Sat Sep 12, 2026 | 12:57 AM IST

Doctor Verified

பெண்களில் அதிகரிக்கும் சினைப்பை நீர்க்கட்டி பிரச்சனை.. மருந்தில்லாமல் சீர்செய்யும் இயற்கை வழிமுறைகள்.!

பெண்களில் அதிகரிக்கும் சினைப்பை நீர்க்கட்டி (Ovarian Cyst) பிரச்சனைக்கு மருந்து இல்லாமல் உணவு, யோகா, வாழ்க்கை முறையில் மாற்றம் மூலம் தீர்வு காணும் இயற்கை வழிமுறைகள் இங்கே.

சமீப ஆண்டுகளில் பெண்களிடம் சினைப்பை நீர்க்கட்டி (Ovarian Cyst) பிரச்சனை பெருமளவில் அதிகரித்து வருவதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். சிறுவயதிலிருந்தே இனிப்பு உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்வது, உடல் உழைப்பு குறைவு, வெளிச்சாப்பாடு, பிராய்லர் உணவுகள் போன்றவை இந்த பிரச்சனையின் முக்கிய காரணங்களாக இருக்கின்றன என மருத்துவர் சிவராமன் ‘ஹெல்தி தமிழ்நாடு’ யூடியூப் சேனல் வழியாக தெரிவித்துள்ளார்.

சினைப்பை நீர்க்கட்டி ஏன் அதிகரிக்கிறது?

மருத்துவர் சிவராமன் கூறுவதில்,

  • முன்பு இந்த பிரச்சனை பெரும்பாலும் கருத்தரிப்பு காலத்தில் தான் கண்டறியப்பட்டதாக இருந்தது.
  • ஆனால் தற்போது 10 பெண்களில் 3 பெண்களுக்கு வரை இந்த நீர்க்கட்டி பிரச்சனை காணப்படுவதால் பெரும் கவலை நிலவுகிறது.

சிறுவயதில் அதிகமாக இனிப்பு உணவுகள், ஜங்க் உணவு, உடற்பயிற்சி இல்லாமை, பிராய்லர் கோழி, நார்ச்சத்து குறைந்த உணவு — இவை அனைத்தும் உடலின் ஹார்மோன் சமநிலையை சிதைத்துவிடுகின்றன. இதுவே நீர்க்கட்டி உருவாகும் பாதையை அமைக்கிறது என்று அவர் விளக்குகிறார்.

Video Link: https://youtu.be/UqViUcxEpnQ

மருந்து வேண்டாம்: வாழ்க்கை முறையில் மாற்றமே முதல் சிகிச்சை

சினைப்பை நீர்க்கட்டியை உடனே மருந்துகளால் அல்லாது, முதலில் உணவு மற்றும் வாழ்க்கை முறையில் மாற்றம் மூலம் சரிசெய்யலாம் என நிபுணர் தெரிவிக்கிறார்.

தவிர்க்க வேண்டியவை

  • இனிப்புகள் (சர்க்கரை, இனிப்பு ஸ்னாக்ஸ், பேக்கரி பொருட்கள்)
  • மைதா மற்றும் மைதா தயாரிப்புகள்
  • பச்சரிசி
  • பிராய்லர் கோழி
  • ஜங்க் உணவுகள்

இவை அனைத்தும் இன்சுலின் அளவை அதிகரித்தும் ஹார்மோன் சமநிலையை சீர்குலைத்தும் நீர்க்கட்டியை உருவாக்க உதவுகின்றன.

இந்த பதிவும் உதவலாம்: PCOD பிரச்சனைக்கு சிறந்த தீர்வு.. காலை எழுந்ததும் நீங்க செய்ய வேண்டியவை! நிபுணர் சொன்னது

உணவில் சேர்க்க வேண்டியவை

1. லோ-கிளைசீமிக் உணவுகள்

ரத்த சர்க்கரையை மெதுவாக உயர்த்துவதால் ஹார்மோன் சமநிலை சீராகும்.

2. பாரம்பரிய மற்றும் ஆரோக்கிய தானியங்கள்

  • கைக்குத்தல் புழுங்கலரிசி
  • பட்டை தீட்டாத கோதுமை
  • ராகி
  • கம்பு
  • கொண்டைக்கடலை
  • பயறு வகைகள்

3. பழங்கள்

ஜூஸ் அல்லாமல் பழங்களை மென்று சாப்பிடுவது மிக முக்கியம்.

4. இனிப்பு தேவைக்கு

  • நாட்டுச்சர்க்கரை
  • தேன் (அளவோடு)

5. உடல் சத்துக்கள் தரும் இயற்கை உணவுகள்

  • வெந்தயம்
  • கருவேப்பிலை
  • வெள்ளைப்பூண்டு
  • குழம்பில் வேகவைத்த மீன்

6. தினசரி உடற்பயிற்சி

  • நடைபயிற்சி
  • யோகா
  • லேசான ஏரோபிக் பயிற்சி

இவை நீர்க்கட்டியை மட்டும் அல்லாது, முழு ஹார்மோன் சமநிலையையும் சீராக்கும்.

இது எவ்வாறு உதவும்?

  • மாதவிடாய் சீர்கேடு குறையும்
  • வயிற்றுப் பகுதியில் தேங்கிய கொழுப்பு குறையும்
  • ஹார்மோன் சமநிலை சீரடையும்
  • மன அழுத்தம் குறையும்
  • கருத்தரிப்பு சாத்தியம் மேம்படும்
  • இன்சுலின் எதிர்ப்பு திறன் சரியாகும்

இறுதியாக..

சினைப்பை நீர்க்கட்டி என்பது பெண்களில் அதிகரித்து வரும் ஆரோக்கிய சவால். ஆனால் சரியான வாழ்க்கை முறை, உணவு பழக்கம், இயற்கை முறைகள் மூலம் இதை மருந்துகள் இல்லாமலேயே கட்டுப்படுத்தலாம் என நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர். இனிப்பு உணவுகளைத் தவிர்த்து, நார்ச்சத்து நிறைந்த பாரம்பரிய உணவுகளைப் பயன்படுத்தி, தினமும் உடற்பயிற்சி செய்வதன் மூலம் இந்த பிரச்சனை பெரிய அளவில் குறைக்க முடியும்.

பொறுப்பு துறப்பு: இந்த செய்தி பொதுத்தகவல்களை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டது. எந்த மருத்துவ ஆலோசனைக்காகவும் உங்கள் குடும்ப மருத்துவரை அல்லது பெண்கள் நல நிபுணரைக் அணுகுவது அவசியம்.

Read Next

குளிர்காலத்தில் யோனி வறட்சி பிரச்சனையா? அதற்கான காரணங்கள் மற்றும் நிர்வகிக்கும் குறிப்புகள் இதோ..

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

Ishvarya Gurumurthy

Ishvarya Gurumurthy

துணை ஆசிரியர்

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

    Dec 10, 2025 17:23 IST

    Published By : Ishvarya Gurumurthy

Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content