Fri Sep 11, 2026 | 11:09 PM IST

Doctor Verified

நாள்பட்ட மன அழுத்தம் புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்குமா? மருத்துவர் தரும் பதில்

மக்கள் அடிக்கடி மன அழுத்தத்தால் சந்திக்கின்றனர். இல்லையெனில், அதிகம் நோய்வாய்ப்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. இந்நிலையில், மன அழுத்தம் புற்றுநோய் போன்ற கடுமையான நோயை ஏற்படுத்துமா என்ற கேள்வி எழுகிறது. இதில் மன அழுத்தத்தால் புற்றுநோய் ஏற்படுமா என்பது குறித்து மருத்துவர் பகிர்ந்துள்ளதைக் காணலாம்.

இன்றைய பிஸியான காலகட்டத்தில், மோசமான வாழ்க்கை முறை, உணவு முறை மற்றும் உடல் செயல்பாடுகள் இல்லாதது போன்றவை பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது. இதில் மன அழுத்தமும் அடங்குகிறது. இதனால், சிறிய விஷயங்களைப் பற்றி கவலைப்படுவது, எதிர்காலத்தைப் பற்றி கவலைப்படுவது, வேலை அழுத்தம், உறவு சிக்கல்கள் போன்ற அனைத்துமே நம் உடலையும் மனதையும் மோசமாக பாதிக்கிறது. இந்நிலையில், குடும்பத்தில் யாராவது மன அழுத்தத்தில் இருக்கும்போது, மற்றவர்கள் பதற்றத்தை எடுத்துக் கொள்ளக்கூடாது. இல்லையெனில், நோய்த்தொற்றுக்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமாகலாம் எனக் கூறுகிறார்கள்.

அவ்வாறு, அதிக மன அழுத்தத்தில் இருக்கும் போது, உண்மையில் புற்றுநோயை உண்டாக்குமா என்ற கேள்வி எழக்கூடும். இது குறித்த தகவல்களை ஹரியானாவின் சோனிபட்டில் உள்ள எண்டோமெட்ரா மருத்துவமனையின் மூத்த புற்றுநோயியல் நிபுணர், மருத்துவ மற்றும் கதிர்வீச்சு புற்றுநோயியல் நிபுணர் டாக்டர் ராமன் நாரங் அவர்கள் மன அழுத்தத்திற்கும் புற்றுநோய்க்கும் உள்ள தொடர்பு குறித்து விவரித்துள்ளார்.

மன அழுத்தம் என்றால் என்ன?

மன அழுத்தம் என்பது ஒரு நபர் உணர்ச்சி ரீதியாகவோ, மன ரீதியாகவோ அல்லது உடல் ரீதியாகவோ பாதிக்கப்படக்கூடிய உணரும் ஒரு நிலையாகும். சிலருக்கு, இந்த மன அழுத்த நிலை குறுகிய காலத்திற்கு நீடிக்கலாம். மற்றவர்களுக்கு, இது ஒரு நீண்டகால பிரச்சனையாக இருக்கலாம். மன அழுத்தம் அல்லது பதற்றமானது நமது நரம்பு மண்டலம், நோயெதிர்ப்பு அமைப்பு மற்றும் ஹார்மோன் சமநிலையை நேரடியாக பாதிக்கிறது என்று மருத்துவர் ராமன் நாரங் விளக்குகிறார்.

இந்த பதிவும் உதவலாம்: எமோஷனல் ஸ்ட்ரெஸ் இருக்கும் போது உங்க உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க இந்த குறிப்புகளை பின்பற்றுங்க.. நிபுணர் பரிந்துரை

மன அழுத்தத்தால் ஏற்படும் நோய்கள்

ஒருவர் நீண்ட காலமாக மன அழுத்தத்தில் இருக்கும் போது, அது பல்வேறு நோய்களின் அபாயத்தை அதிகரிக்கிறது. தேசிய மருத்துவ நூலகத்தால் நடத்தப்பட்ட ஆராய்ச்சி ஒன்றில், நாள்பட்ட மன அழுத்தம் காரணமாக, நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதயம் தொடர்பான நோய்களின் அபாயம் அதிகரிக்கக்கூடும்.

மன அழுத்தத்திற்கும் புற்றுநோய்க்கும் தொடர்பு உள்ளதா?

மருத்துவர் ராமன் நாரங் அவர்களின் கூறியதாவது, மன அழுத்தம் புற்றுநோயை ஏற்படுத்தாது. ஆனால் அது புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கக்கூடும். குறிப்பாக அது நீண்ட காலம் நீடித்து ஒரு நபரின் உணவு மற்றும் வாழ்க்கை முறையை முற்றிலுமாகப் பாதிக்கும் போதே, அது புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கிறது என்று விளக்குகிறார்.

மேலும், மன அழுத்தம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்துகிறது. இதனால் ஆரோக்கியமான செல்கள் புற்றுநோயை உண்டாக்கும் செல்களை எதிர்த்துப் போராடுவது கடினமாகிறது. இது புற்றுநோயின் அபாயத்தை பல மடங்கு அதிகரிக்கிறது என நிபுணர்கள் கூறுகின்றனர்.

டாக்டர் ராமன் நாரங் அவர்களின் கூற்றுப்படி, ஒருவர் நீண்டகால மன அழுத்தத்தில் இருக்கும்போது, உடல் கார்டிசோல் மற்றும் அட்ரினலின் போன்ற பல ஹார்மோன்களை வெளியிடுகிறது. இந்த ஹார்மோன்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலவீனப்படுத்துகிறது. இதனால் வீக்கம் அதிகரிப்பதுடன், டிஎன்ஏ பழுதுபார்ப்பு சீர்குலைக்கப்படுகிறது. இது புற்றுநோயின் அபாயத்தை கணிசமாக அதிகரிக்கிறது.

மன அழுத்தத்தால் என்னென்ன புற்றுநோய்கள் ஏற்படலாம்?

மன அழுத்தம் ஒன்றுக்கும் மேற்பட்ட வகையான புற்றுநோய்களுக்கு வழிவகுக்கும்.

மார்பக புற்றுநோய்

பெண்களில், நீடித்த மன அழுத்தம் மற்றும் பதட்டம் போன்றவற்றால் உடலில் ஈஸ்ட்ரோஜன் அளவு அதிகரிக்கப்பட்டு, மார்பகப் புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கிறது. இந்நிலையில், மன அழுத்தம் பெண்கள் தங்கள் உணவு மற்றும் வாழ்க்கை முறையில் சிறப்பு கவனம் செலுத்துவதைக் குறைக்கிறது. இது புற்றுநோய் செல்களை ஊக்குவிக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இந்த பதிவும் உதவலாம்: Heart Disease and Stress: அதிக மன அழுத்தம் மாரடைப்பை ஏற்படுத்துமா? உண்மையை தெரிந்து கொள்ளுங்கள்!

தோல் புற்றுநோய்

மன அழுத்தத்தின் போது உடலில் கார்டிசோல் மற்றும் அட்ரினலின் போன்ற மன அழுத்த ஹார்மோன்கள் அதிகரிக்கிறது. இவை டிஎன்ஏ சேதத்தை சரிசெய்யும் சரும செல்களின் திறனைக் குறைக்கிறது. மருத்துவரின் கூற்றுப்படி, நீடித்த மன அழுத்தம் உடலில் நாள்பட்ட மன அழுத்தத்திற்கு வழிவகுப்பதுடன், வீக்கம் தோல் செல்களை அழித்து தோல் புற்றுநோயின் வளர்ச்சிக்கு வழிவகுக்கிறது.

செரிமான அமைப்பு தொடர்பான புற்றுநோய்கள் - பெருங்குடல் புற்றுநோய்

மன அழுத்தத்தினால் நமது செரிமான அமைப்பு நேரடியாக பாதிக்கப்படுகிறது. இவை செரிமான நரம்புகளை செயலிழக்கச் செய்து, உணவு செரிமான செயல்முறையை சீர்குலைக்கிறது. இவை புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கலாம்.

மன அழுத்தம் மற்றும் புற்றுநோயைத் தடுக்க செய்ய வேண்டியவை

புற்றுநோய் தடுப்புக்கு மன அழுத்தத்தைக் குறைப்பது மிக முக்கியமாகும். எனவே, அன்றாட வாழ்க்கையில் மன அழுத்தத்தைக் குறைக்க பின்வரும் படிகளை முயற்சி செய்யலாம்.

  • ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் யோகா மற்றும் தியானம் செய்ய வேண்டும். இது மன அழுத்தத்தைக் குறைத்து, உடலில் நேர்மறை ஆற்றலைச் சுழற்றி, புற்றுநோய் மற்றும் பிற நோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது.
  • தினமும் 7-8 மணி நேரம் தூங்குவது முக்கியமாகும். இவை உடல் தன்னைத்தானே சரிசெய்து கொள்ள போதுமான நேரம் கிடைக்க வழிவகுக்கிறது.
  • பச்சை காய்கறிகள், பழங்கள், கொட்டைகள், கிரீன் டீ போன்ற ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும்.
  • உணர்ச்சி சமநிலையைப் பராமரிக்க குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் நேரத்தைச் செலவிடலாம்.

முடிவுரை

மன அழுத்தம் புற்றுநோய்க்கு நேரடி காரணமாக இருக்காது. ஆனால் அது உடலை பலவீனப்படுத்துகிறது. நிலையான மன அழுத்தம், மோசமான வாழ்க்கை முறை மற்றும் எதிர்மறை சிந்தனை போன்றவை இணைந்து புற்றுநோய் போன்ற கடுமையான நோய்களுக்கு உகந்த சூழலை உருவாக்குகிறது எனவே, மன அழுத்தத்தை நாம் எளிதாக எடுத்துக் கொள்ளாமல் இருப்பது மிகவும் முக்கியமாகும். மன அழுத்தத்தைக் குறைக்க, மேலே குறிப்பிட்ட குறிப்புகளை நாம் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

இந்த பதிவும் உதவலாம்: இந்த அறிகுறிகள் இருந்தா நீங்க அதிக ஸ்ட்ரெஸ்ல இருக்கீங்கனு அர்த்தம்.. இயற்கையாகவே எப்படி குறைக்கலாம்

Image Source: Freepik

Read Next

ஒழுங்கற்ற மாதவிடாய் மார்பகப் புற்றுநோயின் அறிகுறியா.? மருத்துவர்கள் சொல்வதை தெரிந்து கொள்ளுங்கள்..

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

கௌதமி சுப்ரமணி

கௌதமி சுப்ரமணி

இளைய உள்ளடக்க எழுத்தாளர்

நான் கௌதமி சுப்ரமணியம், டிஜிட்டல் மீடியாவில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறேன். ஆரோக்கியம், உணவு, உடற்பயிற்சி, உடல் நலம், அழகு குறிப்பு போன்றவை தொடர்பான விவரங்களை ஆராய்ந்து கட்டுரைகளை எழுதி வருகிறேன். நான் எழுதும் ஒவ்வொரு பகுதியும் ஈர்க்கக்கூடியதாக இருப்பதை உறுதிசெய்து, விவரங்களுக்கு ஒரு தீவிரமான பார்வையை வளர்த்துக்கொண்டேன். மக்களுக்குத் தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான இலக்கை மேம்படுத்துவது எனது நோக்கம் ஆகும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

    Oct 07, 2025 11:00 IST

    Published By : கௌதமி சுப்ரமணி

Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content