Fri Sep 11, 2026 | 11:08 PM IST

Doctor Verified

குளிர்காலத்தில் செம்பருத்தி டீ குடிக்கலாமா? நிபுணர் சொல்லும் உண்மை!

Hibiscus tea benefits: குளிர்காலத்தில் செம்பருத்தி தேநீர் குடிப்பது நல்லதா? அதன் ஆரோக்கிய நன்மைகள், நோய் எதிர்ப்பு சக்தி உயர்வு, செரிமான ஆதரவு மற்றும் நிபுணர் ஆலோசனைகள் குறித்து தமிழில் அறிந்து கொள்ளுங்கள்.

இயற்கை மனித உடலுக்குத் தேவையான பல மருத்துவ மூலிகைகளை பழங்கள், இலைகள், பட்டைகள் மற்றும் பூக்கள் வடிவில் அருளியுள்ளது. வேப்பிலை, அசோகப் பட்டை போலவே, சில பூக்களும் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அவற்றில் முக்கியமான ஒன்றாக கருதப்படுவது செம்பருத்தி பூ.

பொதுவாக கூந்தல் மற்றும் தோல் பராமரிப்பில் அதிகம் பயன்படுத்தப்படும் செம்பருத்தி பூ, தற்போது மூலிகை தேநீர் வடிவிலும் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக குளிர்காலத்தில் செம்பருத்தி தேநீர் குடிப்பது பாதுகாப்பானதா? நன்மை தருமா? என்ற கேள்விகளுக்கு விளக்கம் அளித்துள்ளார் மனாஸ் மருத்துவமனை மற்றும் டயட் மந்த்ரா கிளினிக்கின் உணவியல் நிபுணர் காமினி குமாரி.

குளிர்காலத்தில் செம்பருத்தி டீ குடிப்பது பாதுகாப்பானதா?

உணவியல் நிபுணர் காமினி குமாரியின் கூற்றுப்படி,
குளிர்காலத்தில் செம்பருத்தி பூ தேநீர் குடிப்பது முழுமையாக பாதுகாப்பானது. செம்பருத்தி பூவில் உள்ள ஆக்ஸிஜனேற்றங்கள், பாக்டீரியா எதிர்ப்பு தன்மைகள் - குளிர்காலத்தில் ஏற்படும் பல உடல்நலப் பிரச்சனைகளிலிருந்து உடலை பாதுகாக்க உதவுகின்றன. மேலும், நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும் இயற்கை பானமாக இது செயல்படுகிறது.

குளிர்காலத்தில் செம்பருத்தி டீ தரும் முக்கிய நன்மைகள்

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு

செம்பருத்தி பூக்களில் உள்ள சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றங்கள், உடலில் சேரும் ஃப்ரீ ரேடிக்கல்களை நீக்குகின்றன. இதனால் குளிர்காலத்தில் அடிக்கடி வரும் சளி, இருமல், தொண்டை வலி போன்ற பிரச்சனைகள் குறைகின்றன.

செரிமானத்தை சீராக்கும்

குளிர்காலத்தில் தண்ணீர் குறைவாக குடிப்பதால் மலச்சிக்கல், அஜீரணம் போன்ற பிரச்சனைகள் அதிகரிக்கின்றன. செம்பருத்தி தேநீர் குடிப்பது செரிமானத்தை தூண்டும் மற்றும் வயிற்றை லேசாக வைத்திருக்க உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: குளிர்கால நோய்களுக்கு இயற்கை கவசம்.. நட்சத்திர சோம்பு டீ.!

எடை இழப்புக்கு துணை

எடை குறைக்க முயற்சிப்பவர்களுக்கு செம்பருத்தி தேநீர் சிறந்த மூலிகை பானம். இது மெட்டபாலிசத்தை தூண்டும், கூடுதல் கலோரிகளை எரிக்க உதவும், உணவுக்கு ஒரு மணி நேரத்திற்குப் பிறகு குடிப்பது நல்ல பலனை தரும்.

உடலை நீரேற்றமாக வைத்திருக்கும்

குளிர்காலத்தில் தாகம் குறைவாக உணரப்படுவதால் நீரிழப்பு ஏற்படலாம். செம்பருத்தி தேநீர் உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது.

செம்பருத்தி பூ தேநீர் தயாரிக்கும் முறை

தேவையானவை:

  • தண்ணீர் – 1 பெரிய கப்
  • புதிய அல்லது உலர்ந்த செம்பருத்தி பூ – 2
  • தேன் – தேவைக்கேற்ப
  • எலுமிச்சை – விருப்பப்படி

செய்முறை:

  • தண்ணீரை கொதிக்க வைக்கவும்
  • செம்பருத்தி பூக்களை உடைத்து சேர்க்கவும்
  • தண்ணீர் பாதியாகும் வரை காய்ச்சவும்
  • வடிகட்டி, தேன் மற்றும் எலுமிச்சை சேர்த்து சூடாக குடிக்கவும்

இறுதியாக..

செம்பருத்தி தேநீர் என்பது குளிர்காலத்திற்கு ஏற்ற, இயற்கையான, பாதுகாப்பான மூலிகை பானமாகும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு, செரிமானம், எடை கட்டுப்பாடு மற்றும் உடல் நீரேற்றம் ஆகியவற்றிலும் இது பெரும் பங்காற்றுகிறது.

Disclaimer: இந்தக் கட்டுரை பொதுவான தகவலுக்காக மட்டுமே. நீங்கள் தினசரி மருந்து உட்கொள்பவராக இருந்தால், நீண்டநாள் உடல்நலப் பிரச்சனைகள் இருந்தால், செம்பருத்தி தேநீர் குடிப்பதற்கு முன் மருத்துவர் அல்லது உணவியல் நிபுணரை ஆலோசிப்பது அவசியம்.

Read Next

குளிர்கால நோய்களுக்கு இயற்கை கவசம்.. நட்சத்திர சோம்பு டீ.!

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

Ishvarya Gurumurthy

Ishvarya Gurumurthy

துணை ஆசிரியர்

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

    Dec 22, 2025 08:42 IST

    Published By : Ishvarya Gurumurthy

Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content