Expert

Heart Disease and Stress: அதிக மன அழுத்தம் மாரடைப்பை ஏற்படுத்துமா? உண்மையை தெரிந்து கொள்ளுங்கள்!

  • SHARE
  • FOLLOW
Heart Disease and Stress: அதிக மன அழுத்தம் மாரடைப்பை ஏற்படுத்துமா? உண்மையை தெரிந்து கொள்ளுங்கள்!

பெரும்பாலும் குழந்தைகள் சைலன்ட் அட்டாக் அல்லது மாரடைப்புக்கு அதிகமாக ஆளாகின்றனர். மோசமான உணவுப் பழக்கம் மற்றும் மோசமான வாழ்க்கை முறை ஆகிய இரண்டும் இதய நோய்களை அதிகரிப்பதற்கான முக்கிய காரணங்களாகக் கருதப்படுகிறது. அதேபோல், மாரடைப்பு குறித்தும் பல தவறான செவிவழிச் செய்திகள் வெளிவருகின்றன.

அதிகம் யோசிப்பவர்களுக்கும் மாரடைப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாக பலர் நம்புகிறார்கள். மேலும், அதிக மன அழுத்தமம் மாரடைப்பை ஏற்படுத்தும் என பலர் கூறுகின்றனர். இவை உண்மையா? எய்ம்ஸின் முன்னாள் ஆலோசகரும், சவுல் ஹார்ட் சென்டரின் மூத்த இருதயநோய் நிபுணருமான டாக்டர் பிமல் சாஜரிடம் இது குறித்து பேசினோம். அவர் கூறிய விஷயங்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

இந்த பதிவும் உதவலாம் : Dehydration Causes: நீரிழப்பால் இதயத்துடிப்பு அதிகமாகுமா? நிபுணர் தரும் விளக்கம்

அதிக மன அழுத்தம் மாரடைப்பை ஏற்படுத்துமா?

நிபுணர்களின் கூற்றுப்படி, அதிக மன அழுத்தம் மாரடைப்பு அபாயத்திற்கு வழிவகுக்கும் என்பது உண்மைதான். உண்மையில், மன அழுத்தத்தை அதிகரிப்பது மாரடைப்பு அபாயத்தை அதிகரிக்கும். தொடர்ச்சியான மன அழுத்தம் காரணமாக, உடலில் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன. அதாவது, உயர் இரத்த அழுத்தம், அதிகரித்த இதய துடிப்பு அல்லது இரத்த உறைவு உருவாக்கம் போன்றவை. இந்த மாற்றங்களால், இதய நோய்கள் மற்றும் மாரடைப்பு அதிகரிக்கும் அபாயம் உள்ளது.

மாரடைப்புக்கு முன் காணப்படும் ஆரம்ப அறிகுறிகள் என்ன?

மார்பு வலி அல்லது அசௌகரியம்

மாரடைப்புக்கு முன், ஒரு நபர் நெஞ்சில் எரியும் உணர்வையும் அமைதியின்மையையும் உணரத் தொடங்குகிறார். இந்நிலையில், மார்பின் நடுவில் அல்லது இடது பக்கத்தில் வலி, கனம், அழுத்துதல் அல்லது அழுத்தம் உணரப்படுகிறது. சில சமயங்களில் இந்தப் பிரச்சனை தொடர்ச்சியாகவும் சில சமயங்களில் இடையிடையேயும் ஏற்படலாம்.

இந்த பதிவும் உதவலாம் : Heart Attack For Women: இளம் வயதிலேயே பெண்களுக்கு மாரடைப்பு ஏற்படுவது ஏன்?

மேல் உடல் அசௌகரியம்

மாரடைப்பு ஏற்படுவதற்கு முன், ஒரு நபரின் உடலின் மேல் பகுதி பாதிக்கப்படத் தொடங்குகிறது. இந்நிலையில், நோயாளி ஒன்று அல்லது இரு கைகளிலும், முதுகு, கழுத்து, தாடை அல்லது வயிற்றில் அசௌகரியத்தை உணரத் தொடங்குகிறார்.

சுவாசிப்பதில் சிரமம்

மாரடைப்பு வருவதற்கு முன், ஒருவருக்கு சுவாசிப்பதில் சிரமம் ஏற்படுகிறது. இந்நிலையில், சிலருக்கு மூச்சுத் திணறல் மற்றும் மார்பு வலி ஏற்படலாம்.

குமட்டல் அல்லது வாந்தி

மாரடைப்புக்கு முன், சில நோயாளிகள் குமட்டல் அல்லது வாந்தியையும் உணர ஆரம்பிக்கிறார்கள். இது தவிர, பலருக்கு அஜீரணம் அல்லது வயிற்று வலியும் தொடங்கும்.

இந்த பதிவும் உதவலாம் : Dairy Items For Heart: இதய ஆரோக்கியத்திற்கு நீங்க சாப்பிட வேண்டிய மற்றும் சாப்பிடக்கூடாத பால் பொருள்கள்

மயக்கம்

நோயாளி திடீரென்று தலைச்சுற்றலை உணரத் தொடங்குகிறார். இது தவிர, அமைதியின்மை மற்றும் மயக்கம் போன்ற உணர்வும் மாரடைப்பு அறிகுறிகளில் அடங்கும்.

அதிகப்படியான வியர்வை

திடீரென்று ஒருவருக்கு அதிகமாக வியர்க்க ஆரம்பித்தால், அது மாரடைப்பின் அறிகுறியாகவும் இருக்கலாம். திடீரென்று தலை குளிர்ச்சியாகவும் ஒட்டும் தன்மையுடனும் உணரத் தொடங்குகிறது. இந்த அறிகுறிகளில் ஏதேனும் ஒன்றை நீங்கள் கண்டால், தாமதிக்காமல் உடனடியாக மருத்துவரை அணுகவும்.

Pic Courtesy: Freepik

Read Next

Dairy Items For Heart: இதய ஆரோக்கியத்திற்கு நீங்க சாப்பிட வேண்டிய மற்றும் சாப்பிடக்கூடாத பால் பொருள்கள்

Disclaimer