Sat Sep 12, 2026 | 12:05 AM IST

இந்த தெரு உணவுகளை சாப்பிட்டாலும் வெயிட் ஏறாது! எந்த கவலையும் இல்லாம சாப்பிடுங்க

Top healthy indian street foods you can enjoy guilt-free: சில இந்திய தெரு உணவுகள் உடல் எடையை அதிகரிக்கலாம். இதன் காரணமாக, தெரு உணவுகள் சாப்பிடுவதை பலரும் மறுக்கின்றனர். எனினும் சில தெரு உணவுகளை உட்கொள்வதன் மூலமும் உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்கலாம். இதில் எடையை அதிகரிக்காத தெரு உணவுகளைக் காணலாம்.

Top healthy indian street foods you can enjoy guilt-free: இன்றைய காலத்தில் பலரும் துரித உணவுகள், பதப்படுத்தப்பட்ட மற்றும் அதிக கொழுப்பு நிறைந்த உணவுகள் போன்ற ஆரோக்கியமற்ற உணவுகளையே அதிகம் விரும்புகின்றனர். இதன் காரணமாக, உடல் எடை அதிகரிப்பு, இதய நோய் மற்றும் நீரிழிவு நோய் உள்ளிட்ட பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளைச் சந்திக்க நேரிடலாம். இந்நிலையில் பலரும் தெரு உணவுகளை விரும்பிட விரும்புகின்றனர். ஆனால், இதில் பலருக்கும் உடல் எடை அதிகரிக்கும் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படலாம். இருப்பினும், தெரு உணவுகளை சாப்பிடவே தயங்குகின்றனர்.

பொதுவாக, பெரும்பாலானோர் சமோசா, பப்ஸ், பானி பூரி, பேல் பூரி மற்றும் இன்னும் மற்ற சில சுவையான தெரு உணவுகளைச் சாப்பிட விரும்புகின்றனர். எனினும், இது தயக்கத்துடன் முழு திருப்தி இல்லாமல் சாப்பிடுவர். இந்நிலையில் சில தெரு உணவுகள் எந்தவித தயக்கமும் இல்லாமல், உடல் எடை அதிகரிக்கும் என்ற தயக்கமும் இல்லாமல் சாப்பிடலாம். இதில் எடையை அதிகரிக்காத சில தெரு உணவுகளைக் காணலாம்.

தோல் மருத்துவர் மற்றும் அழகு சாதன நிபுணர் டாக்டர் பிரியங்கா ரெட்டி தோல் தோல் தொடர்பான பல்வேறு தலைப்புகளைப் பற்றி பேசுவது மட்டுமல்லாமல், ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமான உணவு சமையல் குறிப்புகளைப் பற்றியும் பகிர்ந்து வருகிறார். அவர் அன்றாட உணவில் சேர்க்கக்கூடிய கலோரி மற்றும் உடல் ஆரோக்கியத்தின் அடிப்படையில், சில தெரு உணவுகளுக்கு அளவீடுகளை மதிப்பிட்டு வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அது குறித்தும், எந்தெந்த தெரு உணவுகளைச் சாப்பிடலாம் என்பது குறித்தும் காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Pori Mixture: வெறும் பொரி சாப்பிட்டு போர் அடிக்குதா? அப்போ இப்படி செஞ்சி சாப்பிடுங்க!

ஆரோக்கியமான தெரு உணவுகள்

சன்னா சாட்

பொதுவாக கொண்டைக்கடலை புரதம் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்த நல்ல மூலமாகும். சில மசாலாப் பொருட்கள் தக்காளி, வெங்காயம், வெள்ளரிக்காய் மற்றும் மிளகாய் போன்றவற்றைச் சேர்த்து இது தயார் செய்யப்படுகிறது. இந்த சன்னா சாட் ஆனது ஊட்டச்சத்து மற்றும் சுவையின் ஆரோக்கியமான கலவையாகும்.

பானி பூரி

சரியான முறையில் சுகாதாரமாக தயாரிக்கப்படும் பானி பூரி ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததாகும். மேலும் இது செரிமானத்திற்கு நல்லது. கூடுதலாக நீரேற்ற அளவை மேம்படுத்துகிறது. இந்த பூரியின் மாவில் நார்ச்சத்துக்கள் உள்ளது. மேலும் இதில் சேர்க்கப்படும் தண்ணீர், புளி, புதினா மற்றும் சீரகத்தின் கலவை செரிமான நொதிகளைத் தூண்டி, வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. எனினும், அசுத்தமான தண்ணீரைப் பயன்படுத்துவதால் தொற்று அபாயம் ஏற்படலாம். எனவே வீட்டில் சுகாதாரமான முறையில் தயாரித்து சாப்பிடலாம். இதற்கு நிபுணர் ரேங்க் 7 ஆக குறிப்பிட்டுள்ளார்.

பாவ் பஜ்ஜி

இது ஒரு பிரபலமான இந்திய தெரு உணவாகும். இதில் உருளைக்கிழங்கு, தக்காளி, பட்டாணி, குடைமிளகாய் மற்றும் வெங்காயம் போன்றவற்றைக் கொண்டு தயார் செய்யப்படுவதாகும். ரொட்டியானது மசாலா பொருள்களால் சுவையூட்டப்பட்டு, வெண்ணெய் தடவி பரிமாறப்படும். இதற்கு நிபுணர் ரேங்க் 5 குறிப்பிட்டுள்ளார்.

இந்த பதிவும் உதவலாம்: குடல் ஹெல்த்தியா இருக்க மழைக்காலத்தில் நீங்க சாப்பிடக்கூடாத உணவுகள்

பேல் பூரி

இந்த பிரபலமான சிற்றுண்டி தேர்வில் பொறி, துண்டுகளாக்கப்பட்ட காய்கறிகள், சிறிது புளி மற்றும் சில மசாலாப் பொருட்களைக் கொண்டு தயார் செய்யப்படுகிறது. பேல் பூரியில் குறைந்த கலோரிகள் உள்ளன. அதே சமயம், இதில் சேர்க்கப்படும் காய்கறிகள் மற்றும் மசாலாப் பொருட்கள் அவற்றின் சொந்த ஊட்டச்சத்து மதிப்பைக் கொண்டுள்ளன. இது விரைவான மற்றும் மொறுமொறுப்பான ஆரோக்கியமான தெரு உணவாக அமைகிறது. இது உணவியல் நிபுணர்களால் பரிந்துரைக்கப்படலாம். எனினும், சாஸ் சேர்ப்பதைக் குறைப்பதை நல்லது. பேல் பூரிக்கு ரேங்க் 9 ஆக குறிப்பிட்டார்.

கோதுமை மாவு மோமோஸ்

கோதுமை மாவு கொண்டு தயார் செய்யப்படும் மோமோஸ் சிற்றுண்டிக்கு நிபுணர் ரேங்க் 10 பரிந்துரைக்கிறார். மைதா மாவில் தயாரிக்கப்படுவதற்கு ரேங்க் 5 பரிந்துரைக்கிறார். இது எல்லோருக்கும் பொதுவான சிற்றுண்டியாக அமைகிறது. கோதுமை மாவு மோமோஸில் உள்ள அதிக நார்ச்சத்துக்கள், செரிமானத்தை மேம்படுத்தவும், மலச்சிக்கலைத் தடுக்கவும் உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: கோடையில் செரிமானம் மேம்பட.. இந்த தெருவோர உணவுகளை சாப்பிடாதீர்கள்..

Image Source: Freepik

Read Next

நைட் தூங்கும் முன் டேட்ஸ் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? இது தெரிஞ்சா நீங்களும் சாப்பிடுவீங்க

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

கௌதமி சுப்ரமணி

கௌதமி சுப்ரமணி

இளைய உள்ளடக்க எழுத்தாளர்

நான் கௌதமி சுப்ரமணியம், டிஜிட்டல் மீடியாவில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறேன். ஆரோக்கியம், உணவு, உடற்பயிற்சி, உடல் நலம், அழகு குறிப்பு போன்றவை தொடர்பான விவரங்களை ஆராய்ந்து கட்டுரைகளை எழுதி வருகிறேன். நான் எழுதும் ஒவ்வொரு பகுதியும் ஈர்க்கக்கூடியதாக இருப்பதை உறுதிசெய்து, விவரங்களுக்கு ஒரு தீவிரமான பார்வையை வளர்த்துக்கொண்டேன். மக்களுக்குத் தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான இலக்கை மேம்படுத்துவது எனது நோக்கம் ஆகும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.


    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content