Fri Sep 11, 2026 | 11:45 PM IST

Doctor Verified

உணவுக்கோளாறு காரணமாக முடி உதிர்தல் ஏற்படுமா? மருத்துவரிடமிருந்து தெரிந்து கொள்ளுங்கள்

சில நேரங்களில், எடை அதிகரிக்கும் என்ற பயத்தால் மக்கள் உணவை உட்கொள்ள பயப்படுகின்றனர். அதே போல, சில நேரங்களில் அதிகமாகவும் சாப்பிடுவார்கள். இவை இரண்டுமே உணவுக் கோளாறுகளாகக் கருதப்படுகிறது. இதில் உணவுக் கோளாறுகள் முடி உதிர்தலை எவ்வாறு ஏற்படுத்தும் என்பது குறித்து காணலாம்.

இன்றைய நவீன காலத்தில் மோசமான வாழ்க்கைமுறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுமுறையின் காரணமாக பலரும் பலதரப்பட்ட பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். இதனால் அவர்களின் சருமம் மற்றும் கூந்தல் ஆரோக்கியமும் பாதிக்கப்படும் என்பது உங்களுக்குத் தெரியுமா? இன்றைய வேகமான வாழ்க்கையில், மக்கள் தங்கள் உடல் மற்றும் தோற்றம் குறித்து மிகவும் விழிப்புணர்வை அடைந்துள்ளனர். இதன் காரணமாக, உடற்தகுதி மற்றும் சரியான உடலைப் பெறுவதற்கான தேடலில் அவர்கள் பெரும்பாலும் தங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் பழக்கங்களையே ஏற்றுக் கொள்கின்றனர்.

இவற்றில் உணவுக்கோளாறுகள் அடங்குகிறது. இவை உடலின் உள் உறுப்புகளை மட்டுமல்லாமல், வெளிப்புறத்திலும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். அவ்வாறே, இவை முடியின் அழகு மற்றும் ஆரோக்கியத்தை பாதிக்கக்கூடும். இதில் ஸ்ரீ பாலாஜி ஆக்‌ஷன் மெடிக்கல் இன்ஸ்டிடியூட்டின் மூத்த தோல் மருத்துவ ஆலோசகர் டாக்டர் விஜய் சிங்கால் அவர்கள், உணவுக் கோளாறுகள் எவ்வாறு முடி உடைப்பு, முடி உதிர்தல் மற்றும் முடி உதிர்தலை ஏற்படுத்தும் என்பதை விளக்குகிறார். அதைப் பற்றி இங்குக் காண்போம்.

உணவுக் கோளாறு என்றால் என்ன?

உணவுக் கோளாறு என்பது அசாதாரண உணவு மற்றும் குடிப்பழக்க நடத்தைகளால் வகைப்படுத்தப்படும் ஒரு மன அல்லது உடல் நிலையைக் குறிப்பதாகும். இதன் முக்கிய வகைகள் கீழே விவரிக்கப்பட்டுள்ளன.

பசியின்மை நெர்வோசா

இந்த வகையில், ஒருவர் சாப்பிட பயப்படுகின்றனர். உடல் எடை குறைவாக இருந்தாலும் தன்னை கொழுப்பாகக் கருதுவர்.

புலிமியா நெர்வோசா

இதில் ஒரு நபர் அதிகமாக சாப்பிட்டுவிட்டு, பின்னர் வாந்தி அல்லது மருந்து மூலம் உணவை அகற்ற முயற்சிக்கிறார்.

அதிகமாக உண்ணும் கோளாறு

இந்த வகை கோளாறில், ஒருவர் மீண்டும் மீண்டும் அதிக அளவு உணவைச் சாப்பிடுவர். ஆனால் பின்னர் குற்ற உணர்ச்சியுடன் இருப்பார்.

இந்த எல்லா சூழ்நிலைகளிலும், உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல் போகலாம். இவை முடியின் ஆரோக்கியத்தை நேரடியாகப் பாதிக்கிறது.

இந்த பதிவும் உதவலாம்: தைராய்டு உள்ளவர்களுக்கு முடி உதிர்வு ஏற்படுதா? இந்த 5 குறிப்புகளைப் பின்பற்றுங்க

தலைமுடிக்கு என்ன ஊட்டச்சத்து தேவை?

பொதுவாக, நமது தலைமுடி புரதத்தால் ஆனதாகும். குறிப்பாக கெரட்டின் எனப்படும் புரதம் முடிஆரோக்கியத்திற்கு உதவுகிறது. மேலும், உடலுக்குத் தேவையான புரதம், இரும்பு, துத்தநாகம், பயோட்டின், வைட்டமின் டி மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் ஆரோக்கியமான மற்றும் வலுவான கூந்தலுக்கும் அவசியமாகும். இந்நிலையில், ஒருவர் உணவுக் கோளாறால் அவதிப்படும்போது, இந்த ஊட்டச்சத்துக்கள் குறைந்து, முடி வேர்களை பலவீனப்படுத்தி, முடி உடைப்பு அல்லது முடி உதிர்தலுக்கு வழிவகுக்கிறது.

உணவுக் கோளாறுக்கும், முடி ஆரோக்கியத்திற்கும் உள்ள தொடர்பு

புரதக் குறைபாடு

முடி வளர்ச்சியில் புரதம் முக்கிய பங்கு வகிக்கிறது. உணவுக் கோளாறுகள் உள்ளவர்கள் பெரும்பாலும் புரதம் நிறைந்த உணவுகளைத் தவிர்க்கின்றனர். இதனால் உடலில் புரதக்குறைபாடு ஏற்படுகிறது. இதனால், முடி பலவீனமடைந்து முடி உதிர்தல் ஏற்படுகிறது.

வைட்டமின் மற்றும் தாதுப் பற்றாக்குறைகள்

வைட்டமின்கள் பி மற்றும் டி, துத்தநாகம் மற்றும் பயோட்டின் குறைபாடுகள் முடி வளர்ச்சியைத் தடுத்து, முடியை மெல்லியதாகவும் உடையக்கூடியதாகவும் மாற்றுகிறது.

இரும்புச்சத்து குறைபாடு (இரத்த சோகை)

உணவுக் கோளாறுகள் இரும்புச்சத்து அளவைக் குறைத்து, இரத்த சோகைக்கு வழிவகுக்கிறது. இது முடி வேர்களுக்கு போதுமான ஆக்ஸிஜனைப் பெறுவதைத் தடுக்கிறது, இதனால் முன்கூட்டியே முடி உதிர்தல் ஏற்படுகிறது.

ஹார்மோன் சமநிலையின்மை

உணவுக் கோளாறுகள் உடலின் ஹார்மோன் சமநிலையையும் சீர்குலைக்கிறது. குறிப்பாக, தைராய்டு மற்றும் இன்சுலின் போன்ற ஹார்மோன்களைப் பாதிக்கிறது. இது முடியின் ஆரோக்கியத்தையும் பாதிக்கக்கூடும்.

மன அழுத்தம் மற்றும் மன உறுதியற்ற தன்மை

உணவுக் கோளாறுகள் பெரும்பாலும் மன அழுத்தம், மனச்சோர்வு மற்றும் சுய வெறுப்புடன் தொடர்புடையவையாகும். இதில் மோசமான மன ஆரோக்கியமும், முடி உதிர்தலுக்கு ஒரு காரணமாக இருக்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்: முடி உதிர்வை நிறுத்த வீட்டிலேயே செய்யக்கூடிய இயற்கை வைத்தியங்கள் – நிபுணர் டிம்பிள் ஜங்கடா பரிந்துரை

உணவுக் கோளாறால் பாதிக்கப்பட்ட ஒருவரின் தலைமுடியில் ஏற்படும் பிரச்சனைகள்

  • உச்சந்தலையின் தோற்றம்
  • அதிகப்படியான முடி உதிர்தல்
  • துலக்கும்போது அல்லது கையாளும்போது உடைப்பு
  • முடி மெலிதல்.மற்றும் முரட்டுத்தனமாக இருப்பது
  • புதிய முடி வளர்ச்சி இல்லாமை

ஒருவர் இந்த அறிகுறிகளை அனுபவிப்பதுடன், அசாதாரண உணவுப் பழக்கத்தையும் கொண்டிருந்தால், அது உணவுக் கோளாறின் அறிகுறியாக இருக்கலாம்.

உணவுக் கோளாறுகளால் ஏற்படும் முடி உதிர்வை எவ்வாறு தடுப்பது?

  • புரதம், இரும்புச்சத்து, வைட்டமின்கள் பி மற்றும் டி, ஒமேகா-3 மற்றும் துத்தநாகம் போன்ற ஊட்டச்சத்துக்களை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். முட்டை, பருப்பு வகைகள், பச்சை காய்கறிகள், நட்ஸ் மற்றும் பால் பொருட்கள் கூந்தலுக்கு நன்மை பயக்கும்.
  • உணவுக் கோளாறுகள் ஒரு மன நிலையாகும். எனவே ஒரு மனநல மருத்துவர் அல்லது ஆலோசகரின் உதவியை நாடுவது முக்கியமாகும். இதில் பெறும் சிகிச்சையானது, ஒரு நபர் தங்களை நன்கு புரிந்துகொள்ள உதவுகிறது.
  • எனவே, முடி உதிர்தல் பிரச்சனை தொடர்ந்து இருந்தால், மருத்துவரிடம் ஹார்மோன் பரிசோதனை செய்து கொள்வது அவசியமாகும்.
  • யோகா மற்றும் தியானம் மன சமநிலையைப் பராமரிக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது மன அழுத்தத்தைக் குறைத்து முடி உதிர்தலைத் தடுக்க உதவுகிறது.

உணவுக் கோளாறுகள் என்பது எடை அல்லது செரிமானத்தை மட்டுமல்லாமல், அழகையும், குறிப்பாக உங்கள் தலைமுடியையும் பாதிக்கும் ஒரு கடுமையான பிரச்சனையாக கருதப்படுகிறது. அதே சமயம், இதை கவனிக்காமல் விட்டால், அவை நிரந்தர சேதத்தை ஏற்படுத்தக்கூடும். எனவே, சீரான உணவைப் பராமரிப்பது, மன ஆரோக்கியத்தைக் கவனித்துக்கொள்வது மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுவதன் மூலம், இந்தப் பிரச்சனையைத் தடுப்பது மட்டுமல்லாமல், முடியின் அழகை மீண்டும் பெறலாம்.

இந்த பதிவும் உதவலாம்: 30 வயதில் வழுக்கையா? அதை இயற்கையாகவே போக்க இந்த குறிப்புகளைப் பின்பற்றுங்க.. மருத்துவர் தரும் விளக்கம்

Image Source: Freepik

Read Next

30 வயதில் வழுக்கையா? அதை இயற்கையாகவே போக்க இந்த குறிப்புகளைப் பின்பற்றுங்க.. மருத்துவர் தரும் விளக்கம்

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

கௌதமி சுப்ரமணி

கௌதமி சுப்ரமணி

இளைய உள்ளடக்க எழுத்தாளர்

நான் கௌதமி சுப்ரமணியம், டிஜிட்டல் மீடியாவில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறேன். ஆரோக்கியம், உணவு, உடற்பயிற்சி, உடல் நலம், அழகு குறிப்பு போன்றவை தொடர்பான விவரங்களை ஆராய்ந்து கட்டுரைகளை எழுதி வருகிறேன். நான் எழுதும் ஒவ்வொரு பகுதியும் ஈர்க்கக்கூடியதாக இருப்பதை உறுதிசெய்து, விவரங்களுக்கு ஒரு தீவிரமான பார்வையை வளர்த்துக்கொண்டேன். மக்களுக்குத் தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான இலக்கை மேம்படுத்துவது எனது நோக்கம் ஆகும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

    Oct 05, 2025 17:36 IST

    Published By : கௌதமி சுப்ரமணி

Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content