Fri Sep 11, 2026 | 09:32 PM IST

Doctor Verified

ஃபேட்டி லிவரைக் குறிக்கும் இந்த 8 அறிகுறிகளை புறக்கணிக்காதீங்க.. மருத்துவர் தரும் விளக்கம்

கொழுப்பு கல்லீரல் நோய் இருப்பது நம் உடலில் பல்வேறு அறிகுறிகளைத் தோன்றுகிறது. இதில் நாம் புறக்கணிக்கக்கூடாத கொழுப்பு கல்லீரல் நோயின் அறிகுறிகள் சிலவற்றைக் குறித்து மருத்துவர் பகிர்ந்துள்ளதைக் காணலாம்.

இன்றைய நவீன காலத்தில் மோசமான வாழ்க்கை முறை, உணவு முறை மற்றும் உடல் செயல்பாடுகள் இல்லாதது போன்றவை பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது. இதில் கொழுப்பு கல்லீரல் நோயும் அடங்குகிறது. பொதுவாக, கல்லீரலில் அதிகப்படியான கொழுப்பு சேரும்போது கொழுப்பு கல்லீரல் நோய் ஏற்படுகிறது. இது கல்லீரலின் செயல்பாட்டை சீர்குலைக்கக்கூடும். இதற்கு முக்கிய காரணமாக இருப்பது மக்கள் பின்பற்றக்கூடிய செயலற்ற வாழ்க்கை முறைகளும், சர்க்கரைகள் மற்றும் ஆரோக்கியமற்ற கொழுப்புகள் அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்வதும் அமைகிறது. இதன் காரணமாகவே, கொழுப்பு கல்லீரல் நோய் பரவல் அதிகரிக்கிறது.

இன்றைய கால சூழ்நிலையில், கொழுப்பு கல்லீரல் நோயானது உலகளவில் மில்லியன் கணக்கான மக்களை பாதிக்கிறது. இந்நோயை கட்டுப்படுத்தாவிட்டால், கொழுப்பு கல்லீரல் மிகவும் கடுமையான சிக்கல்களுக்கு முன்னேறலாம். இந்த வகை நோயைப் பொறுத்த வரை, ஆல்கஹால் அல்லாத ஸ்டீட்டோஹெபடைடிஸ் (NASH), கல்லீரல் ஃபைப்ரோஸிஸ், சிரோசிஸ் அல்லது சில சந்தர்ப்பங்களில் கல்லீரல் புற்றுநோய் போன்றவை கூட அடங்குகிறது. எனவே, கொழுப்பு கல்லீரல் நோயின் அறிகுறிகளை முன்கூட்டியே கண்டறிவது மிகவும் முக்கியமாகக் கருதப்படுகிறது. இதை ஆரம்பகால கண்டறிதலின் மூலம் பெரும் சேதத்தைத் தடுக்கலாம்.

இதில் நாம் புறக்கணிக்கக்கூடாத கொழுப்பு கல்லீரலின் 8 எச்சரிக்கை அறிகுறிகள் குறித்து எய்ம்ஸ், ஹார்வர்ட் மற்றும் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகங்களில் பயிற்சி பெற்ற இரைப்பை குடல் நிபுணரும், குடல் மருத்துவர் என்று பிரபலமாக அறியப்படும் டாக்டர் சௌரப் சேத்தி அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதைப் பற்றி இங்குக் காண்போம்.

இந்த பதிவும் உதவலாம்: Women Fatty Liver: பெண்களுக்கு கொழுப்பு கல்லீரல் இருக்கும்போது உடலில் தோன்று 5 அறிகுறிகள்!

கொழுப்பு கல்லீரல் நோயின் 8 எச்சரிக்கை அறிகுறிகள்

வயிற்று வலி மற்றும் வீக்கம்

"வயிற்று வலி மற்றும் மேல் வலது வயிற்றில் வீக்கம் போன்றவை கொழுப்பு கல்லீரல் நோயைக் குறிக்கலாம்" என்று மருத்துவர் சேத்தி கூறினார். இது பொதுவாக, கல்லீரல் கொழுப்பால் வீங்கியிருப்பதால் நிகழ்கிறது. இது வலி மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்தக்கூடும்.

எடை அதிகரிப்பு

"எதிர்பாராத எடை அதிகரிப்பு, குறிப்பாக வயிற்றைச் சுற்றி இருந்தால், கொழுப்பு கல்லீரல் நோயைக் குறிக்கலாம்" என்று டாக்டர் சேத்தி விளக்கினார். உடலில் திடீர் எடை அதிகரிப்பு ஆனது கல்லீரல் நோய்க்கான எச்சரிக்கை அறிகுறியாகக் கருதப்படுகிறது. இவை கல்லீரல் செயல்பாட்டில் உள்ள பிரச்சனையைக் குறிக்கலாம்.

தொடர்ச்சியான சோர்வு மற்றும் பலவீனம்

எல்லோரும் சில சமயங்களில் சோர்வை அனுபவிக்கும் அதே வேளையில், போதுமான ஓய்வு இருந்தபோதிலும் தொடர்ந்து சோர்வாகவும் பலவீனமாகவும் இருப்பது கல்லீரல் பிரச்சினைகளைக் குறிக்கலாம் என்று டாக்டர் சேதி கூறுகிறார். கல்லீரல் ஆற்றல் வளர்சிதை மாற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது, மேலும் செயலிழப்பு சோர்வுக்கு வழிவகுக்கும்.

அடர் நிற சிறுநீர் மற்றும் வெளிர் நிற மலம்

சிறுநீர் மற்றும் மல நிறத்தில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் கல்லீரல் செயலிழப்பைக் குறிக்கிறது. மேலும், அதிகப்படியான பிலிரூபின் காரணமாக அடர் நிற சிறுநீர் ஏற்படலாம், அதே நேரத்தில் வெளிர் நிற மலம் பித்தத்தின் பற்றாக்குறையைக் குறிக்கலாம், இது கல்லீரல் செயல்பாட்டின் பலவீனத்தின் அறிகுறியாகும்.

அதிக கொழுப்பின் அளவுகள்

அதிக கொழுப்பு காரணமாக, கொழுப்பு கல்லீரல் நோய் அதிகரித்து காணப்படுகிறது. உண்மையில், உயர்ந்த கொழுப்பின் அளவு கல்லீரல் செயல்பாட்டை மோசமாக்குகிறது மற்றும் இருதய பிரச்சினைகள் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கலாம். 

இந்த பதிவும் உதவலாம்: Fatty Liver.. ஆபத்தான நோய்களுக்கு வழிவகுக்கும் மறைமுக எதிரி.! மருத்துவர் விளக்கம்..

உயர் இரத்த சர்க்கரை அளவுகள்

இரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பது பெரும்பாலும் இன்சுலின் எதிர்ப்புடன் தொடர்புடையதாகும். இவ்வாறு, அதிகரித்த இரத்த சர்க்கரை கொழுப்பு கல்லீரலுடன் தொடர்புடைய வளர்சிதை மாற்றக் கோளாறுகளைக் குறிக்கிறது. மேலும், கொழுப்பு கல்லீரல் உள்ளவர்களில் இன்சுலின் எதிர்ப்பு பெரும்பாலும் காணப்படுகிறது என்று மருத்துவர் சேதி குறிப்பிடுகிறார்.

View this post on Instagram

A post shared by Saurabh Sethi MD MPH | Gastroenterologist (@doctor.sethi)

எளிதில் சிராய்ப்பு மற்றும் இரத்தப்போக்கு

கல்லீரல் இரத்த உறைதலுக்குத் தேவையான புரதங்களை உற்பத்தி செய்ய போராடுகிறது. இது மேம்பட்ட கொழுப்பு கல்லீரல் நோயுடன் ஏற்படலாம். இந்நிலையில், சிராய்ப்பு அல்லது நீடித்த இரத்தப்போக்குக்கான அதிகரித்த உணர்திறன் போன்றவை குறிப்பிடத்தக்க கல்லீரல் குறைபாட்டைக் குறிக்கலாம்.

மஞ்சள் காமாலை

மஞ்சள் காமாலை காரணமாக சருமம் மற்றும் கண்களில் மஞ்சள் நிறம் தோன்றுவது அடங்குகிறது. மேம்பட்ட கொழுப்பு கல்லீரல் நோயின் ஆபத்தான அறிகுறியாகும். இது கல்லீரலுக்கு உடனடி மருத்துவ உதவி தேவை என்பதைக் குறிக்கிறது.

இந்த அறிகுறிகளைப் பற்றி விழிப்புடன் இருப்பதன் மூலமும், நாம் உடனடியாக மருத்துவ உதவியை நாடுவதன் மூலமும், மீளமுடியாத கல்லீரல் பாதிப்பைத் தடுக்கலாம்.

பொறுப்புத்துறப்பு

இதில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. எனினும், தனிப்பட்ட தகவல்களைப் பெற விரும்புபவர்கள் அல்லது புதிய முயற்சிகளைக் கையாள விரும்புபவர்கள் எப்போதும் தகுதிவாய்ந்த நிபுணரை அணுகுவது நல்லது.

இந்த பதிவும் உதவலாம்: இந்த 3 அறிகுறிகளை புறக்கணிக்காதீர்கள்.. கொழுப்பு கல்லீரல் பிரச்னையாக இருக்கலாம்.!

Image Source: Freepik

Read Next

படிக்கும் போது தூக்கம் வருதா.? இத மட்டும் பண்ணுங்க.. தூக்கம் உடனே ஓடிடும்.!

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

கௌதமி சுப்ரமணி

கௌதமி சுப்ரமணி

இளைய உள்ளடக்க எழுத்தாளர்

நான் கௌதமி சுப்ரமணியம், டிஜிட்டல் மீடியாவில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறேன். ஆரோக்கியம், உணவு, உடற்பயிற்சி, உடல் நலம், அழகு குறிப்பு போன்றவை தொடர்பான விவரங்களை ஆராய்ந்து கட்டுரைகளை எழுதி வருகிறேன். நான் எழுதும் ஒவ்வொரு பகுதியும் ஈர்க்கக்கூடியதாக இருப்பதை உறுதிசெய்து, விவரங்களுக்கு ஒரு தீவிரமான பார்வையை வளர்த்துக்கொண்டேன். மக்களுக்குத் தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான இலக்கை மேம்படுத்துவது எனது நோக்கம் ஆகும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

    Nov 19, 2025 10:40 IST

    Published By : கௌதமி சுப்ரமணி

Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content