Fri Sep 11, 2026 | 11:16 PM IST

Doctor Verified

மருந்து வேண்டாம்.. இந்த 5 விஷயத்த மட்டும் பண்ணுங்க.. மூட்டு வலி காணாமல் போகும்.!

மூட்டு வலியால் அவதிப்படுகிறீர்களா? டாக்டர் சந்தோஷ் ஜேக்கப் கூறும் இந்த 5 இயற்கை வழிகளைப் பின்பற்றினால், மூட்டு வலி மருந்து இல்லாமலேயே குறையும். உணவு, உடற்பயிற்சி, தூக்கம், யோகா ஆகியவை எவ்வாறு உதவுகின்றன என்பதை அறியுங்கள்.

மூட்டு வலி என்பது இன்று இளம் வயதினருக்குக் கூட ஏற்படும் பொதுவான பிரச்சனை. மருந்துகளால் உடனடி நிவாரணம் கிடைத்தாலும், அது தற்காலிகம் தான். ஆனால் உடலுக்கே பொருத்தமான வாழ்க்கைமுறை மாற்றங்கள் மூட்டு வலியை அடிப்படையாகவே குறைக்க உதவுகின்றன என்று கூறுகிறார் டாக்டர் சந்தோஷ் ஜேக்கப், தலைமை எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர். அவர் கூறும் S.W.A.M.S முறை என்பது மருந்து இல்லாமல் மூட்டு வலியை கட்டுப்படுத்தும் இயற்கை வழி.

மூட்டு வலியை தீர்க்கும் எளிய வழி

S – Strength Training (வலிமை பயிற்சி)

மூட்டுகளைச் சுற்றிய தசைகள் பலம் பெறுவது மூட்டு வலியை குறைக்கும் முக்கிய காரணம். சிறிய அளவில் டம்பிள் லிஃப்டிங், ஸ்க்வாட்ஸ், லெக் ரெய்ஸ் போன்ற பயிற்சிகள் தசைகளின் வலிமையை அதிகரித்து, மூட்டுகளின் மீது இருக்கும் அழுத்தத்தை குறைக்கும். “Muscle strength = Less pain” என்று மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்பட்டது.

W – Weight Reduction (எடை குறைத்தல்)

எடை அதிகரித்தால், மூட்டுகள் மேலதிக அழுத்தத்தைச் சந்திக்கின்றன. மட்டும் 10–15% எடை குறைத்தாலே, மூட்டு வலி 50% வரை குறையும் என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன. எளிமையான நடைப்பயிற்சி, கலோரி கட்டுப்பாடு, தண்ணீர் அதிகம் குடித்தல் ஆகியவை உதவும்.

இந்த பதிவும் உதவலாம்: ஈஸ்ட்ரோஜன் ஆதிக்கத்தை நிர்வகிக்க உதவும் 5 இயற்கை வழிகள் இதோ.. ஊட்டச்சத்து நிபுணர் தரும் விளக்கம்

A – Anti-inflammatory Diet (அழற்சி குறைக்கும் உணவு முறை)

உடலின் அழற்சியை குறைக்க உணவுப் பழக்கமே முக்கியம். சேர்க்க வேண்டியவை: புரதம், நார்ச்சத்து, நல்ல கொழுப்பு (ஓமேகா-3), காய்கறி, பழம். தவிர்க்க வேண்டியவை: சர்க்கரை, உப்பு, பொரித்த உணவுகள், ஜங்க் புட். இப்படி சுத்தமான உணவு எடுத்துக்கொள்வதால் உடல் உள்ளிருந்து குணமடையும்.

M – Mobility & Yoga (இயக்கம் மற்றும் யோகா)

“நடப்பதே நலம்!” அதிக நேரம் அமர்ந்திருப்பது மூட்டுகளை இறுக்கமாக்கும். யோகா, ஸ்ட்ரெட்சிங், சைக்கிளிங் போன்றவை மூட்டுகளில் திரவ ஓட்டத்தை சீராக வைத்துக் கொண்டு, நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கின்றன. சிறந்த யோகா ஆசனங்கள்: வீரபத்ராசனம், தாடாசனம், திரிகோணாசனம்.

S – Sleep & Stress Management (தூக்கம் மற்றும் மனஅழுத்த கட்டுப்பாடு)

போதுமான தூக்கம் இல்லாமல் உடல் அழற்சி குறையாது. தூக்கம் உடல் குணமடைய மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. அதேபோல், மனஅழுத்தம் கார்டிசோல் எனும் ஹார்மோனைக் கூட்டி வலியை அதிகரிக்கிறது. தினமும் 7–8 மணி நேர தூக்கமும், தியானம் அல்லது பிராணாயாமமும் அவசியம்.

 

View this post on Instagram

A post shared by Dr Santhosh Jacob MBBS,DNB,MCh,DABRM,PhD (@drsanthoshjacob)

இறுதியாக..

மூட்டு வலி ஒரு நோயல்ல, அது உடலின் எச்சரிக்கை. வாழ்க்கை முறையை சீராக வைத்துக்கொள்வது, சீரான உணவு, பயிற்சி, தூக்கம் ஆகியவற்றை கடைப்பிடிப்பது மூட்டு வலியை முற்றிலும் கட்டுப்படுத்தும். மருந்தை விட மனநிலை, உணவு மற்றும் இயக்கம் முக்கியம் என்பதை மறக்க வேண்டாம்.

Disclaimer: இந்த கட்டுரை பொதுவான தகவல்களுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு மாற்றாக இதை பயன்படுத்தக்கூடாது. நீண்டநாள் மூட்டு வலி அல்லது உடல் சிக்கல்கள் இருப்பின், தகுந்த எலும்பியல் நிபுணரை அணுகவும்.

Read Next

தீபாவளிக்குப் பிந்தைய நச்சுக் காற்றிலிருந்து குழந்தைகள், பெரியவர்களை பாதுகாப்பது எப்படி?

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

Ishvarya Gurumurthy

Ishvarya Gurumurthy

துணை ஆசிரியர்

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

    Oct 21, 2025 10:48 IST

    Published By : Ishvarya Gurumurthy

Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content