்தை பருக பரிந்துரைக்கிறார். இவை உடலை நீரேற்றமாக வைத்திருக்கவும், குளிரில் இருந்து நிவாரணம் அளிக்கவும் உதவுகின்றன.
  • தண்ணீர் குடிக்க மறந்துவிட்டால், உங்களுடன் ஒரு தண்ணீர் பாட்டிலை வைத்திருக்கலாம் அல்லது உங்கள் தொலைபேசியில் ஒரு நினைவூட்டலை வைத்து தண்ணீர் குடிப்பதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.

 

நீரேற்றம் தரும் உணவுகளை உண்ணுவது

  • முக வறட்சியைத் தடுப்பதற்கு, நீரேற்றம் எவ்வளவு முக்கியமோ அதே அளவு ஊட்டச்சத்தும் முக்கியமாகும்.
  • இதற்கு இலை காய்கறிகள், சிட்ரஸ் பழங்கள் மற்றும் வெள்ளரிகள் போன்ற நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். இவை உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவுகின்றன. எனவே அவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
  • ஆளி விதைகள் மற்றும் வால்நட்ஸ்கள் ஊட்டச்சத்துக்களின் சிறந்த ஆதாரங்களாகும். இடில் உள்ள ஒமேகா-3 நிறைந்த உணவுகள் சருமத்தை உள்ளிருந்து ஊட்டமளித்து வறட்சியைக் குறைக்கிறது. எனவே இதை உணவின் ஒரு பகுதியாக மாற்ற வேண்டும்.

இந்த பதிவும் உதவலாம்: குளிர்காலத்தில் பளபளப்பான சருமம் வேண்டுமா.? நெய்யை இந்த 3 வழிகளில் பயன்படுத்தினால் போதும்.!

மேற்பூச்சு பராமரிப்பு

  • சருமத்தை நீரேற்றமாக வைக்க மேற்பூச்சு பராமரிப்பும் மிக முக்கியமாகும். முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவிய உடனேயே, ஈரப்பதத்தை தக்கவைக்க, ஒரு நாளைக்கு குறைந்தது இரண்டு முறையாவது ஊட்டமளிக்கும் மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்துமாறு டாக்டர் பரிந்துரைக்கிறார்.
  • இதற்கு கிளிசரின், ஹைலூரோனிக் அமிலம் மற்றும் இயற்கை எண்ணெய்கள் கொண்ட மாய்ஸ்சரைசர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
  • மேலும் மிகவும் சூடான நீர் மற்றும் கடுமையான சோப்புகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும், ஏனெனில் இவை சருமத்தின் இயற்கை எண்ணெய்களை அகற்றிவிடும்.

குளிர்ந்த காற்றிலிருந்து முகத்தைப் பாதுகாப்பது

சரும வறட்சியைத் தடுப்பதற்கு மேற்பூச்சு பராமரிப்பு அவசியமாகும். குளிர்ந்த காற்றிலிருந்து முகத்தைப் பாதுகாக்க கையுறைகள் மற்றும் ஸ்கார்ஃப் அணியுமாறு மருத்துவர் பரிந்துரைக்கிறார்.

வறட்சி மற்றும் வெயிலில் ஏற்படும் பாதிப்பைத் தடுக்க SPF உடன் லிப் பாம் தடவலாம். இந்த நடவடிக்கைகள் உட்புற நீரேற்றம், ஆரோக்கியமான ஊட்டச்சத்து மற்றும் சரியான சருமப் பாதுகாப்பை வழங்குகின்றன.

முடிவுரை

இந்த வைத்தியங்களின் உதவியுடன், குளிர்காலத்தில் முகம் வறண்டு போவதைத் தவிர்க்கலாம். மேலும், குளிர்காலம் முழுவதும் சருமத்தை ஆரோக்கியமாகவும் வசதியாகவும் வைத்திருக்க முடியும். எனினும், சருமம் தொடர்பான பிரச்சனைகளுக்குப் புதிய பொருள்களைப் பயன்படுத்துவதற்கு முன்பாக சருமத்தை வறட்சியிலிருந்து பாதுகாப்பாக வைக்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்: குளிர்காலத்தில் சருமத்தை பளபளப்பாக வைத்திருக்க இந்த ஸ்கின் கேர் ரகசியங்களை மறக்காதீங்க!

Image Source: Freepik

Read Next

குளிர்காலத்தில் சருமத்தை பளபளப்பாக வைத்திருக்க இந்த ஸ்கின் கேர் ரகசியங்களை மறக்காதீங்க!

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

கௌதமி சுப்ரமணி

கௌதமி சுப்ரமணி

இளைய உள்ளடக்க எழுத்தாளர்

நான் கௌதமி சுப்ரமணியம், டிஜிட்டல் மீடியாவில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறேன். ஆரோக்கியம், உணவு, உடற்பயிற்சி, உடல் நலம், அழகு குறிப்பு போன்றவை தொடர்பான விவரங்களை ஆராய்ந்து கட்டுரைகளை எழுதி வருகிறேன். நான் எழுதும் ஒவ்வொரு பகுதியும் ஈர்க்கக்கூடியதாக இருப்பதை உறுதிசெய்து, விவரங்களுக்கு ஒரு தீவிரமான பார்வையை வளர்த்துக்கொண்டேன். மக்களுக்குத் தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான இலக்கை மேம்படுத்துவது எனது நோக்கம் ஆகும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

    Nov 30, 2025 23:16 IST

    Published By : கௌதமி சுப்ரமணி

Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content