Expert

"Fruit Combinations" - எது நல்லது.? எது கெட்டது.? மருத்துவர் விளக்கம்..

பழங்களுடன் பால், காய்கறி, தானியங்கள், மாமிசம் சேர்த்துச் சாப்பிடுவது நல்லதா? தவறான காம்பினேஷன்கள் உடல் நலத்திற்கு ஆபத்து. எந்த பழக் கலவைகள் பாதுகாப்பானவை, எவை தவிர்க்கப்படவேண்டும் என்பதை ஆயுர்வேத நிபுணர் விளக்குகிறார்.
  • SHARE
  • FOLLOW
"Fruit Combinations" - எது நல்லது.? எது கெட்டது.? மருத்துவர் விளக்கம்..


நாம் தினமும் பழங்களை ஆரோக்கியத்திற்காக சாப்பிடுகிறோம். ஆனால் எல்லா பழக் கலவைகளும் உடலுக்கு நல்லதல்ல. தவறான முறையில் பழங்களைச் சாப்பிடுவது, உடல் நல பிரச்சனைகளையும், குடல்நல கோளாறுகளையும் ஏற்படுத்தும் என்கிறார் ஆயுர்வேத நியூட்ரிஷன் & குட் ஹெல்த் கோச் டிம்பிள் ஜாங்க்டா.

ஆயுர்வேதத்தில் “விருத்த அஹாரம்” என்றொரு கருத்து உள்ளது. அதாவது, ஒன்றோடொன்று பொருந்தாத உணவுகளை சேர்த்து சாப்பிடுவதால் உடலுக்கு நச்சுத்தன்மை ஏற்படும். குறிப்பாக பழங்களைச் சேர்ந்த தவறான காம்பினேஷன்கள், ஜீரண பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் என்று நிபுணர் விளக்குகிறார். மேலும் அவர் பகிர்ந்தவை இங்கே. தொடர்ந்து படியுங்கள்.

பழங்கள் + பால் – கடுமையாகத் தவிர்க்க வேண்டியது

* பழங்கள் பழ அமிலங்களை (fruit acids) கொண்டவை. இவை பால் போன்ற விலங்கு புரதங்களுடன் கலந்து விடும்போது, பாலில் உள்ள கேசின் புரதம் கெட்டுப்போகிறது. இது குடலில் நச்சுத்தன்மை ஏற்படுத்தும்.

* இதனால் ஜீரணக்கோளாறு, வீக்கம், அமிலத்தன்மை, தோல் ஒவ்வாமை (psoriasis, eczema, urticaria) போன்ற பிரச்சனைகள் தோன்றலாம்.

* இந்நிலையில் பால் + மாம்பழம் / அவகாடோ சேர்த்து சாப்பிடலாம்.

replace-sugar-with-these-dried-fruits-for-diwali-desserts-main

பழங்கள் + காய்கறிகள் – ஜீரணத்துக்கு தடையாகும்

* பழங்கள் உடலில் 3 மணி நேரம் மட்டுமே எடுக்கும். (1 மணி – வயிறு, 1 மணி – சிறுகுடல், 1 மணி – பெரிய குடல்).

* காய்கறிகள் 6 மணி நேரம் எடுக்கும். (2 மணி – வயிறு, 2 மணி – சிறுகுடல், 2 மணி – பெரிய குடல்).

* காய்கறிகளுடன் பழங்களைச் சேர்த்து சாப்பிடும்போது, பழங்கள் தேவையான நேரத்தில் ஜீரணமாகாமல் அமிலத்தன்மை, வீக்கம் ஏற்படுகிறது.

* இதற்கு பதிலாக சுரைக்காய்-பால், காரட்-பால் மூலம் செய்யப்படும் ஹல்வா ரெசிபி போன்ற மெதுவாக சமைக்கப்படும் ரெசிபிகள் மட்டும் பாதுகாப்பானவை.

இந்த பதிவும் உதவலாம்: உடலில் வைட்டமின் B7 இல்லாததால் என்ன நடக்கும்.? மருத்துவர் விளக்கம்..

பழங்கள் + தானியங்கள் / பருப்பு வகைகள் – ஜீரண பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்

* பழங்களுக்கு 3 மணி நேரம் தான் தேவை. ஆனால் தானியங்கள், பருப்பு வகைகள், நட்டுகள், விதைகள் ஆகியவற்றுக்கு 18 மணி நேரம் வரை தேவை.

* இதனால், பழங்களுடன் ஓட்ஸ், அரிசி, சாலட், பருப்பு போன்றவற்றைச் சேர்த்து சாப்பிடும் பழக்கம் ஜீரணத்தை தாமதப்படுத்தி, அமிலத்தன்மை, வீக்கம், வாயுத் தொல்லை ஏற்படுத்தும்.

* நீங்கள் சமைத்த பழங்கள் (உதா: ஆப்பிள் பை, ஆரஞ்சு கேக்) – மாதத்திற்கு ஒருமுறை சாப்பிடுவது பரவாயில்லை.

பழங்கள் + மாமிசம் / முட்டை / கடல் உணவு – ஆபத்தான கலவை

* பழங்களை மாமிசம், முட்டை, கடல் உணவுகளுடன் சேர்த்து சாப்பிடக் கூடாது.

* இது செரிமான சிக்கல், அமிலத்தன்மை, தோல் ஒவ்வாமை, குடல் நச்சுத்தன்மை (leaky gut syndrome) போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

View this post on Instagram

A post shared by Dimple Jangda (@dimplejangdaofficial)

பாதுகாப்பான கலவை – பழங்கள் + நட்ஸ் & விதைகள்

* நட்ஸ் மற்றும் விதைகள் பழங்களின் போலவே தாவரத்தின் ஒரே பகுதியாக உருவாகுகின்றன. ஆகவே அவை டிரைட் ஃப்ரூட்ஸ் வகையை சேர்ந்தவை.

* பழங்களுடன் நட்டுகளைச் சேர்த்துச் சாப்பிடுவது சர்க்கரை உயர்வை குறைத்து, நீரிழிவு நோயாளிகளுக்கும், ஆரோக்கியமானவர்களுக்கும் சிறந்தது.

நிபுணர் பரிந்துரை

* பழங்களை தனியாகவே சாப்பிடுவது சிறந்தது.

* தவறான காம்பினேஷன் ஜீரண சக்தியை (Agni) பலவீனப்படுத்தும்.

* சிறிய விதிவிலக்குகள் உள்ளன, ஆனால் அவற்றையும் தினசரி பழக்கமாகக் கொள்ளக் கூடாது.

இறுதியாக..

பழங்கள் நம் உடலுக்கு சக்தியூட்டும் இயற்கை உணவுகள். ஆனால் அவற்றை தவறான கலவைகளில் சேர்த்து சாப்பிடுவது ஜீரண பிரச்சனைகள், தோல் நோய்கள், குடல் நச்சுத்தன்மை போன்ற ஆபத்துகளை ஏற்படுத்தும். எனவே, பழங்களை தனியாக அல்லது நட்டுகளுடன் சாப்பிடுவது பாதுகாப்பானது என நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.

{Disclaimer: இந்தக் கட்டுரை பொது தகவல் பகிர்வு நோக்கத்திற்காக மட்டுமே. இது மருத்துவ ஆலோசனையாகக் கருதப்படக்கூடாது. உங்களிடம் ஏதேனும் ஜீரண பிரச்சனை அல்லது ஆரோக்கிய குறைபாடு இருந்தால், மருத்துவரை அணுகி ஆலோசனை பெறவும்.}

Read Next

குறைவான இரத்த அழுத்தம் உள்ளவர்கள் Black Coffee குடிப்பது நல்லதா.? மருத்துவரின் கருத்து இங்கே..

Disclaimer