Fri Sep 11, 2026 | 11:41 PM IST

Expert

குளித்த பிறகு இந்த தவறுகளை மறந்தும் செய்யாதீங்க.. உங்க முடி மற்றும் சருமம் பாதிக்கப்படலாம்

குளித்த பிறகு செய்யக்கூடிய சில தவறுகள் உங்கள் தலைமுடி மற்றும் சருமத்திற்கு தீங்கு விளைவிக்கக்கூடும். இத்தகைய பழக்கங்களைப் பற்றி தெரிந்து கொள்வது அவசியமாகும். இதில் குளித்த பிறகு செய்யக்கூடாத தவறுகள் சிலவற்றைக் காணலாம்.

அன்றாட வாழ்வில் குளியல் மேற்கொள்வது அவசியமானதாகக் கருதப்படுகிறது. இது நாள் முழுவதும் சோர்வைப் போக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பொதுவாக, குளிப்பது உடல் சோர்வைப் போக்கி புத்துணர்ச்சியை அளிக்கிறது. இது உடலைச் சுத்தப்படுத்தவும், பல நோய்களிலிருந்து நம்மை விலக்கி வைக்கவும் உதவுகிறது. ஆனால் பெரும்பாலும் குளித்த பிறகு நாம் செய்யும் சில தவறுகள் தலைமுடிக்கு மட்டுமல்லாமல், சருமத்திற்கும் பல தீங்குகளை ஏற்படுத்தக்கூடும்.

பொதுவாக, நாம் அனைவரும் அழகாகவும் கவர்ச்சியாகவும் இருக்க விரும்புகிறோம். நம் முகமும் கூந்தலும் அழகாக இருப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆனால் குளித்த பிறகு சில தவறுகள் அழகைக் கெடுப்பதாக உள்ளது. இதில் ஊட்டச்சத்து நிபுணர் மற்றும் உணவியல் நிபுணர் ஜூஹி கபூர் அவர்கள் குளித்த பிறகு நீங்கள் தவிர்க்க வேண்டிய 5 தவறுகள் குறித்து சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அதைப் பற்றி இங்குக் காண்போம்.

இந்த பதிவும் உதவலாம்: After Bath Mistakes: குளித்த உடனே இதை செய்தால் பெரிய பெரிய பாதிப்புகள் வரும்.. ரெடியா இருங்க!

குளித்த பிறகு தோல் மற்றும் முடியின் தரத்தை கெடுக்கும் தவறுகள்

குளித்த பிறகு முகத்தில் ஒரு துண்டைத் தேய்ப்பது

பெரும்பாலும், குளித்த பிறகு, மக்கள் தங்கள் முகத்தை ஒரு துண்டால் தேய்த்து, தண்ணீரை உலர வைப்பார்கள் அல்லது துடைப்பார்கள். இது சருமத்திற்கு சேதம் விளைவிக்கக் கூடும். முகத்தை சேதப்படுத்தாமல் இருக்க, துண்டை சருமத்தில் தேய்ப்பதற்கு பதிலாக, துண்டின் மேற்பரப்பைக் கொண்டு முகத்தை மெதுவாகத் தட்ட வேண்டும்.

குளித்த பிறகு தலைமுடியை ஒரு துண்டில் சுற்றிக் கொள்வது

குளித்த பிறகு தலைமுடியை ஒரு துண்டில் சுற்றிக் கொள்வதன் காரணமாக, தலைமுடி மிகவும் அதிகமாக பாதிக்கப்படலாம். இது முனைகள் பிளவுபடுவதற்கு ஒரு முக்கிய காரணமாக விளங்குகிறது. போதுவாக, குளித்த பிறகு, தலைமுடியை ஒரு துண்டில் முறுக்குவது மற்றும் இழுப்பது, முடிக்கு குறிப்பிடத்தக்க சேதத்தை ஏற்படுத்தலாம். மேலும், பலவீனமான முடி வேர்கள்அதற்கு பதிலாக, தலைமுடியை துண்டால் லேசாக உலர்த்தி, இயற்கையாக உலர விட வேண்டும்.

தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் கொண்ட கிரீம்கள் மற்றும் மாய்ஸ்சரைசர்களைப் பயன்படுத்துவது

குளித்த பிறகு, சருமம் மிகவும் வறண்டு போகக்கூடும். எனவே, சருமத்தை ஈரப்பதமாக்குவது மிகவும் முக்கியமாகும். எனினும், நம்மில் பெரும்பாலோர் குளித்த பிறகு மாய்ஸ்சரைசர்கள் மற்றும் தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் நிறைந்த கிரீம்களைப் பயன்படுத்துகிறோம். இது நம் சருமத்திற்கு மட்டுமே தீங்கு விளைவிக்கும். அதற்கு பதிலாக, சருமத்தை ஈரப்பதமாக்க எள் எண்ணெயைப் பயன்படுத்தலாம். எள் எண்ணெய் அனைத்து தோல் வகைகளுக்கும் நன்மை பயக்கும். இதற்கு, 4-5 சொட்டு எள் எண்ணெயை எடுத்து சருமத்தில் மசாஜ் செய்ய வேண்டும்.

இந்த பதிவும் உதவலாம்: பெண்கள் குளிக்கும்போது இந்த 5 தவறுகளை ஒருபோதும் செய்யக்கூடாது?

ஈரமான முடியை சீவுவது

பலர் குளித்த உடனேயே தலைமுடியை சீவத் தொடங்கி விடுகின்றனர். ஏனெனில் இது சிக்கலை எளிதாக நீக்கும் என்று நினைக்கிறார்கள். ஆனால் அது உண்மையல்ல. அவ்வாறு செய்வது, தலைமுடியை சேதப்படுத்துவதுடன், அதன் தரத்தையும் கெடுக்கக்கூடும். எனவே இதைத் தவிர்த்து, தலைமுடியை சீவுவதற்கு முன்பு இயற்கையாக உலர விட வேண்டும்.

முகத்தை மட்டும் ஈரப்பதமாக்குவது

நாம் அனைவரும் குளித்த பிறகு நம் முகங்களை ஈரப்பதமாக்குவதை உறுதி செய்கிறோம். ஆனால் நம் உடலின் மற்ற பகுதிகளை ஈரப்பதமாக்குவதில்லை. குளித்த பிறகு, நம் உடல் முழுவதும் வறண்டு போகக்கூடும். எனவே, முகத்தையும், உடலின் மற்ற பகுதிகளையும் ஈரப்பதமாக்குவது முக்கியமாகும். எனவே, சருமத்தை ஈரப்பதமாக்குதல் முக்கியமானது. இதற்கு, எள் எண்ணெய், தேங்காய் எண்ணெய் அல்லது இயற்கை பொருட்களால் செய்யப்பட்ட மாய்ஸ்சரைசர்களைப் பயன்படுத்தலாம்.

இந்த பதிவும் உதவலாம்: குளிக்கும் போது நீங்க செய்ய கூடாத தவறுகள் என்னென்ன தெரியுமா? மருத்துவர் தரும் விளக்கம்

Image Source: Freepik

Read Next

நகங்கள் நல்லா லுக்கா இருக்கணுமா? இந்த 5 எண்ணெய் உங்களுக்கு உதவும்.. மருத்துவர் பரிந்துரை

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

கௌதமி சுப்ரமணி

கௌதமி சுப்ரமணி

இளைய உள்ளடக்க எழுத்தாளர்

நான் கௌதமி சுப்ரமணியம், டிஜிட்டல் மீடியாவில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறேன். ஆரோக்கியம், உணவு, உடற்பயிற்சி, உடல் நலம், அழகு குறிப்பு போன்றவை தொடர்பான விவரங்களை ஆராய்ந்து கட்டுரைகளை எழுதி வருகிறேன். நான் எழுதும் ஒவ்வொரு பகுதியும் ஈர்க்கக்கூடியதாக இருப்பதை உறுதிசெய்து, விவரங்களுக்கு ஒரு தீவிரமான பார்வையை வளர்த்துக்கொண்டேன். மக்களுக்குத் தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான இலக்கை மேம்படுத்துவது எனது நோக்கம் ஆகும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

    Oct 25, 2025 22:36 IST

    Published By : கௌதமி சுப்ரமணி

Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content