Fri Sep 11, 2026 | 10:19 PM IST

Doctor Verified

Varicose Veins பிரச்சனைக்கு எளிய தீர்வு — மருத்துவர் ஷர்மிகா வழங்கும் வழிகாட்டல்

நரம்பு சுருட்டல் (Varicose Veins) பிரச்சனைக்கு எளிய தீர்வுகளை மருத்துவர் ஷர்மிகா பகிர்ந்துள்ளார். தினசரி நடைபயிற்சி, உணவு பழக்கம், மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலம் இதை கட்டுப்படுத்துவது எப்படி என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

நரம்பு சுருட்டல் அல்லது Varicose Veins என்பது இன்றைய காலத்தில் நீண்ட நேரம் நின்று வேலை செய்வோர் மற்றும் அமர்ந்து பணிபுரிபோருக்குள் அதிகமாகக் காணப்படும் ஒரு சுகாதாரப் பிரச்சனை. இதை கவனிக்காமல் விட்டால், அது நீண்ட காலத்தில் கடுமையான நரம்பு வீக்கத்தையும், வலியையும் ஏற்படுத்தக்கூடும் என்று மருத்துவர் ஷர்மிகா எச்சரிக்கிறார்.

நரம்பு சுருட்டல் ஏற்படும் முக்கிய காரணங்கள்

மருத்துவர் ஷர்மிகா கூறுகையில், “ஒரே இடத்தில் நீண்ட நேரம் நின்று அல்லது அமர்ந்து பணியாற்றும் நபர்களுக்கு இரத்த ஓட்டம் பாதிக்கப்படுவது வழக்கம். இதனால் காலில் உள்ள நரம்புகள் வீங்க ஆரம்பிக்கின்றன. இதுவே Varicose Veins பிரச்சனையின் தொடக்கம்,” என தெரிவித்தார்.

மேலும், மரபணு காரணம், உடல் எடை அதிகரிப்பு, கர்ப்ப காலம், இரத்த அழுத்தம், நீண்ட நேரம் காலில் நிற்கும் பழக்கம் போன்றவை கூட இதற்கு காரணமாக இருக்கலாம் என அவர் விளக்குகிறார்.

artical  - 2025-10-08T123454.932

தினசரி நடைபயிற்சி மிக முக்கியம்

மருத்துவர் கூறுகையில், “தினமும் குறைந்தது 30 நிமிடங்கள் நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டும். தினசரி இயலாதவர்கள் வாரத்திற்கு குறைந்தது 5 நாட்கள் இந்த நடைபயிற்சியை மேற்கொண்டால், இரத்த ஓட்டம் சீராகி, நரம்பு சுருட்டல் குறையலாம்,” என அறிவுறுத்தினார்.

இந்த பழக்கம் உடல் முழுவதும் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, இதய ஆரோக்கியத்தையும், உடல் எடையையும் கட்டுப்படுத்த உதவும் எனவும் அவர் கூறினார்.

Video Link: https://youtu.be/NJT2BM2y6Xc

உறங்கும் முறை மற்றும் வீட்டு பராமரிப்பு

மருத்துவர் ஷர்மிகா பரிந்துரைப்படி, இரவில் உறங்கும்போது காலின் கீழ் தலையணை வைத்து தூங்குவது நன்மை பயக்கும். இது இரத்த ஓட்டத்தை மேல்நோக்கி எளிதாக அனுப்புவதற்கு உதவுகிறது.

அதேபோல், பலர் காலுக்கு எண்ணெய் தடவுவது வழக்கம். ஆனால், “எண்ணெய் தடுக்கும் போது, எப்போதும் மேல் நோக்கி (காலின் தசைகளை நோக்கி) தடவ வேண்டும். கீழ் நோக்கி தடவுவது இரத்த ஓட்டத்தை தடுக்கக்கூடும்,” என அவர் எச்சரிக்கிறார்.

இந்த பதிவும் உதவலாம்: குடல் ஆரோக்கியத்திற்கு இந்த உணவுக்கு பதில் நீங்க மாற்ற வேண்டிய உணவுகள்.. நிபுணர் விளக்கம்

உணவில் கவனம் அவசியம்

Varicose Veins பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள், நீர்ச்சத்து, நார்ச்சத்து, புரதச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டும் என மருத்துவர் ஷர்மிகா கூறுகிறார். இது இரத்த ஓட்டத்தை சீராக வைக்கவும், நரம்பு சுருட்டலை குறைக்கவும் உதவுகிறது.

அதே நேரத்தில், குளிர்ச்சியான உணவுகள், ஆழ் வறுத்த உணவுகள், அதிக உப்பு மற்றும் எண்ணெய் பொருட்களை தவிர்க்க வேண்டும். இவை நரம்பு வீக்கத்தை அதிகரிக்கக்கூடும்.

artical  - 2025-10-08T123340.545

தவிர்க்க வேண்டிய பழக்கங்கள்

* நீண்ட நேரம் அமர்ந்து இருப்பது

* நீண்ட நேரம் நிற்கும் பழக்கம்

* உடல் எடை அதிகரிப்பு

* உடற்பயிற்சி இல்லாமை

இவை அனைத்தும் நரம்பு சுருட்டலுக்கு வழிவகுக்கும் என மருத்துவர் ஷர்மிகா கூறுகிறார். எனவே, அலுவலகங்களில் வேலை செய்பவர்கள் சில நிமிடங்களுக்கு எழுந்து நடந்து வருவது அல்லது காலை நீட்டி ஓய்வெடுப்பது நல்லது.

இறுதியாக..

நரம்பு சுருட்டல் (Varicose Veins) என்பது மருந்துகளால் மட்டுமே குணமடையாது. சரியான வாழ்க்கை முறை, உடற்பயிற்சி, உணவு பழக்கம் ஆகியவை இதை கட்டுப்படுத்தும் முக்கியமான அம்சங்கள். மருத்துவர் ஷர்மிகாவின் ஆலோசனைகளைப் பின்பற்றுவதன் மூலம் இதன் பாதிப்பை குறைத்து, வாழ்க்கை தரத்தை மேம்படுத்தலாம்.

Disclaimer: இந்தக் கட்டுரை பொதுத் தகவல் நோக்கத்திற்காக மட்டுமே. இதில் உள்ள ஆலோசனைகளை நீங்கள் பின்பற்றுவதற்கு முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது நிபுணரை அணுகி ஆலோசனை பெறவும்.

Read Next

கால்சியம் குறைபாட்டால் தசை விறைப்பு ஏற்படுமா? மருத்துவர் தரும் விளக்கம்

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

Ishvarya Gurumurthy

Ishvarya Gurumurthy

துணை ஆசிரியர்

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

    Oct 08, 2025 12:39 IST

    Published By : Ishvarya Gurumurthy

Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content