Sat Sep 12, 2026 | 12:05 AM IST

Expert

இதயம் முதல் மூளை ஆரோக்கியம் வரை.. இந்த நான்கு பழங்களுடன் நீங்க சேர்த்து சாப்பிட வேண்டியவை

பழங்களைத் தனியாக உண்பதற்கு பதிலாக, அதில் சில பொருள்களைச் சேர்ப்பது உடலுக்கு மிகுந்த நன்மை பயக்கும். இதில் எந்தக் கலவைகள் இயற்கை மூலப்பொருட்களைப் பயன்படுத்தி ஊட்டச்சத்தையும் ஒட்டுமொத்த நல்வாழ்வையும் மேம்படுத்துகின்றன என்பதைக் காணலாம்.

அன்றாட உணவில் ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த காய்கறிகள், பழங்கள், நட்ஸ் மற்றும் விதைகள் போன்றவற்றை எடுத்துக் கொள்வது அவசியமாகக் கருதப்படுகிறது. ஆனால் இன்றைய நவீன காலகட்டத்தில் ஆரோக்கியமான உணவு பழக்கத்தை பின்பற்றுவதையும், அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை எடுத்துக் கொள்வதையும்  மக்கள் பலரும் புறக்கணிக்கின்றனர்.  இதன் காரணமாக, அவர்கள் பல்வேறு உடல் அபாயங்களை சந்திக்கும் சூழல் ஏற்படுகிறது. எனினும் சரியான உணவு முறைகளை கையாள்வதன் மூலம் பல உடல்நல பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.

அவ்வாறு,  உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் பழங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.  எனினும் பழங்களை தனியாக உண்பதற்கு பதிலாக, அதில் சில பொருட்களை சேர்த்து சாப்பிடுவது கூடுதல் நன்மை பயக்கும்.  இதன் மூலம், உடலுக்கு தேவையான முக்கிய ஊட்டச்சத்துக்களை பெறலாம்.  இது மூளை ஆரோக்கியம், இதய செயல்பாடு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு போன்றவற்றிற்கு உதவுகிறது.

இந்நிலையில், பழங்களுடன் எந்தெந்த பொருட்களை சேர்த்து சாப்பிடலாம் என்பது குறித்து ஊட்டச்சத்து நிபுணர் தீப்ஷிகா ஜெயின் அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். நிபுணர் பகிர்ந்துள்ள நான்கு  பழக் கலவைகள் எளிமையான,  சுவையான மற்றும் பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டதாகும்.  இவை மூளையின் செயல்பாட்டை மேம்படுத்துவது முதல் இதய ஆரோக்கியத்தை  மேம்படுத்துவது வரை,  இயற்கையான பொருட்களை பயன்படுத்தி ஊட்டச்சத்து மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வை மேம்படுத்த உதவுகின்றன.

நான்கு சிறந்த உணவு கலவைகள்

ஊட்டச்சத்து நிபுணர் தனது பதிவில் குறிப்பிட்டதாவது, “ அனைவரும் கட்டாயம் சாப்பிட வேண்டிய நான்கு சிறந்த உணவு கலவைகள் இங்கே உள்ளன.  நீங்கள் ஆரோக்கியமாக இருப்பதற்கான சிறந்த உணவு கலவைகள்” என்று தனது தலைப்பில் குறிப்பிட்டுள்ளார்.

image

is-it-good-to-eat-only-fruits-for-a-week-here-are-the-health-effects-you-need-to-know-Main-1756047287696.jpg

அவுரிநெல்லி பழத்துடன் டார்க் சாக்லேட்

  • அவுரிநெல்லி பழம் மற்றும்  டார்க் சாக்லேட் இரண்டுமே பாலிஃபீனால்கள் நிறைந்ததாகும்.
  • இந்த கலவை அழற்சியை குறைக்கவும், மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும் என நிபுணர் கூறுகிறார்.
  • சரியான முறையில் டார்க் சாக்லேட்டை அவுரிநெல்லிப் பழத்துடன் சேர்ப்பது, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் ஒரு சிறந்த வழியாக கருதப்படுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: "Fruit Combinations" - எது நல்லது.? எது கெட்டது.? மருத்துவர் விளக்கம்..

ஆப்பிளுடன் இலவங்கப்பட்டை தூள்

  • நிபுணர் பரிந்துரைக்கும் மற்றொரு பயனுள்ள கலவையாக ஆப்பிளுடன் இலவங்கப்பட்டை தூள் சேர்ப்பது அமைகிறது.
  • ஆப்பிள்களில் கிளைசெமிக் குறியீடு குறைவாகவும்,  நார்ச்சத்துக்கள் அதிகமாகவும் இருப்பதால் இவை இரத்த சர்க்கரை அளவை சீராக பராமரிக்க உதவுகின்றன.
  • அதே சமயம், இலவங்கப்பட்டை இன்சுலின் உணர்திறனை மேம்படுத்த உதவுகிறது.

இது குறித்து நிபுணர் கூறியதாவது,”இந்த கலவை ஒருவரின் ரத்த சர்க்கரை மற்றும் நீரிழிவு நோயை சிறப்பாக நிர்வகிக்க உதவுகிறது. ஏனெனில் ஆப்பிள்களில் குறைந்த கிளைசெமி குறியீடு மற்றும் அதிக நார்ச்சத்துக்கள் உள்ளன. இலவங்கப்பட்டை உட்கொள்வது  உடலை இன்சுலினுக்கு அதிக உணர்திறன் கொண்டதாக மாற்றும்” என்று கூறினார்.

கொய்யா பழத்துடன் கிவி பழம்

  • கொய்யா மற்றும் கிவி பழங்களை ஒன்றாக சேர்த்து சாப்பிடுவது, உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுவதாக நிபுணர் கூறுகிறார்.
  • இந்த இரண்டு பழங்களிடமே வைட்டமின் சி நிறைந்துள்ளது.
  • எனவே இவை உடலில் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது என நிபுணர் பகிர்ந்துள்ளார்.

image

guava-leaves-health-benefits-1753686036222.jpg

View this post on Instagram

A post shared by Deepsikha Jain (@fries.to.fit)

மாதுளம்பழத்துடன் ஊறவைத்த சியா விதைகள்

  • மாதுளம்பழத்தில் ஆன்டி- ஆக்ஸிடன்ட்கள் நிறைந்து காணப்படுகின்றன.
  • மேலும் சியா விதைகள்,  ஒமேகா - 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த சிறந்த மூலமாகும்.
  • இவை இரண்டையும் ஒன்று சேர்ப்பது உடலுக்கு மிகுந்த நன்மை பயக்கும்.

இந்த நான்கு பழக்கலவைகளும் எளிமையானவை மட்டுமல்லாமல், உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த பழங்களை அதிக பயனுள்ள மற்றும் ஆரோக்கியத்தை மையமாகக் கொண்ட வழியில் அனுபவிக்கும் ஒரு சிறந்த தேர்வாக கருதப்படுகிறது.

பொறுப்புத்துறப்பு

இதில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. எனினும், தனிப்பட்ட தகவல்களைப் பெற விரும்புபவர்கள் அல்லது புதிய முயற்சிகளைக் கையாள விரும்புபவர்கள் எப்போதும் தகுதிவாய்ந்த நிபுணரை அணுகுவது நல்லது.

இந்த பதிவும் உதவலாம்: Fruits with chia seeds: சியா விதைகளுடன் இந்த பழங்களை சேர்த்து சாப்பிடுவது எவ்வளவு நல்லது தெரியுமா?

Image Source: Freepik

Read Next

குளிர்காலத்தில் கண் ஆரோக்கியத்தை காக்க ஒரு கிளாஸ் கேரட் ஜூஸ் போதும்!

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

கௌதமி சுப்ரமணி

கௌதமி சுப்ரமணி

இளைய உள்ளடக்க எழுத்தாளர்

நான் கௌதமி சுப்ரமணியம், டிஜிட்டல் மீடியாவில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறேன். ஆரோக்கியம், உணவு, உடற்பயிற்சி, உடல் நலம், அழகு குறிப்பு போன்றவை தொடர்பான விவரங்களை ஆராய்ந்து கட்டுரைகளை எழுதி வருகிறேன். நான் எழுதும் ஒவ்வொரு பகுதியும் ஈர்க்கக்கூடியதாக இருப்பதை உறுதிசெய்து, விவரங்களுக்கு ஒரு தீவிரமான பார்வையை வளர்த்துக்கொண்டேன். மக்களுக்குத் தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான இலக்கை மேம்படுத்துவது எனது நோக்கம் ஆகும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

    Dec 23, 2025 13:28 IST

    Published By : கௌதமி சுப்ரமணி

Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content