Sat Sep 12, 2026 | 12:56 AM IST

Doctor Verified

நூடுல்ஸ் சாப்பிட்டும் ஹெல்தியா இருக்கலாம்.! அது எப்படி.? மருத்துவர் விளக்கம் இங்கே..

நூடுல்ஸ் சாப்பிடும் பழக்கத்தை விட்டுவிட முடியவில்லையா? கவலைப்பட வேண்டாம். மருத்துவர் டாக்டர் சாந்தோஷ் ஜேக்கப் பகிர்ந்துள்ள ஆரோக்கியமான முறையில் நூடுல்ஸ் சாப்பிடுவது பற்றி தெரிந்துகொள்ளுங்கள். சரியான முறையில் சாப்பிட்டால் நூடுல்ஸ் கூட ஆரோக்கியமாக இருக்கும்.

இளம் வயதினர்கள் முதல் குழந்தைகள் வரை, இன்று பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடும் உணவு இன்ஸ்டண்ட் நூடுல்ஸ். 5 நிமிடங்களில் தயாராகிவிடும் இந்த உணவு எளிமையாகவும் சுவையாகவும் இருப்பதால், “ஹெல்தியா இல்லை” என்பதை அறிந்தும் பலர் அடிக்கடி சாப்பிட்டு வருகிறார்கள்.

ஆனால், நூடுல்ஸ் சாப்பிடக் கூடாது என்பதல்ல, சரியான முறையில் சாப்பிட்டால் அதையும் ஹெல்தியாக்கலாம் என்று ஆர்த்தோபீடிக் & ஸ்போர்ட்ஸ் சர்ஜன் டாக்டர் சாந்தோஷ் ஜேக்கப் கூறியுள்ளார்.

கலோரி சிக்கல்

ஒரு 70 கிராம் நூடுல்ஸ் பேக் சாப்பிட்டால், சுமார் 350 கலோரி மற்றும் 10 கிராம் கொழுப்பு உடலுக்குள் செல்கிறது. இதில் புரதமும், நார்சத்தும் மிகக் குறைவு. இதனால் விரைவில் பசி திரும்ப வருகிறது.

இதற்கான தீர்வு: 150–200 கிராம் காய்கறிகள் (கேரட், குடைமிளகாய், பீன்ஸ், பச்சை பட்டாணி) சேர்த்து சமைத்தால் நார்சத்து கிடைக்கும். அதேபோல், முட்டை, சோயா அல்லது சிக்கன் சேர்த்தால் புரதம் கிடைத்து, பசியை தணிக்கும்.

சோடியம்

ஒரு பேக்கெட்டில் சுமார் 1000 மில்லி கிராம் உப்பு (சோடியம்) இருக்கும். ஒரு நாளுக்கான பரிந்துரைக்கப்பட்ட அளவு: 2000–2300 மில்லி கிராம் தான்.

ஆனால், ஒரே நாளில் 2–3 பேக் நூடுல்ஸ் சாப்பிட்டால், ஒரே நாளுக்கான உப்பு அளவு முழுமையாக தாண்டிவிடுகிறது. இது இதய நோய், உயர் இரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகளை தூண்டக்கூடும்.

இந்த பதிவும் உதவலாம்: ஒவ்வாமையை குறைக்கும் காலை உணவுகள்.. மருத்துவர் பரிந்துரை..

ஹெல்தியா சாப்பிடும் ஹேக்

* காய்கறிகள் சேர்க்கவும் – பலவித வண்ண காய்கறிகள் உடலுக்கு தேவையான நார்சத்து மற்றும் சிறு சத்துக்களை தரும்.

* புரதம் சேர்க்கவும் – முட்டை, சிக்கன் அல்லது பன்னீர் சேர்த்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

* கூடுதல் எண்ணெய், உப்பு சேர்க்க வேண்டாம்.

* நூடுல்ஸ் தினசரி உணவாக அல்லாமல், சில சமயங்களில் மட்டுமே சாப்பிட வேண்டும்.

மருத்துவர் கூற்று

“நூடுல்ஸ் போன்ற நூடுல்ஸ் உணவை முற்றிலும் தவிர்க்க வேண்டியதில்லை. ஆனால், அது தினசரி உணவாக மாறக்கூடாது. காய்கறி, புரதம் சேர்த்து, குறைவான இடைவெளியில் சாப்பிட்டால் அது ஒரு Occasional Treat ஆக இருக்கலாம்” என டாக்டர் சாந்தோஷ் ஜேக்கப் கூறியுள்ளார்.

இறுதியாக..

இன்று பெரும்பாலானோர் விரைவில் தயாராகும் உணவுகளையே விரும்புகிறார்கள். ஆனால், அந்த சுவையான நூடுல்ஸ் உணவை சத்தானதாக மாற்றுவது நம் கைகளில்தான் இருக்கிறது. காய்கறிகளும் புரதமும் சேர்த்து சாப்பிட்டால் உடலுக்கு கேடு குறையும்.

Disclaimer: இந்த செய்தி மருத்துவர் வழங்கிய ஆலோசனையின் அடிப்படையில் எழுதப்பட்டது. எந்தவொரு ஆரோக்கிய குறைபாடுகளுக்கும், தனிப்பட்ட முறையில் உங்கள் மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது அவசியம்.

Read Next

ஒவ்வாமையை குறைக்கும் காலை உணவுகள்.. மருத்துவர் பரிந்துரை..

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

Ishvarya Gurumurthy

Ishvarya Gurumurthy

துணை ஆசிரியர்

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

    Oct 01, 2025 20:02 IST

    Published By : Ishvarya Gurumurthy

Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content