நம்ம உடலின் இரண்டாவது மூளை என்று சொல்லப்படுவது “குடல் (Gut)”. இதன் ஆரோக்கியம் நம்ம செரிமானம், ஹார்மோன் சமநிலை, மனநிலை மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி ஆகிய அனைத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது.
அந்த அளவுக்கு முக்கியமான குடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க, குடல்நோய் நிபுணர் டாக்டர் பால் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் 10 சிறந்த “மைக்ரோ ஹேபிட்ஸ்” (Micro Habits) — சிறிய ஆனால் பெரிய தாக்கம் ஏற்படுத்தும் தினசரி பழக்கங்களை பகிர்ந்துள்ளார்.
குடல் ஆரோக்கியத்திற்கான நல்ல பழக்கங்கள்
ஒவ்வொரு முறையும் 20 முதல் 30 முறை மென்று சாப்பிடுங்கள்
மென்று சாப்பிடுவது தான் செரிமானத்தின் முதல் படி. உணவை நன்கு மென்று சாப்பிடும் போது செரிமான சாறு சுரப்பு அதிகரித்து, வயிற்று வீக்கம் குறைகிறது. இதனால் சத்துக்களும் உடலில் முழுமையாக உறிஞ்சப்படும்.
வயிறு 80% நிரம்பும் வரை மட்டுமே சாப்பிடுங்கள்
அதிகமாக சாப்பிடுவது குடல் மீது அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. 80% நிறைவு வரை மட்டுமே சாப்பிடும் பழக்கம் செரிமானத்தை எளிதாக்கி, உடல் அழற்சியையும் குறைத்து, எடை கட்டுப்பாட்டையும் மேம்படுத்தும்.
காலை 10 நிமிடம் சூரிய ஒளி பெறுங்கள்
காலை எழுந்தவுடன் 10 நிமிடம் சூரிய ஒளி பெறுவது விட்டமின் D அளவையும், மனநிலையையும், உடல் நேர அச்சையும் (Circadian rhythm) சீராக்கும். இது செரிமான சக்கரத்தை சீராக வைத்திருக்கும் ஒரு இயற்கை வழி.
உணவுக்குப் பிறகு 10 நிமிடம் நடைப்பயிற்சி
உணவுக்குப் பிறகு சிறிய நடைப்பயிற்சி செய்வது செரிமானத்தை விரைவாக செய்யவும், இரத்த சர்க்கரையை சீராக்கவும், சோர்வை தடுக்கவும் உதவுகிறது.
வாரத்தில் மூன்று முறை புளிப்புச் சத்துகள் உள்ள உணவுகளைச் சேர்க்கவும்
தயிர், தோசை மாவு, கிம்ச்சி, கெஃபிர் போன்ற புளித்த உணவுகளில் உள்ள ப்ரோபையாட்டிக்ஸ் குடல் நுண்ணுயிரிகளை சீராக்கி, குடல் பாக்டீரியா சமநிலையை பாதுகாக்க உதவுகிறது.
12 மணி நேர உணவு
காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை உணவு. இது குடலுக்கு ஓய்வை அளிக்கிறது. குடல் டிடாக்ஸ் (Detox) மற்றும் புதுப்பிக்கும் செயல்களை இரவில் மேற்கொள்ள முடியும்.
இந்த பதிவும் உதவலாம்: வயிறு உப்புசத்தை போக்கும் 10 அற்புத உணவுகள்.. டாக்டர் சௌரப் சேதி பரிந்துரை!
இரவு 11 மணிக்கு முன் தூங்குங்கள்
குடல் நுண்ணுயிரிகள் இரவில் சீரமைக்கப்படுகின்றன. தாமதமாக உறங்குவது செரிமானத்தை பாதித்து, அடுத்த நாள் பசியையும் மனநிலையையும் குலைக்கும். எனவே, 11 மணிக்கு முன் தூங்கும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்.
தினமும் 1 பழம் மற்றும் 3 வகை காய்கறிகள் சாப்பிடுங்கள்
பழங்கள் மற்றும் காய்கறிகள் நார்ச்சத்து, ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், மைக்ரோநியூட்ரியன்ட்கள் ஆகியவற்றால் நிறைந்தவை. இது குடல் நுண்ணுயிர்களுக்கு உணவாக இருந்து குடல் ஆரோக்கியத்தை பலமடங்கு உயர்த்தும்.
தினமும் 5 முதல் 10 பக்கங்கள் புத்தகம் படியுங்கள்
புத்தகம் படிப்பது மனதை அமைதியாக்கி, கவனம் மற்றும் நரம்பு அமைப்பை (Nervous System) சீராக்குகிறது. மன அழுத்தம் குறைந்தால், குடல் இயக்கமும் சிறப்பாக இருக்கும்.
தினமும் ஒரு மகிழ்ச்சி தரும் செயலைச் செய்யுங்கள்
சிரிப்பு, பிரார்த்தனை, இசை, அல்லது சூரிய ஒளி – எந்த ஒரு மகிழ்ச்சி தரும் செயலும் கார்டிசோல் (Cortisol) ஹார்மோனை குறைத்து, குடல் இயக்கத்தை சீராக்கும்.
மருத்துவர் கூற்று..
இந்த 10 சிறிய பழக்கங்கள் உங்கள் ஆரோக்கியத்தையும், மனநிலையையும், வாழ்க்கை தரத்தையும் மாற்றும். 2026 வரும் நேரத்துக்குள் – போலி உணவு, போலி மனிதர்கள், போலி வாக்குறுதிகள் எல்லாவற்றையும் விட்டு விட்டு, உண்மையான ஆரோக்கியத்தைத் தேடுங்கள் என்று டாக்டர் பால் கூறுகிறார்.
இறுதியாக..
குடல் ஆரோக்கியம் என்பது உடலின் அடித்தளம். சரியான உணவு பழக்கங்கள், தூக்க நேரம், சூரிய ஒளி, மற்றும் மகிழ்ச்சி நிறைந்த வாழ்க்கை ஆகியவை சேர்ந்து குடலை சீராக வைத்திருக்கும். டாக்டர் பால் கூறிய 10 பழக்கங்கள் வெறும் ஆரோக்கிய வழிமுறைகள் அல்ல, வாழ்க்கையை இயற்கையுடன் இணைக்கும் வழிகாட்டுதலாகும்.
Disclaimer: இந்தக் கட்டுரை மருத்துவ ஆலோசனை அல்ல. இதில் கூறப்பட்டுள்ள வழிமுறைகள் பொதுவான ஆரோக்கிய தகவல்களாகும். தனிப்பட்ட குடல் பிரச்சனைகள் அல்லது செரிமான குறைபாடுகள் இருந்தால், தகுந்த மருத்துவ நிபுணரிடம் ஆலோசனை பெறுவது அவசியம்.
தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.
How we keep this article up to date:
We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.
-
Current Version
Nov 07, 2025 15:10 IST
Published By : Ishvarya Gurumurthy