Health Benefits of Muskmelon: கோடையின் தாகத்தை தீர்க்கும் மிகச்சிறந்த பழமான முலாம் பழம், அனைவராலும் விரும்பி சாப்பிடக்கூடிய பழமாக திகழ்கிறது. இந்த பழத்தில் பல்வேறு நன்மைகள் நிறைந்துள்ளன.
இதில் வைட்டமின் சி, பி1, பி6, கே உள்ளன. மேலும் பொட்டசியம், காப்பர், மெக்னீசியம் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இந்த பழத்தின் உள்ள ஆரோக்கிய நன்மைகள் குறித்து இந்த பதிவில் காண்போம்.
முக்கிய கட்டுரைகள்
இதையும் படிங்க: Benefits of mango juice: மாம்பழ ஜூஸில் இத்தனை நன்மையா?
முலாம் பழத்தில் உள்ள நன்மைகள் என்ன?
நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும்
இந்த பழம் இரத்த சர்க்கடை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. இதனை தினமும் அளவோடு எடுத்துக்கொள்வது நீரிழிவு நோயை கட்டுக்குள் வைத்து ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வழிவகுக்க உதவும்.
நீரேற்றமாக வைக்கும்
முலாம் பழத்தில் அதிக நீர்ச்சத்து உள்ளது. இது உடலை நீரேற்றமாக வைத்திருக்கு உதவுகிறது. குறிப்பாக கோடை காலத்தில் இந்த பழம் நல்ல நன்மைகளை தருகிறது.
எடை இழப்பு
நீங்கள் எடை இழப்பு பயணத்தை மேற்கொள்கிறீர்கள் ஆனால், உங்கள் டையட் உணவில் முலாம் பழத்தை இணைத்துக்கொள்ளுங்கள். இது உங்கள் உடல் எடையை குறைக்கவும், நிர்வகிக்கவும் உதவுகிறது. ஏனெனில் இதில் குறைந்த அளவே கொழுப்பு உள்ளது. மேலும் இவை நீண்ட நேரத்திற்கு உங்கள் வயிறை முழுமையாக வைத்திருக்கும்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்
இந்த பழத்தில் உள்ள வைட்டமின் சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். இது வெள்ளை இரத்த அணுக்களை அதிகரித்து நோயை எதிர்த்து போராடும் பண்புகளை அதிகப்படுத்தும். இதனால் நோய் தொற்று ஏற்படமால இது பாதுகாக்கிறது.
இதையும் படிங்க: Benefits Of Coconut Water: தேங்காய் தண்ணீரில் இத்தனை நன்மைகள் உள்ளதா?
இதய நோய் அபாயத்தை குறைக்கும்
முலாம் பழத்தில் உள்ள அடினோசின் இரத்தத்தை மென்மையாக்கும். இது இதயம் சார்ந்த நோயில் இருந்து நம்மை பாதுகாக்கும். இதனால் இதய நோய் அபாயம் குறைகிறது. இதனை அளவோடு உணவில் சேர்த்துக்கொள்வது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும்.
நினைவில் கொள்ளுங்கள்:
முலாம் பழத்தில் அதிக நன்மைகள் இருந்தாலும், அதனை அளவோடு எடுத்துக்கொள்வது நல்லது. இல்லையெனில் உங்கள் ஆரோக்கியத்தில் எதிர்மறையான தாக்கத்தை இது ஏற்படுத்தும். ஆகையால் இது குறித்து உண்மை தன்மையை முழுமையாக அறிய சுகாதார நிபுணர்களை அணுகுவது நல்லது.
Image Source: Freepik