Fri Sep 11, 2026 | 11:13 PM IST

Doctor Verified

சின்ன வெங்காயம் பச்சையாக சாப்பிடலாமா.? எவ்வளவு சாப்பிடலாம்.? யாருக்கு நல்லது.? மருத்துவர் விளக்கம்..

சின்ன வெங்காயம் தினமும் பச்சையாக சாப்பிடலாமா? எவ்வளவு அளவு உடலுக்கு நல்லது? இரத்த சோகை, BP, இதய நோய், அலர்ஜி பிரச்சனைகளுக்கு எப்படி உதவுகிறது? மருத்துவர் கார்த்திகேயன் கூறும் மருத்துவ பயன்கள் இங்கே..

ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த சின்ன வெங்காயம் தமிழர்கள் தினசரி உணவில் இயல்பாகவே இடம்பெறும். ஆனால் பச்சையாக சாப்பிட்டால் இன்னும் அதிக மருத்துவ பலன்கள் கிடைக்கும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். இந்த நிலையில், சின்ன வெங்காயத்தை பச்சையாக சாப்பிடுவதன் நன்மைகள் குறித்து மருத்துவர் கார்த்திகேயன் முக்கிய விளக்கங்களை பகிர்ந்துள்ளார்.

Video Link:  https://youtu.be/YCn-V_W8xmQ

பச்சையாக சாப்பிட்டால் துர்நாற்றம் வருமா.?

சிலருக்கு பச்சை வெங்காயம் சாப்பிட்டதும் வாயில் துர்நாற்றம் ஏற்படும். இதைத் தவிர்க்க, உடனே புதினா இலைகளை மென்று சாப்பிடலாம் என்று மருத்துவர் அறிவுறுத்துகிறார்.

சின்ன வெங்காயத்தின் சத்துகள் என்ன? (100 கிராமுக்கு)

* 82% நீர்ச்சத்து

* 1.2% புரதச் சத்து

* 11% மாவுச் சத்து

* 47 mg கால்சியம்

* 50 mg பாஸ்பரஸ்

* Vitamin B12 & Vitamin C நிறைந்தது

இதனால் இது இயற்கையான நோய் எதிர்ப்பு ஊட்டச்சத்து உணவாக கருதப்படுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Small Onion Vs Big Onion: கோடையில் உடல் சூட்டை குறைக்க எது பெஸ்ட்? சின்ன வெங்காயமா, பெரிய வெங்காயமா?

தினமும் எவ்வளவு சின்ன வெங்காயம் சாப்பிடலாம்?

மருத்துவர் கார்த்திகேயன் பரிந்துரைக்கும் அளவு - தினமும் 2 பச்சை சின்ன வெங்காயம். இது குறிப்பாக கீழ்க்கண்டவர்களுக்கு மிகுந்த நன்மை தரும்..

இரத்த சோகை (Anemia) உள்ளவர்கள்

சின்ன வெங்காயத்தில் உள்ள இரும்புச் சத்து (Iron), இரத்த சோகையை குறைக்க உதவுகிறது. தினமும் 2 பச்சை சின்ன வெங்காயம் உணவில் சேர்க்கலாம்.

இதய நோயாளிகள் & உயர் இரத்த அழுத்தம் (BP)

சின்ன வெங்காயத்தில் உள்ள ஆர்கானிக் சல்ஃபர், இரத்தத்தில் இருக்கும் கெட்ட கொழுப்பை குறைக்கும், இதனால் மாரடைப்பு அபாயம் குறையும். மருத்துவர் கூறுவது, “இது இதய நோய் மருந்துகளுக்கு இணையான பயன்பாடு தரும் நெய்ச்சத்து உணவு!”

அலர்ஜி & ஆஸ்துமா உள்ளவர்கள்

சின்ன வெங்காயத்தில் உள்ள Antioxidants, Flavonoids - இவை சுவாசத்தைக் கட்டுப்படுத்தி, அலர்ஜி தாக்கத்தைக் குறைக்க உதவுகின்றன.

நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள்

Vitamin C + நார்ச்சத்து இணைந்து உடல் பாதுகாப்பு செயல்பாட்டை அதிகரிக்கும். காய்ச்சல், குளிர் போன்றவை எளிதாக வராமல் தடுக்கிறது.

மேலும் கிடைக்கும் முக்கிய நன்மைகள்

* செரிமானத்தை மேம்படுத்தும்

* உடலில் இருக்கும் அழற்சியை குறைக்கும்

* குடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும்

* இரத்த ஓட்டத்தைக் கட்டுப்படுத்தும்

* சர்க்கரை நோயாளிகளுக்கும் பாதுகாப்பானது

இறுதியாக..

பச்சை சின்ன வெங்காயம் தினமும் 2 வரை சாப்பிடுவது - இதய ஆரோக்கியம், இரத்த சோகை, இரத்த அழுத்த கட்டுப்பாடு, நோய் எதிர்ப்பு சக்தி, சுவாச கோளாறுகள் - இவற்றை மேம்படுத்த உதவுகிறது. இது இயற்கையான “மலிவான Multivitamin” என்று சொல்லலாம்.

Disclaimer: இந்த கட்டுரை தகவல் பகிர்வு நோக்கத்திற்கானது. மருத்துவ பிரச்சனைகள் இருந்தால், நிபுணர் ஆலோசனையைப் பெறுவது அவசியம்.

Read Next

உங்க குழந்தை எப்போதும் சோர்வா இருக்கா? ஸ்ட்ராங்கா இருக்க உதவும் எளிய உணவுகள் இதோ

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

Ishvarya Gurumurthy

Ishvarya Gurumurthy

துணை ஆசிரியர்

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

    Nov 14, 2025 15:14 IST

    Published By : Ishvarya Gurumurthy

Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content