Fri Sep 11, 2026 | 10:24 PM IST

Expert

இந்த 5 பானங்கள் குடிச்சா எடை குறைவது கேரண்டி.. நிபுணர் தரும் விளக்கம்

இன்று உடல் எடையைக் குறைப்பது பலருக்கும் சிரமமான ஒன்றாக அமைகிறது. இதில் உடல் எடையைக் குறைக்க உதவும், உத்திரவாதம் அளிக்கக்கூடிய 5 வீட்டிலேயே தயாரிக்கப்படும் பானங்கள் குறித்து நிபுணர் பகிர்ந்துள்ளதைக் காணலாம்.

இன்றைய நவீன காலத்தில் மோசமான வாழ்க்கை முறை, உணவு முறை மற்றும் உடல் செயல்பாடுகள் இல்லாதது போன்றவை பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது. குறிப்பாக, உட்கார்ந்த வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுகளை உட்கொள்வதன் காரணமாக உடல் எடை அதிகரிப்பு விரைவாக நிகழ்கிறது. அதே சமயம், எடையைக் குறைப்பதற்கும் மக்கள் ஜிம்மிற்குச் செல்வது, கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொள்வது, பல்வேறு உணவு முறைகளைப் பின்பற்றுவது போன்ற பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கின்றனர்.

ஆனால், எவ்வளவு முயற்சிகளைக் கையாளும் போது, அவர்கள் எடையைக் குறைப்பதில் சிரமங்களையே சந்திக்கின்றனர். அதிலும் குறிப்பாக, தொப்பைக் கொழுப்பைக் குறைப்பதில் பலரும் தோல்வியையே சந்திக்கும் நிலை ஏற்படுகிறது. இந்நிலையில், உடல் எடையை விரைவாகக் குறைப்பதற்கு உத்திரவாதம் அளிக்கக்கூடிய சில ஆரோக்கியமான பானங்கள் குறித்து ஊட்டச்சத்து நிபுணர் மற்றும் எடை இழப்பு நிபுணரும், உணவியல் நிபுணருமான தமன்னா தயாள் அவர்கள் richnutrition20 இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதைப் பற்றி இங்குக் காண்போம்.

இந்த பதிவும் உதவலாம்: தொப்ப வேகமா குறையனுமா.? இந்த காய்கறி ஜூஸ் குடிங்க..

உடல் எடையைக் குறைக்கும் பானங்கள்

நிபுணர் தனது பதிவில் கூறியதாவது, “உங்கள் ஆரோக்கியத்திற்கு ஒரு சக்திவாய்ந்த தொடக்கத்தை கொடுங்கள்! இந்த நம்பமுடியாத பானம், உங்கள் எடை இழப்பு பயணத்தை ஆதரிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது எடை தூக்கும் பயிற்சிகளைச் செய்வதன் மூலம்:

சிறந்த ஆரோக்கியம்: இந்த பானங்கள் ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கான இயற்கை நன்மைகளால் நிறைந்ததாகும்

மேம்பட்ட செரிமானம்: வயிற்று உப்புசத்திற்கு விடைபெற்று இலகுவாக உணர வைக்கிறது

வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துதல்: உடலின் கொழுப்பை எரிக்கும் இயந்திரத்தைத் தொடங்கலாம்.

இந்த பானங்கள் தயாரிக்க எளிதானதாக இருப்பதுடன் விரும்பி அருந்தலாம். மேலும், ஆரோக்கிய வழக்கத்திற்கு முழுமையான மாற்றத்தை ஏற்படுத்தலாம். இதை இன்றே முயற்சி செய்யுங்கள்” என்று கூறினார்.

5 உத்தரவாதமான எடை இழப்பு பானங்கள்

நிபுணர் பகிர்ந்த இந்த பானங்கள் அறிவியல் ரீதியாக நன்மை தருவதாகவும், வீட்டிலேயே தயாரிக்க எளிதானதாகவும் அமைகிறது.

எலுமிச்சை மற்றும் இளஞ்சிவப்பு உப்பு நீர்

  • எலுமிச்சை மற்றும் இளஞ்சிவப்பு உப்பு நீர் கலந்த இந்த பானத்தை மதிய நேரம் எடுத்துக் கொள்ள பரிந்துரைக்கிறார்.
  • இந்த பானத்தைக் குடிப்பது உடலுக்கு நீரேற்றத்தைத் தருவதுடன் தாதுக்கள் மற்றும் செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது.
  • இந்த பானம் தயார் செய்வதற்கு ஒரு கிளாஸ் அறை வெப்பநிலை நீரில் அரை எலுமிச்சை மற்றும் ஒரு சிட்டிகை இளஞ்சிவப்பு உப்பு போன்றவற்றைச் சேர்க்கலாம்.

பிளாக் காபி (பால் சேர்க்கப்படாதது)

  • பால் சேர்க்கப்படாத பிளாக் காபி குடிப்பது உடல் எடையை விரைவாகக் குறைக்க உதவுகிறது. இதை நிபுணர் உடற்பயிற்சிக்கு முன் எடுத்துக் கொள்ள பரிந்துரைக்கிறார்.
  • இதை உடற்பயிற்சிக்கு 20-30 நிமிடங்களுக்கு முன்பாக எடுத்துக் கொள்வதன் மூலம் வளர்சிதை மாற்றம் மற்றும் கொழுப்பு எரிப்பை மேம்படுத்தலாம்.
  • இந்த பானத்தைத் தயார் செய்ய 1 தேக்கரண்டி காபி மற்றும் வெந்நீர் மட்டுமே தேவைப்படுகிறது. இதில் சர்க்கரை மற்றும் பால் சேர்க்கப்படவில்லை.

இந்த பதிவும் உதவலாம்: ஜிம்க்குலாம் போக வேணாம்.. சீக்கிரம் வெயிட் குறைய இந்த ஹோம் ரெமிடிஸ் ட்ரை பண்ணுங்க

கிரீன் டீ (தேன் சேர்க்கப்படாதது)

  • தேன் சேர்க்கப்படாத கிரீன் டீ அருந்துவது உடல் எடையைக் குறைக்க உதவுகிறது. நிபுணர் இந்த பானத்தை மதிய உணவுக்குப் பிறகு அல்லது மாலையில் எடுத்துக் கொள்ளலாம் என்று கூறுகிறார்.
  • கிரீன் டீயில் உள்ள கேட்டசின்கள் கொழுப்பு ஆக்சிஜனேற்றத்தை அதிகரிக்க உதவுகிறது.
  • கிரீன் டீயைத் தயார் செய்வதற்கு வெதுவெதுப்பான நீரில், 1 கிரீன் டீ பை 2-3 நிமிடங்கள் மட்டுமே வைத்து பானம் செய்து குடிக்கலாம்.

View this post on Instagram

A post shared by Dietitian Tamanna Dayal (@richnutrition20)

ஜீரா நீர்

  • இதை எப்போதும் காலையில் வெறும் வயிற்றில் குடிக்கலாம். இந்த பானம் அருந்துவது வீக்கத்தைக் குறைக்கவும், செரிமானத்தை மேம்படுத்தவும் மற்றும் இன்சுலினை நிலைப்படுத்தவும் உதவுகிறது.
  • ஜீரா தண்ணீர் செய்ய 1 தேக்கரண்டி ஜீராவை 1 கிளாஸ் தண்ணீரில் இரவு முழுவதும் ஊறவைத்து, பின்னர் 2 நிமிடங்கள் கொதிக்க வைத்து, சூடாக குடிக்க வேண்டும்.

இலவங்கப்பட்டை தண்ணீர்

  • இது எப்போதும் இரவு நேரத்தில் எடுத்துக் கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது. ஏனெனில், இரவு நேரத்தில் இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தவும், இரவு நேர பசியைக் குறைக்கவும் உதவுகிறது.
  • இலவங்கப்பட்டை தண்ணீரைத் தயார் செய்வதற்கு 1½ தேக்கரண்டி இலவங்கப்பட்டையை 1 கிளாஸ் தண்ணீரில் 4 நிமிடங்கள் கொதிக்க வைத்து குடிக்கலாம்.

பொறுப்புத்துறப்பு

இதில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. எனினும், தனிப்பட்ட தகவல்களைப் பெற விரும்புபவர்கள் அல்லது புதிய முயற்சிகளைக் கையாள விரும்புபவர்கள் எப்போதும் தகுதிவாய்ந்த நிபுணரை அணுகுவது நல்லது.

இந்த பதிவும் உதவலாம்: டபுள் மடங்கு வேகத்தில் எடையைக் குறைக்க இன்டர்மிட்டன்ட் விரதத்தில் இந்த ட்ரிங்ஸ் குடிங்க

Image Source: Freepik

Read Next

நோ குக்கிங்.. ஒரே வாரத்தில் 10 கிலோ வரை எடையைக் குறைக்கும் சூப்பர் உணவு ரெசிபிகள்!

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

கௌதமி சுப்ரமணி

கௌதமி சுப்ரமணி

இளைய உள்ளடக்க எழுத்தாளர்

நான் கௌதமி சுப்ரமணியம், டிஜிட்டல் மீடியாவில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறேன். ஆரோக்கியம், உணவு, உடற்பயிற்சி, உடல் நலம், அழகு குறிப்பு போன்றவை தொடர்பான விவரங்களை ஆராய்ந்து கட்டுரைகளை எழுதி வருகிறேன். நான் எழுதும் ஒவ்வொரு பகுதியும் ஈர்க்கக்கூடியதாக இருப்பதை உறுதிசெய்து, விவரங்களுக்கு ஒரு தீவிரமான பார்வையை வளர்த்துக்கொண்டேன். மக்களுக்குத் தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான இலக்கை மேம்படுத்துவது எனது நோக்கம் ஆகும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

    Nov 06, 2025 11:00 IST

    Published By : கௌதமி சுப்ரமணி

Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content