Fri Sep 11, 2026 | 10:18 PM IST

Doctor Verified

உச்சந்தலையில் தோன்றும் சிவப்பு நிற தடிப்புகள்.. அவற்றை எவ்வாறு அகற்றுவது? மருத்துவர் தரும் டிப்ஸ்

உங்கள் உச்சந்தலையில் அடிக்கடி அரிப்பு ஏற்பட்டால், அது ஒரு பிரச்சனையின் அறிகுறியாகும். இதில் உள்ள சில குறிப்புகளைப் பின்பற்றுவதன் மூலம், இந்தப் பிரச்சனையிலிருந்து நீங்கள் விடுபடலாம். இதில் அதைப் பற்றி விரிவாகக் காண்போம்.

குளிர்ந்த காலநிலை அனைவருக்கும் நிம்மதியான மகிழ்ச்சியான  காலமாக இருப்பினும் பல்வேறு பிரச்சனைகளைச் சந்திக்கக்கூடிய காலமாகவும் அமைகிறது. இந்த வரிசையில் முடி தொடர்பான பிரச்சனைகளும் அடங்குகிறது. ஏனெனில், குளிர்ந்த கால நிலையில் நிலவும் அதிக ஈரப்பதம் காரணமாக முடி அடிக்கடி வறண்டு போகும் சூழலுக்கு உள்ளாகிறது. இது தவிர முடி உதிர்தல், முடி வறட்சி,  வறண்ட உச்சந்தலை, உச்சந்தலை அரிப்பு, எரிச்சல் நரைமுடி மற்றும் இன்னும் பல பிரச்சனைகளைச் சந்திக்க நேரிடலாம்.

உச்சந்தலைப் புடைப்புகள்

இந்நிலையில் பலரும் சந்திக்கும் பொதுவான பிரச்சனைகளில் ஒன்றாக உச்சந்தலை அரிப்பு அமைகிறது. ஆனால் அடிக்கடி உச்சந்தலையில் அரிப்பு ஏற்படுவது ஆரோக்கியமானது அல்ல. இதற்குப் பின்னால் பல்வேறு காரணங்கள் இருக்கலாம். அவைப் பொடுகு, வறட்சி உச்சந்தலை மற்றும் தோல் அலர்ஜி ஆகும். சில சமயங்களில் அதிகப்படியான அறிப்பு காரணமாக,  தடிப்புகள் மற்றும் இரத்தப்போக்கு ஏற்படலாம். இந்த இரண்டு நிலைகளுமே ஆரோக்கியமற்றதாகக் கருதப்படுகிறது.

எனவே உச்சந்தலையில் ஏன் அரிப்பு ஏற்படுகிறது என்பதைத் தெரிந்து கொள்வது அவசியமாகும். மேலும் சரியான நேரத்தில் சிகிச்சைப் பெறுவது முக்கியம். இந்நிலையில் உச்சந்தலையில் ஏற்படும் அரிப்பு காரணமாகச் சிவப்பு படைப்புகள்  ஏற்பட்டிருப்பின், அதற்கான காரணங்களையும் அவற்றை அகற்றும் முறைகளையும் குறித்து ரஜோரி கார்டனில் உள்ள காஸ்மெடிக் ஸ்கின் கிளினிக்கில் உள்ள அழகுசாதன நிபுணர் மற்றும் தோல் மருத்துவர் டாக்டர் கருணா மல்ஹோத்ரா அவர்கள் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

உச்சந்தலையில் அரிப்பு ஏற்படுவதற்கான காரணங்கள்

  • உச்சந்தலையில் அதிகப்படியான வறட்சி
  • தலையில் பொடுகு இருப்பது
  • ஆட்டோ இம்யூன் நோய் சொரியாசிஸ் இருப்பது
  • தோல் அழற்சி தோல் பிரச்சினைகள் இருப்பது
  • பூஞ்சைத் தொற்று இருப்பது
  • தலையில் அதிகப் பேன்கள் இருப்பது

image

scalp-itching-Main

உச்சந்தலையில் அரிப்பினால் ஏற்படும் சிவப்பு புடைப்புகளை அகற்றுவது எப்படி?

அதிகம் கழுவுவதைத் தவிர்ப்பது

தலை முடியை அதிகம் கழுவுவதைத் தவிர்க்க வேண்டும், ஏனெனில், அதிகளவு முடியைக் கழுவுவதால் உச்சந்தலையில் அரிப்பு ஏற்படுத்தி பருக்களை ஏற்படுகிறது. எனவே வாரத்திற்கு இரண்டு முதல் மூன்று முறைத் தலையை கழுவினால் போதும் என மருத்துவர் விளக்குகிறார்.  இல்லையெனில் இவை உச்சந்தலைக்குத் தீங்கு விளைவிக்கலாம்.  மேலும் அதை உலர்த்த செய்கிறது.

இந்த பதிவும் உதவலாம்: இளவயதில் நரைமுடியா? கவலை வேண்டாம்.. வீட்டிலேயே தீர்வு உள்ளது..

உச்சந்தலையில் மசாஜ் செய்வது

தலைமுடி அரிப்பினால் ஏற்படக்கூடிய சிவத்தல் மற்றும் தடுப்புகளைத் தவிர்க்க விரும்பினால், தலைமுடிக்குத் தொடர்ந்து எண்ணெய் தேய்ப்பது நல்லது.  இவ்வாறு எண்ணெய் தேய்ப்பது உச்சந்தலையை ஈரப்பதமாக வைத்திருக்கவும் மற்றும் அறிவு பிரச்சனைகளைக் குறைக்கவும் உதவுகிறது.  மேலும் தொடர்ந்து தலைமுடிக்கு எண்ணெய் தேய்ப்பது,  முடியின் அளவை அதிகரிக்கவும் உதவுகிறது.

முடிக்கு ஏற்ற பொருட்களைப் பயன்படுத்துவது

உச்சந்தலைக்கு நாம் பயன்படுத்தும் எந்தப் பொருட்களாக இருந்தாலும் அது தரமானதாக இருக்க வேண்டும்.  மேலும் முடி மற்றும் உச்சந்தலையைச் சேதப்படுத்தும் பொருட்களைத் தவிர்ப்பதும் அவசியமாகும்.  அதன்படி,  சல்பேட்டுகள் மற்றும் பாராபென்கள்  கொண்ட முடி பொருட்களைத் தவிர்க்க  நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.  ஏனெனில் இதை உச்சந்தலையில் சேதத்தை ஏற்படுத்தலாம்.  மேலும் முடி வளர்ச்சியைப் பாதிக்கலாம்.

தலைமுடியைத் தவறாமல் கழுவுவது

உச்சந்தலையில் அதிகப்படியான அரிப்பு ஏற்பட்டால், அதில் அழுக்கு இருப்பது காரணமாக இருக்கலாம்.  இந்நிலையில் அதிகமாக அரிப்பு ஏற்படுவது சிவப்பு புடைப்புகள் மற்றும் தடுப்புகளுக்கு வழி வகுக்கிறது.  எனினும் இந்தப் பிரச்சனையிலிருந்து விடுபட,  தலை முடியைத் தவறாமல் கழுவுவது முக்கியமாகும்.  இது உச்சந்தலையில் அழுக்கு மற்றும் அதிகப்படியான எண்ணெய் படிவதைத் தடுக்க உதவுகிறது. மேலும் இது பிரச்சனையிலிருந்து நிவாரணம் தருகிறது.

image

dermatologist-shares-hair-care-myths-you-need-to-stop-repeating-Main-1765002548372.jpg

முடிவுரை

சில சமயங்களில் வறட்சி மற்றும் பேன் போன்ற பிரச்சனைகளின் காரணமாக உச்சந்தலையில் அரிப்பு ஏற்படலாம்.  இந்தப் பிரச்சனையை தவிர்ப்பதற்கு உச்சந்தலையை நன்கு கவனித்துக் கொள்வது முக்கியமாகும்.  எனவே,  தொடர்ந்து எண்ணெய் தடவி முடிக்கு ஏற்ற பொருட்களைப் பயன்படுத்தி வருவதன் மூலம் அரிப்பைக் குறைத்து சொறி ஏற்படும் அபாயத்தைக் குறைக்க முடியும்.

பொறுப்புத்துறப்பு

இதில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. எனினும், தனிப்பட்ட தகவல்களைப் பெற விரும்புபவர்கள் அல்லது புதிய முயற்சிகளைக் கையாள விரும்புபவர்கள் எப்போதும் தகுதிவாய்ந்த நிபுணரை அணுகுவது நல்லது.

இந்த பதிவும் உதவலாம்: குளிர்காலத்தில் வறண்ட முடியை ஈரப்பதமாக வைக்க தேனுடன் இந்த ஒரு எண்ணெயைச் சேர்த்துக்கோங்க 

Image Source: Freepik

Read Next

குளிர்காலத்தில் வறண்ட முடியை ஈரப்பதமாக வைக்க தேனுடன் இந்த ஒரு எண்ணெயைச் சேர்த்துக்கோங்க

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

கௌதமி சுப்ரமணி

கௌதமி சுப்ரமணி

இளைய உள்ளடக்க எழுத்தாளர்

நான் கௌதமி சுப்ரமணியம், டிஜிட்டல் மீடியாவில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறேன். ஆரோக்கியம், உணவு, உடற்பயிற்சி, உடல் நலம், அழகு குறிப்பு போன்றவை தொடர்பான விவரங்களை ஆராய்ந்து கட்டுரைகளை எழுதி வருகிறேன். நான் எழுதும் ஒவ்வொரு பகுதியும் ஈர்க்கக்கூடியதாக இருப்பதை உறுதிசெய்து, விவரங்களுக்கு ஒரு தீவிரமான பார்வையை வளர்த்துக்கொண்டேன். மக்களுக்குத் தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான இலக்கை மேம்படுத்துவது எனது நோக்கம் ஆகும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

    Dec 22, 2025 08:01 IST

    Published By : கௌதமி சுப்ரமணி

Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content