Fri Sep 11, 2026 | 11:42 PM IST

Expert

35 வயதுக்குப் பிறகு ஒவ்வொரு ஆணும் இந்த 5 பவர்ஃபுல் உணவுகளைக் கட்டாயம் சேர்த்துக்கோங்க.. நிபுணர் தரும் விளக்கம்

அன்றாட உணவில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வது ஆண்கள், பெண்கள் என இருவருக்கும் முக்கியமானதாகும். இதில் 35 வயதுக்குப் பிறகு ஒவ்வொரு ஆணும் தங்கள் உணவில் என்னென்ன உணவுகளைச் சேர்க்க வேண்டும் என்பது குறித்து நிபுணர் பகிர்ந்துள்ளதைக் காணலாம்.

அன்றாட உணவில் ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகள், காய்கறிகள், பழங்கள், நட்ஸ் மற்றும் விதைகள் போன்றவற்றை எடுத்துக் கொள்வது அவசியமாகக் கருதப்படுகிறது. ஆண்கள், பெண்கள் என இருபாலர்களும் ஆரோக்கியமான உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால், இன்றைய காலத்தில் மோசமான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுமுறை காரணமாக, பலரும் பலதரப்பட்ட பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். குறிப்பாக, ஆண்கள் அன்றாட வாழ்வில் பல பிரச்சனைகளைச் சந்திக்கும் நிலை ஏற்படுகிறது.

அதிலும், முதுமை காலத்தில் ஏற்படும் பிரச்சனைகளை இளம் வயதிலேயே சந்திக்கும் நிலை ஏற்படுகிறது. எனவே தான், 35 வயதிற்குப் பிறகு ஆண்களுக்குக் கூடுதல் கவனிப்பு தேவைப்படுகிறது. இதில், 35 வயதிற்குப் பிறகு ஆண்கள் சந்திக்கும் பிரச்சனைகளையும், அவர்கள் என்னென்ன உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது குறித்தும் தாய் மற்றும் குழந்தை ஊட்டச்சத்து நிபுணரான ரமிடகவுர் அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அதைப் பற்றி இங்குக் காண்போம்.

இந்த பதிவும் உதவலாம்: குடல் ஆரோக்கியத்திற்கு சியா விதைகளின் நன்மைகள் - குடல்நோய் நிபுணர் விளக்கம்!

35 வயதிற்குப் பிறகு ஆண்கள் கட்டாயம் சேர்க்க வேண்டிய உணவுகள்

நிபுணரின் கருத்துப்படி, 35 வயதிற்குப் பிறகு உங்கள் உடலுக்கு கொஞ்சம் கூடுதல் கவனிப்பு தேவை. இதில், ஒவ்வொரு ஆணும் கண்டிப்பாக சேர்க்க வேண்டிய 5 சக்திவாய்ந்த உணவுகள் என்னென்ன என்பதைக் காணலாம்.

வழுக்கை பிரச்சனைக்கு

பொதுவாக, ஆண்களுக்கு இளம் வயதில் வழுக்கை ஏற்படுவதற்கு மரபணு முக்கிய காரணமாக அமைகிறது. மேலும் மன அழுத்தம் மற்றும் ஹார்மோன் மாற்றங்கள் போன்றவையும் காரணமாக இருக்கலாம்.

வழுக்கை பிரச்சனைக்கு நிபுணர் சில உணவைப் பகிர்ந்துள்ளார்.

பூசணி விதைகள்: இது துத்தநாகம், பைட்டோஸ்டெரால்கள் மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்ததாகும். இவை DHT ஹார்மோனை (முடி உதிர்தலுடன் தொடர்புடைய ஹார்மோன்) தடுக்க உதவுகிறது.

எப்படி எடுத்துக் கொள்வது:

பூசணி விதைகளைத் தினமும் 1 தேக்கரண்டி (உப்பு சேர்க்காத, பச்சையாகவோ அல்லது வறுத்ததாகவோ) சிற்றுண்டியாகவோ அல்லது பழத்துடன் சேர்த்தோ சாப்பிடலாம்.

விறைப்புத்தன்மை பிரச்சனை

ஆண்களுக்கு ஏற்படும் விறைப்புத்தன்மை பிரச்சனை என்பது உடலுறவுக்கு போதுமான கடினமான விறைப்பை அடைவதற்கும் அல்லது பராமரிப்பதற்கும் உள்ள இயலாமையைக் குறிப்பதாகும். இவை உடல் ரீதியான காரணங்களான நரம்பு கோளாறுகள், இரத்த ஓட்டக் குறைபாடு, ஹார்மோன் சமநிலையின்மை போன்றவற்றால் ஏற்படலாம். இது தவிர, மனரீதியான காரணங்களான மன அழுத்தம், பதட்டம், மனச்சோர்வு மற்றும் உறவுச் சிக்கல்களாலும் ஏற்படலாம்.

இந்த பிரச்சனையைப் போக்க நிபுணர் பகிர்ந்த உணவு

பீட்ரூட்: இது நைட்ரிக் ஆக்சைடு அளவை அதிகரிக்கவும், விறைப்புத்தன்மை தரத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.

எப்படி எடுத்துக் கொள்வது:

இதை உடற்பயிற்சி அல்லது இரவு உணவிற்கு 1 மணி நேரத்திற்கு முன்பாக தினமும் ½ கப் பீட்ரூட் சாற்றாக எடுத்துக் கொள்ளலாம்.

தொப்பை கொழுப்பு

ஆண்களின் தொப்பை கொழுப்பானது ஆரோக்கியமற்ற உணவு, உடற்பயிற்சியின்மை மற்றும் வயது காரணமாக ஏற்படும் டெஸ்டோஸ்டிரோன் குறைவு போன்ற பல்வேறு காரணங்களால் ஏற்படுகிறது. இது பல்வேறு நாள்பட்ட நோய்களுக்குக் காரணமாக அமையலாம்.

ஆளி விதைகள்: இதில் கரையக்கூடிய நார்ச்சத்து மற்றும் லிக்னான்கள் நிறைந்துள்ளன. இது ஹார்மோன்களை சமநிலைப்படுத்தி கொழுப்பு இழப்புக்கு வழிவகுக்கிறது.

எப்படி எடுத்துக் கொள்வது:

1 தேக்கரண்டி அரைத்த ஆளி விதையை தயிர் அல்லது ஸ்மூத்திகளில், காலை அல்லது மாலையில் சேர்க்கலாம்.

View this post on Instagram

A post shared by dt.ramitakaur | Maternal And Child Nutritionist | (@dt.ramitakaur)

குறைந்த ஆற்றலுக்கு

ஆரோக்கியமற்ற உணவுமுறை, மன அழுத்தம், இரும்புச்சத்து குறைபாடு, உடற்பயிற்சியின்மை மற்றும் தூக்கமின்மை போன்ற பல்வேறு காரணங்களால் ஆண்களில் குறைந்த ஆற்றலுக்குக் காரணமாக இருக்கலாம்.

முருங்கை தூள்: இரும்புச்சத்து, பி-வைட்டமின்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்தவை. இவை சோர்வை எதிர்த்துப் போராடவும் மற்றும் சகிப்புத்தன்மையை மேம்படுத்தவும் உதவுகின்றன.

எப்படி எடுத்துக் கொள்வது:

வெதுவெதுப்பான நீரில் 1/2-1 தேக்கரண்டி முருங்கை தூளைச் சேர்த்து வெறும் வயிற்றில் குடிக்கலாம்

குறைந்த லிபிடோவுக்கு

மன அழுத்தம், மனச்சோர்வு, கவலை போன்ற மன அழுத்தம் தொடர்பான காரணிகளாலும், மருந்துகள், குறைந்த டெஸ்டோஸ்டிரோன் அளவுகள் மற்றும் நாள்பட்ட நோய்கள் போன்றவற்றாலும் இந்த பிரச்சனை ஏற்படலாம். இதற்கான சிறந்த தீர்வு அஸ்வகந்தா ஆகும்.

அஸ்வகந்தா: இவை டெஸ்டோஸ்டிரோனை அதிகரிக்கவும் லிபிடோ பிரச்சினைகளைக் குறைக்கவும் அறியப்படும் விதானோலைடுகள் நிறைந்ததாகும்.

எப்படி எடுத்துக் கொள்வது:

படுக்கை நேரத்தில் 1 அஸ்வகந்தா மாத்திரையை சூடான பால் அல்லது தண்ணீருடன் சாப்பிடலாம்.

இந்த பதிவும் உதவலாம்: நோ குக்கிங்.. ஒரே வாரத்தில் 10 கிலோ வரை எடையைக் குறைக்கும் சூப்பர் உணவு ரெசிபிகள்!

Image Source: Freepik

Read Next

வயிறு உப்புசத்தை போக்கும் 10 அற்புத உணவுகள்.. டாக்டர் சௌரப் சேதி பரிந்துரை!

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

கௌதமி சுப்ரமணி

கௌதமி சுப்ரமணி

இளைய உள்ளடக்க எழுத்தாளர்

நான் கௌதமி சுப்ரமணியம், டிஜிட்டல் மீடியாவில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறேன். ஆரோக்கியம், உணவு, உடற்பயிற்சி, உடல் நலம், அழகு குறிப்பு போன்றவை தொடர்பான விவரங்களை ஆராய்ந்து கட்டுரைகளை எழுதி வருகிறேன். நான் எழுதும் ஒவ்வொரு பகுதியும் ஈர்க்கக்கூடியதாக இருப்பதை உறுதிசெய்து, விவரங்களுக்கு ஒரு தீவிரமான பார்வையை வளர்த்துக்கொண்டேன். மக்களுக்குத் தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான இலக்கை மேம்படுத்துவது எனது நோக்கம் ஆகும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

    Nov 07, 2025 18:30 IST

    Published By : கௌதமி சுப்ரமணி

Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content