Fri Sep 11, 2026 | 11:08 PM IST

Doctor Verified

பெண்களின் தலைமுடி ஆரோக்கியத்தை மேம்படுத்தும் முக்கிய சப்ளிமெண்ட்கள் – டாக்டர்கள் பரிந்துரைக்கும் வழிமுறை!

முடி உதிர்தல், வறட்சி, உடைப்பு போன்ற பிரச்சனைகளால் அவதிப்படும் பெண்களுக்கு வைட்டமின் D, B12, பயோட்டின், இரும்பு மற்றும் துத்தநாகம் போன்ற சப்ளிமெண்ட்கள் எவ்வாறு உதவுகின்றன என்பதை தெரிந்து கொள்ளுங்கள். ஆரோக்கியமான தலைமுடிக்கான மருத்துவர் பரிந்துரைகள் இதோ!

பெண்களின் தலைமுடி அழகு மட்டுமல்ல, அது உடல்நலத்தின் பிரதிபலிப்பு. ஆனால் இன்றைய வேகமான வாழ்க்கை முறை, தூக்கக் குறைபாடு, மனஅழுத்தம் மற்றும் உணவு பழக்க மாற்றங்கள் காரணமாக முடி உதிர்தல், வறட்சி மற்றும் உடைப்பு போன்ற பிரச்சனைகள் அதிகரித்து வருகின்றன.

இந்த பிரச்சனைகளிலிருந்து நிவாரணம் பெற பெண்கள் ஆரோக்கியமான உணவு, போதுமான தண்ணீர், மற்றும் ஒழுங்கான வாழ்க்கை முறையை பின்பற்றுவது முக்கியம். அதோடு, சப்ளிமெண்ட்கள் எனப்படும் ஊட்டச்சத்து மாத்திரைகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன. நொய்டாவின் மெட்ரோ மருத்துவமனை தோல் மருத்துவ மூத்த ஆலோசகர் டாக்டர் ஆலியா அப்பாஸ் ரிசிவி, பெண்களின் தலைமுடிக்கு தேவையான முக்கிய சப்ளிமெண்ட்களை பற்றி விளக்குகிறார்.

பெண்களின் கூந்தலுக்கு தேவையான முக்கிய சப்ளிமெண்ட்கள்

1. வைட்டமின் D மற்றும் B12 சப்ளிமெண்ட்கள்

வைட்டமின் D மற்றும் B12 தலைமுடி வேர்களை வலுப்படுத்தி, முடி உதிர்தலை தடுக்கின்றன. இவை தலைச்சருமத்தின் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, புதிய முடி வளர்ச்சியை தூண்டும். இந்த வைட்டமின்களின் குறைபாடு, பொடுகு மற்றும் முடி உதிர்தலுக்கான முக்கிய காரணமாகும்.

2. பயோட்டின் (Vitamin B7)

பயோட்டின் தலைமுடிக்கான "அழகின் வைட்டமின்" என அழைக்கப்படுகிறது. இது கெரட்டின் உற்பத்தியை ஊக்குவித்து முடி வேர்களை வலுப்படுத்துகிறது. இது மட்டும் இல்லாமல், பயோட்டின் உடலில் உள்ள ஆற்றல் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தி, முடி பிரச்சனைகளை குறைக்கிறது.

3. இரும்புச் சப்ளிமெண்ட்

பெண்கள் பெரும்பாலும் இரத்தச்சோகையால் (Anemia) பாதிக்கப்படுகிறார்கள். இதனால் மயிர்க்கால்களுக்கு ஆக்ஸிஜன் கிடைப்பது குறைந்து, முடி உதிர்தல் மற்றும் மெல்லிய முடி ஏற்படுகிறது. இரும்புச் சத்துக்கள் உள்ள சப்ளிமெண்ட்கள் முடி வேர்களுக்கு தேவையான ஆக்ஸிஜனை வழங்கி, வளர்ச்சியை ஊக்குவிக்கின்றன.

இந்த பதிவும் உதவலாம்: இந்த இரண்டு உணவுகளைச் சேர்த்து சாப்பிட்டா.. ஊட்டச்சத்து குறைபாடு பிரச்சனையே இருக்காது

4. துத்தநாகம் (Zinc) மற்றும் வைட்டமின் E

துத்தநாகம் முடி வேர்களை புதுப்பிக்கவும், வைட்டமின் E முடியை வெளிச்சமூட்டவும் உதவுகிறது. இவை இரண்டும் இணைந்து முடி வறட்சியையும் உடைப்பையும் தடுக்கின்றன.

முடி ஆரோக்கியத்திற்கான டாக்டர் ஆலோசனை

“பெண்கள் தங்களது உடல்நலத்திற்கு ஏற்ப சப்ளிமெண்ட்களை எடுத்துக்கொள்ள வேண்டும். எந்த மாத்திரையையும் மருத்துவரின் ஆலோசனை இன்றி எடுத்துக்கொள்ளக் கூடாது” என்று டாக்டர் கூறுகிறார். அதாவது, உங்கள் முடி பிரச்சனைகளுக்கான காரணம் சத்துக் குறைவாக இருந்தாலும், மருத்துவரின் வழிகாட்டுதலுடன் மட்டுமே சப்ளிமெண்ட் தொடங்குவது பாதுகாப்பானது.

இறுதியாக..

ஆரோக்கியமான கூந்தலைப் பெற விரும்பும் பெண்கள் தங்கள் உணவில் துத்தநாகம், இரும்பு, பயோட்டின், வைட்டமின் C, D, E மற்றும் B12 போன்ற சத்துக்களை சேர்க்கலாம். இவை முடி உதிர்தலை குறைத்து, வேர்களை வலுப்படுத்தி, கூந்தலுக்கு இயற்கையான ஒளிவீச்சை வழங்கும். ஆனால் நினைவில் கொள்ளுங்கள், மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த சப்ளிமெண்டையும் தொடங்க வேண்டாம்.

Disclaimer: இந்த கட்டுரை மருத்துவ தகவலுக்காக மட்டுமே. இதில் உள்ள தகவல்கள் பொதுவான அறிவாகும். சப்ளிமெண்ட் அல்லது மருந்துகளை எடுத்துக்கொள்வதற்கு முன் உங்கள் மருத்துவரை அல்லது நிபுணரை அணுகவும்.

Read Next

தினமும் சருமத்திற்கு தேனைப் பயன்படுத்துவது நல்லதா? நிபுணர் சொல்வது என்ன?

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

Ishvarya Gurumurthy

Ishvarya Gurumurthy

துணை ஆசிரியர்

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

    Oct 20, 2025 21:40 IST

    Published By : Ishvarya Gurumurthy

Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content