Fri Sep 11, 2026 | 11:07 PM IST

தூங்குவதற்கு முன் தப்பித் தவறிக்கூட இந்த 4 விஷயங்களை ஒருபோதும் செய்யாதீர்கள்...!

நமது ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், தூக்கமின்மை பிரச்சனையை நீக்கவும் இரவில் படுக்கைக்குச் செல்வதற்கு முன் நாம் தவிர்க்க வேண்டிய பழக்கவழக்கங்கள் குறித்து நிபுணர்கள் கூறும் சில விஷயங்கள் உள்ளன.  

பெரும்பாலானோருக்கு இரவில் வெளியே செல்வது, தாமதமாக சாப்பிடுவது, வேலை முடிந்ததும் தாமதமாக தூங்குவது போன்ற பழக்கம் இருக்கும். சிலருக்கு இரவில் மது அருந்துவது, சரியாக சாப்பிடாமல் தாமதமாக தூங்குவது, சிலருக்கு இரவில் டிவி பார்ப்பது, அல்லது மொபைல் போன்களில் நேரத்தை செலவிடுவது, அல்லது மடிக்கணினிகளுடன் நேரத்தை செலவிடுவது போன்ற பழக்கம் இருக்கும்.

இரவில் தாமதமாக தூங்கும் பழக்கமும் இருக்கும். சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி, இவை அனைத்தும் கெட்ட பழக்கங்கள். இத்தகைய பழக்கங்கள் தூக்கமின்மைக்கு மட்டுமல்ல, ஆனால் நீண்டகால உடல்நலப் பிரச்சினைகளை உருவாக்கும் வாய்ப்புகளை அதிகரிக்கும்.

இரவு உணவிற்கு முன் சாப்பிடக்கூடாத உணவுகள்:

இரவு நேர பழக்கம் மன மற்றும் உடல் ஆரோக்கியத்தில் நேரடியான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. சில உணவு வகைகளை இரவு நேரத்தில் தவிர்க்க வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

உடல் வெப்பநிலையை அதிகரிக்கும் காரமான உணவுகள், மைதாவிலிருந்து தயாரிக்கப்படும் வெள்ளை ரொட்டி போன்ற சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள் கொண்ட உணவுகள் மற்றும் வயிற்றில் சரியாக ஜீரணம் ஆகாத உணவுகளை படுக்கைக்கு முன் உட்கொள்ளக்கூடாது என்று நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர் .

இதுபோன்ற உணவுகள் உடலில் உள்ள இன்சுலின் அளவை அதிகரிப்பதோடு தூக்கமின்மையும் ஏற்படுத்துகிறது. படுக்கைக்கு இரண்டு அல்லது மூன்று மணி நேரத்திற்கு முன்புபே உணவை முடித்து கொள்ளவேண்டும்.

இதை கண்டிப்பா செய்யாதீர்கள்: 

இரவில் படுக்கைக்குச் செல்வதற்கு முன் தொலைபேசியைப் பயன்படுத்துவது பொழுதுபோக்காக இருக்கலாம், ஆனால் இந்தப் பழக்கம் உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நல்லதல்ல. படுக்கைக்குச் செல்வதற்கு முன் தொலைபேசியில் ஸ்க்ரோல் செய்து கொண்டே இருந்தால், அதிலிருந்து வெளிப்படும் நீல ஒளி மெலடோனின் உற்பத்தியைப் பாதிக்கும் என்றும் மணிக்கணக்கில் விழித்திருக்கச் செய்யும் மற்றும் மன மற்றும் உடல் ஆரோக்கியத்தைப் பாதிக்கும்.

படுக்கைக்குச் செல்வதற்கு குறைந்தது ஒரு மணி நேரத்திற்கு முன்பே தொலைபேசிகளைப் பயன்படுத்துவதை நிறுத்துமாறு மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள்.



இரவில் படுக்கைக்குச் செல்வதற்கு முன் காபி குடிக்கும் பழக்கம்:

படுக்கைக்கு முன் காபி குடிக்கும் பழக்கம் பெரும்பாலானோறுக்கு பழக்கமாகிவிட்டது! ஆனால் காபியில் காணப்படும் அதிக அளவு காஃபின் தூக்கத்தை சீர்குலைக்கும் வாய்ப்பு அதிகம் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

காபி குடிக்கும் பழக்கத்தை தொடர்ந்தால் எதிர்காலத்தில் தூக்கமின்மைக்கு வழிவகுக்கும், உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். காஃபினின் அரை ஆயுள் ஐந்து முதல் ஆறு மணி நேரம் வரை என்று டாக்டர்கள் கூறுகிறார்கள்.

படுக்கைக்குச் செல்வதற்கு குறைந்தது ஆறு மணி நேரத்திற்கு முன்பே தேநீர் அல்லது காபி குடிப்பதை நிறுத்த வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். இந்த பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால் தூக்கமின்மை பிரச்சனையை நீக்க உதவும்.

மன அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருங்கள்:

வாழ்க்கையில் மன அழுத்தம் இருப்பது இயற்கையானது, ஆனால் உங்களை ஆதிக்கம் செலுத்த விடாதீர்கள். மன அழுத்தத்துடன் படுக்கைக்குச் செல்லாதீர்கள் . மன அழுத்தம் குடல் ஆரோக்கியத்தில் நேரடியான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள் .

அதிகமாக மன அழுத்தத்தில் படுக்கைக்குச் சென்றால், குடல் ஆரோக்கியம் மோசமடையும். ஒட்டுமொத்த மன மற்றும் உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும். படுக்கைக்குச் செல்வதற்கு முன் மனதை அமைதிப்படுத்தி ஆழ்ந்த முச்சு பயிற்சி செய்யுங்கள், தூங்க உதவும் சில வகையான யோகா பயிற்சிகளைச் நிபுணர்களின் ஆலோசனையைப் பெற்று செய்யுங்கள் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகிறார்கள்.

Image Source: Freepik

Read Next

இந்த அறிகுறிகளை லேசுல விடாதீங்க.. எந்த வைட்டமின் குறைபாட்டால் ஏற்படும் தெரியுமா?

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.


    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content