Fri Sep 11, 2026 | 10:17 PM IST

Doctor Verified

லெமன் ஜூஸ் இப்படித்தான் குடிக்க வேண்டும்.. மருத்துவர் எச்சரிக்கை.!

லெமன் குடிப்பது நல்லதா? எவ்வளவு தண்ணீர் சேர்க்க வேண்டும்? யாருக்கு தவிர்க்க வேண்டும்? மருத்துவர் கார்த்திகேயன் விளக்கும் முக்கிய எச்சரிக்கைகள்.

உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க பலரும் பழச்சாறுகளை அதிகம் விரும்புகின்றனர். அதில், லெமன் ஜூஸ் பலரின் முதன்மைத் தேர்வாக இருக்கிறது. ஆனால், லெமன் ஜூஸ் குடிப்பதில் சில முக்கிய விதிமுறைகளை பின்பற்றாவிட்டால் உடலுக்கு பாதிப்பு ஏற்படும் என மருத்துவர் கார்த்திகேயன் எச்சரிக்கிறார்.

லெமன் ஜூஸ் – ஏன் கவனமாக குடிக்க வேண்டும்?

மருத்துவர் கார்த்திகேயன் கூறுவதாவது, “லெமன் ஜூஸ் ஒரு வகை Citric Acid. அதனை அப்படியே குடிப்பது குடல் மற்றும் வயிற்று சுவரை பாதிக்கக்கூடும்.” எனவே, லெமன் ஜூஸ் நேரடியாக குடிக்கக் கூடாது. தண்ணீர் கலந்து மட்டுமே குடிக்க வேண்டும்.

சரியான கலவை என்ன?

  • 1 பங்கு எலுமிச்சை சாறு
  • 5 பங்கு தண்ணீர்

இந்த விகிதத்தில் கலந்து குடிப்பதே உடலுக்கு பாதுகாப்பானது.

இந்த பதிவும் உதவலாம்: தினமும் லெமன் வாட்டர் குடிப்பதால் உங்க உடலுக்கு என்னாகும் தெரியுமா? மருத்துவர் தரும் அட்வைஸ்

பற்களை பாதுகாக்க ஸ்ட்ரா அவசியம்

  • லெமன் ஜூஸ் பற்களின் எனாமல் (Enamel) பாதிப்பை ஏற்படுத்தும்.

அதனால் ஸ்ட்ரா (Straw) கொண்டு குடிக்கும் பழக்கத்தை
பின்பற்ற வேண்டும்.

அல்சர் உள்ளவர்கள் கவனம்

வயிற்றுப் புண் (Ulcer) உள்ளவர்களுக்கு லெமன் ஜூஸ், எரிச்சல் மற்றும் வலியை அதிகரிக்கக்கூடும். அல்சர் பிரச்சனை இருப்பவர்கள், லெமன் ஜூஸ் குடிப்பதை தவிர்ப்பது நல்லது.

இதயத் துடிப்பு அதிகரிக்க காரணமா?

சிலருக்கு வேகமாக மூச்சை இழுத்து விடும் பழக்கம், உடலில் Carbon Dioxide அதிகரிப்பு இருக்கும். இதனால், இதயத் துடிப்பு அதிகரிப்பு, பொட்டாஷியம் அளவு குறைவு ஏற்படலாம். இத்தகையவர்கள் லெமன் ஜூஸ் மற்றும் Citric Acid உள்ள பழங்களை அதிகமாக எடுத்துக் கொள்ளக் கூடாது.

சூடு தண்ணீரில் எலுமிச்சை? வேண்டாம்!

மருத்துவர் கார்த்திகேயன் தெளிவாக கூறுகிறார், “சூடு தண்ணீரில் எலுமிச்சை சாறு கலந்து குடித்தால், அதில் உள்ள Vitamin C சத்து அழிந்து விடும்.” எப்போதும் சாதாரண தண்ணீரில் மட்டும் எலுமிச்சை சாறு கலந்து குடிக்க வேண்டும்.

இறுதியாக..

லெமன் ஜூஸ் வெயில் காலத்தில் உடலுக்கு நன்மை தரும் பானம் தான். ஆனால், சரியான அளவு, சரியான கலவை, சரியான நேரம் இவற்றை பின்பற்றினால் மட்டுமே அது ஆரோக்கியமாக இருக்கும். அதிகப்படியான பயன்பாடு உடலுக்கு எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை மறக்க வேண்டாம்.

Disclaimer: இந்தக் கட்டுரை பொது சுகாதார தகவல்கள் மற்றும் நிபுணர் கருத்துகளின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. உங்களுக்கு, அல்சர், இதயத் துடிப்பு பிரச்சனை, குடல் தொடர்பான நோய்கள் இருந்தால், மருத்துவர் ஆலோசனை பெற்ற பின்னரே லெமன் ஜூஸ் குடிக்க வேண்டும்.

Read Next

தினமும் ஒரு ஸ்பூன் ஆளி விதை எண்ணெய் எடுத்துக் கொள்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

Ishvarya Gurumurthy

Ishvarya Gurumurthy

துணை ஆசிரியர்

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

    Dec 17, 2025 11:47 IST

    Published By : Ishvarya Gurumurthy

Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content