Sat Sep 12, 2026 | 12:03 AM IST

Expert

கர்ப்ப காலத்தில் தலைவலியால் அவதியா? இந்த உணவுமுறைகளைப் பின்பற்றுங்க.. நிபுணர் சொன்னது

கர்ப்பிணி பெண்கள் கர்ப்ப காலத்தில் தலைவலியால் பாதிக்கப்படுவர். இதிலிருந்து நிவாரணம் பெறவும், தலைவலியைக் குறைத்து ஆற்றலைத் தரவும் மருத்துவர் பகிர்ந்துள்ள 6 எளிய உணவு குறிப்புகள் குறித்து காணலாம்.

கர்ப்ப காலத்தில் கர்ப்பிணி பெண்கள் பல பிரச்சனைகளைச் சந்திக்கும் சூழல் ஏற்படுகிறது. அவ்வாறே, கர்ப்ப காலத்தில் தலைவலி என்பது ஒரு பொதுவான பிரச்சனையாகக் கருதப்படுகிறது. பெரும்பாலும், இரத்த சர்க்கரை அளவுகளில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள், தூக்கமின்மை அல்லது ஹார்மோன் மாற்றங்கள் போன்றவை தலைவலியைத் தூண்டுகிறது. மேலும், மன அழுத்தம் அல்லது ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கங்களும் தலைவலியை மோசமாக்கலாம். எனினும், அதிர்ஷ்டவசமாக ஆரோக்கியமான உணவுமுறை மூலம் தலைவலியை நிர்வகிக்கவும், மன அழுத்தத்தை நிர்வகிக்கவும் முடியும்.

இதில் கர்ப்ப காலத்தில் தலைவலியைத் தடுக்க உதவும் ஆறு உணவு குறிப்புகள் குறித்து லக்னோவின் விகாஸ் நகரில் அமைந்துள்ள நியூட்ரிவைஸ் கிளினிக்கின் ஊட்டச்சத்து நிபுணர் நேஹா சின்ஹா அவர்கள் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அதைப் பற்றி இங்குக் காண்போம்.

கர்ப்ப காலத்தில் தலைவலியைப் போக்க உதவும் உணவுமுறைகள்

கர்ப்ப காலத்தில் தலைவலியைத் தடுக்க நீரேற்றத்தை அதிகரிப்பது

கர்ப்ப காலத்தில் தலைவலியைத் தவிர்க்க நினைப்பவர்கள், உடலில் நீர்ச்சத்து இழப்பதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், நீரிழப்பு தலைவலி மற்றும் சோர்வை ஏற்படுத்தக்கூடும். எனவே உடலை நீரேற்றமாக வைக்க தண்ணீர் குடிக்க வேண்டும். இது தவிர, தேங்காய் தண்ணீர் மற்றும் புதிய காய்கறி சாறு போன்றவற்றையும் எடுத்துக் கொள்ளலாம். நீரேற்றமாக இருப்பது எரிச்சலைத் தடுக்க உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: கர்ப்ப காலத்தில் பீட்ரூட் சாறு குடிப்பது பாதுகாப்பானதா? நிபுணர் விளக்கம் இதோ!

கர்ப்ப காலத்தில் காஃபின் உட்கொள்ளலைக் குறைப்பது

கர்ப்ப காலத்தில் தலைவலியைத் தவிர்க்க, காஃபின் உட்கொள்ளலைக் குறைக்க வேண்டும். ஏனெனில், அதிகமாக தேநீர் அல்லது காபி குடிக்கும் பழக்கம் உடலில் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும் மற்றும் தலைவலியை ஏற்படுத்தலாம். எனவே, ஒரு நாளைக்கு ஒன்றுக்கு மேற்பட்ட கப் காஃபின் கலந்த பானங்களைக் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

உணவில் இரும்பு மற்றும் ஃபோலிக் அமிலத்தைச் சேர்ப்பது

கர்ப்ப காலத்தில் தலைவலியைத் தவிர்க்க இரும்புச்சத்து மற்றும்ஃபோலிக் அமிலம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்த கீரை, பீன்ஸ் மற்றும் பிற பச்சை காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இரும்புச்சத்து மற்றும் ஃபோலிக் அமிலம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவை உட்கொள்வது இரத்த சோகை அபாயத்தைக் குறைத்து தலைவலியைப் போக்க உதவுகிறது.

கர்ப்பகால உணவில் மெக்னீசியம் உணவுகளைச் சேர்ப்பது

கர்ப்ப காலத்தில் மெக்னீசியம் நிறைந்த உணவுகளாக நட்ஸ் வகைகளை உணவில் சேர்க்க வேண்டும். ஏனெனில், மெக்னீசியம் உட்கொள்வது மன அழுத்த அறிகுறிகளைக் குறைத்து தசை பதற்றத்தைக் குறைக்க உதவுகிறது. மேலும் உணவில் பாதாம், வேர்க்கடலை அல்லது பூசணி விதைகளைச் சேர்க்க வேண்டும்.

கர்ப்ப காலத்தில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களை எடுத்துக் கொள்வது

தலைவலியைத் தவிர்க்க, பெரும்பாலும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களை உட்கொள்ள நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். ஏனெனில் இது ஹார்மோன் சமநிலையை பராமரிக்க உதவுகிறது மற்றும் தலைவலியைப் போக்குகிறது. இதற்கு உணவில் வால்நட்ஸ் மற்றும் ஆளி விதைகளைச் சேர்க்கலாம். நிரப்பு மற்றும் ஒருங்கிணைந்த சுகாதார மையம் (NCCIH) ஆய்வுகளின் படி, ஒமேகா-3 அதிகம் உள்ள உணவை 16 வாரங்களுக்கு உட்கொள்வது ஒற்றைத் தலைவலி மற்றும் தலைவலி பிரச்சனையைக் குறைப்பதாகக் கூறப்பட்டது.

இந்த பதிவும் உதவலாம்: கர்ப்ப காலத்தில் டார்க் சாக்லேட் சாப்பிடலாமா.? நன்மைகளும் தீமைகளும் – நிபுணர் விளக்கம்.! 

கர்ப்ப காலத்தில் 5 சிறிய உணவுகளை உண்ணுவது

 கர்ப்ப காலத்தில் தலைவலி பிரச்சனையைக் குறைப்பதற்கு ஒரு நாளைக்கு ஐந்து முதல் ஆறு முறை சிறிய அளவில் சாப்பிட நிபுணர் பரிந்துரைக்கிறார். ஏனெனில், நீண்ட நேரம் பசி எடுத்தால், இரத்த சர்க்கரை அளவு குறைந்து, தலைவலி அல்லது சோர்வு ஏற்படும். எனவே, அடிக்கடி சிறிய அளவில் சாப்பிடலாம்.

முடிவு

கர்ப்ப காலத்தில் தலைவலியைத் தவிர்க்க, ஆரோக்கியமான உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும், நீரேற்றத்துடன் இருப்பது மற்றும் ஒமேகா-3, இரும்புச்சத்து மற்றும் மெக்னீசியம் நிறைந்த உணவுகளை உண்ணுவது போன்றவற்றைக் கையாள வேண்டும். காஃபின் உட்கொள்ளலைத் தவிர்க்க வேண்டும். இந்த எளிய உணவு குறிப்புகள் மூலம் தலைவலியைத் தடுக்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Headaches during pregnancy: கர்ப்ப காலத்தில் காய்ச்சல் மற்றும் தலைவலி மாத்திரை சாப்பிடுவது நல்லதா?

Image Source: Freepik

Read Next

கர்ப்ப காலத்தில் டார்க் சாக்லேட் சாப்பிடலாமா.? நன்மைகளும் தீமைகளும் – நிபுணர் விளக்கம்.!

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

கௌதமி சுப்ரமணி

கௌதமி சுப்ரமணி

இளைய உள்ளடக்க எழுத்தாளர்

நான் கௌதமி சுப்ரமணியம், டிஜிட்டல் மீடியாவில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறேன். ஆரோக்கியம், உணவு, உடற்பயிற்சி, உடல் நலம், அழகு குறிப்பு போன்றவை தொடர்பான விவரங்களை ஆராய்ந்து கட்டுரைகளை எழுதி வருகிறேன். நான் எழுதும் ஒவ்வொரு பகுதியும் ஈர்க்கக்கூடியதாக இருப்பதை உறுதிசெய்து, விவரங்களுக்கு ஒரு தீவிரமான பார்வையை வளர்த்துக்கொண்டேன். மக்களுக்குத் தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான இலக்கை மேம்படுத்துவது எனது நோக்கம் ஆகும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

    Oct 21, 2025 08:17 IST

    Published By : கௌதமி சுப்ரமணி

Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content