Fri Sep 11, 2026 | 10:45 PM IST

Doctor Verified

கர்ப்ப காலத்தில் பால் குடிப்பது குழந்தையின் எடையை அதிகரிக்க உதவுமா? மருத்துவர் தரும் விளக்கம்

கர்ப்ப காலத்தில் பால் குடிப்பதை மருத்துவர்கள் பெரும்பாலும் பரிந்துரைக்கின்றனர். உண்மையில் இந்த கட்டத்தில் பால் குடிப்பது மிகவும் முக்கியமானது. இதில் கர்ப்பிணி பெண்கள் பால் குடிப்பதால் என்னென்ன நன்மைகள் ஏற்படும் என்பது குறித்து காணலாம்.

கர்ப்ப காலத்தில் பெண்கள் தங்கள் உணவு முறையில் கவனமாக இருப்பது மிகவும் அவசியமாகும். ஏனெனில்,  இந்தக் காலகட்டத்தில் அவர்கள் செய்யும் சிறிய தவறுகள் கூட குழந்தைகள் மற்றும் தாயின் ஆரோக்கியத்தைப் பாதிக்கக்கூடும்.  ஆனால் பெரும்பாலான நேரங்களில் கர்ப்பிணி பெண்கள் உணவைப் பராமரிப்பது கடினமாக விடுகிறது.  உண்மையில் மனநிலை மாற்றங்களுடன் உணவு மற்றும் உணவு பழக்கங்களைச் சமநிலைப்படுத்துவது ஒரு பெரிய பிரச்சினையாகக் கருதப்படுகிறது.  இந்நிலையில்,  மருத்துவரைப் பரிந்துரைக்கக்கூடிய உணவு அட்டவணையைப் பின்பற்றுவது கடினமாகிவிடும்.

அவ்வாறே, கர்ப்ப காலத்தில் பெண்கள் தினமும் பால் குடிக்க அறிவுறுத்தப்படுகின்றனர்.  ஆனால், பெரும்பாலான பெண்கள் இதை விரும்புவதில்லை.  உண்மையில், கர்ப்பிணி பெண்கள் பால் குடிப்பது குழந்தையின் ஆரோக்கியத்திற்கு நன்மைப் பயக்கும்.  ஆனால் இதில் பலருக்கும் உண்டாகும் ஒரு கேள்வியாக,  கர்ப்ப காலத்தில் பால் குடிப்பது குழந்தையின் எடையை அதிகரிக்க உதவுமா?  என்பது.  இது குறித்த தகவல்களைப் பெங்களூரு ஆஸ்டர்ச் சிஎம்ஐ மருத்துவமனையின் மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவ முன்னணி ஆலோசகர் டாக்டர் என் சப்னா லுல்லா அவர்கள் பகிர்ந்துள்ளார்.

கர்ப்பிணி பெண்கள் பால் குடிப்பதால் குழந்தையின் எடை அதிகரிக்குமா?

இது குறித்து மருத்துவர் கூறியதாவது, ஆம் கர்ப்ப காலத்தில்  பெண்கள் பால் குடிப்பது, ஆரோக்கியமான கரு வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.  ஆனால் இது குழந்தையின் எடையை அதிகரிப்பதற்கான நேரடியான வழி அல்ல. பாலில் வைட்டமின் பி12, டி,  புரதம் மற்றும் கால்சியம் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.  இவை எலும்பு வளர்ச்சி மற்றும் தசை வளர்ச்சிக்குப் பங்களிக்கிறது.  எனவே நிபுணர்கள் தினமும் 1-2 பரிமாண பால் அல்லது பால் பொருட்களைச் சேர்ப்பது தாய் மற்றும் வளரும் குழந்தையின் ஊட்டச்சத்துத் தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவும் என்று குறிப்பிடுகின்றனர்.

முழு கொழுப்புள்ள பால் கூடுதல் கலோரிகளை வழங்குகிறது.  இது தாயின் ஒட்டுமொத்த ஊட்டச்சத்துச் சமநிலையில் இருந்தால் கருவின் எடையைச் சிறிது பாதிக்கக்கூடும்.  எனினும் குழந்தையின் உடல் எடையை அதிகரிப்பதற்குப் பாலை மட்டுமே நம்பியிருக்காமல் இருப்பது முக்கியம்.

image

pregnancy-massage-benefits-in-tamil-01-1751214488024.jpg

கர்ப்ப காலத்தில் பெண்கள் பால் குடிப்பதன் நன்மைகள்

கர்ப்பிணி பெண்களுக்குப் பால் ஒரு முழுமையான உணவாகப் பயன்படுகிறது. ஏனெனில் இதில் பல்வேறு வகையான வைட்டமின்கள், புரதங்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன.  இவை கர்ப்ப காலத்தில் தாய் மற்றும் சேய் இருவரையும்  ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.  இது உடல் பாகங்களின் ஆரோக்கியமான வளர்ச்சியை ஆதரிப்பதுடன் ஏராளமான நன்மைகளையும் வழங்குகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Drinking Milk During Pregnancy: கர்ப்பிணி பெண்கள் ஒரு நாளைக்கு எவ்வளவு பால் குடிக்க வேண்டும்? இதோ பதில்!

வைட்டமின் டி நிறைந்த பால்

பாலில் உள்ள வைட்டமின் டி ஊட்டச்சத்துக்கள் தாய் மற்றும் சேய் இருவருக்கும் அவசியமான ஒன்றாகும்.  இது ஆரோக்கியமான எலும்புகள் மற்றும் கால்சியம் உறிஞ்சதலைப் பராமரிக்க உதவுகிறது. மேலும் இது கர்ப்ப காலத்தில் ஹார்மோன் ஆரோக்கியத்தைப் பராமரிக்கவும் உதவுகிறது.  இது குழந்தையின் நரம்பு ஆரோக்கியத்திற்கு முக்கியமாகும்.

புரதம் நிறைந்தது

பாலில் உள்ள புரதம்,  குழந்தையின் எலும்பு மற்றும் தசைகளை உருவாக்கவும் தாயை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உதவுகிறது.  குறிப்பாகக் கர்ப்பத்திற்கு பிறகு எலும்பு மீட்புக்கும் பால் நுகர்வு உதவுகிறது.  உடலில் உள்ள பல்வேறு தசைகள் நரம்புகள் மற்றும் திசுக்களின் வளர்ச்சிக்குப் புரதம் மிகவும் அவசியம்.

கால்சியம் நிறைந்தது

பாலில் உள்ள கால்சியம் ஊட்டச்சத்துக்கள்,  எலும்புகளைப் பராமரிக்க உதவுகிறது.  இதை உட்கொள்வதன் மூலம் குழந்தைகளின் எலும்புகள் சரியாக வளர்ச்சியடைந்து வலுவடைய வைக்கிறது.  கர்ப்பிணி பெண்கள் பால் உட்கொள்வது நன்மைப் பயக்கும்.

உடலை நீரேற்றமாக வைக்க

கர்ப்பிணி பெண்கள் உடலை நீரேற்றமாக வைத்திருப்பதற்கு,  அவர்கள் ஏராளமான திரவங்களை உட்கொள்ள வேண்டும்.  இந்நிலையில் அவர்கள் பால் அருந்துவதில் உடலை நீரேற்றம் ஆக்குவது மட்டுமல்லாமல் உடலில் அனைத்துப் பாகங்களையும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.  எனவே சிறந்த நீரேற்றத்திற்குக் கர்ப்பிணி பெண்கள் பால் அருந்தலாம்.

image

Is-it-OK-to-drink-1-Litre-of-milk-a-day-(2)-1753338473601.jpg

கர்ப்பிணி பெண்கள் எப்போது, எவ்வளவு, மற்றும் எப்படிப் பால் குடிக்க வேண்டும்?

  • கர்ப்ப காலத்தில் தினமும் குறைந்தது ஒரு கிளாஸ் பால் குடிக்க வேண்டும்.
  • மேலும் நீரேற்றத்திற்கு வேறு எதுவும் இல்லை என்றாலும் நாள் முழுவதும் இரண்டு கிளாஸ் வெதுவெதுப்பான பால் அருந்துவது நன்மைத் தரும்.
  • பாலில் இருந்து அமிலத்தன்மை, வயிற்று வலி பிரச்சனைகள்ஏற்பட்டால்,   மேலும், ஏதேனும் செரிமான பிரச்சனைகள் இருந்தால் குளிர்ந்த பாலைக் குடிக்கலாம். இதைச் செரிமான பிரச்சனைகளைத் தடுக்க உதவுகிறது.
  • இது தவிர, ஒரு நாளைக்கு ஒரு முறை அல்லது படுக்கைக்கு முன் தேன் அல்லது வெள்ளத்துடன் வெதுவெதுப்பான பால் குடிப்பதும் நன்மைத் தரும்.  இவைச் செரிமானத்தை மேம்படுத்துவதுடன் ஆற்றலையும் வழங்குகிறது.
  • எனினும் வெறும் வயிற்றில் பால் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும் ஏனெனில் இது வாயு, அமிலத்தன்மைப் பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

குறிப்பு

கர்ப்ப காலத்தில் பெண்கள் பச்சையாகவோ அல்லது சூடாக்கப்படாத பாலை குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். இது தாய் மற்றும் குழந்தை இருவருக்கும் தீங்கு விளைவிக்கும். மேலும் அன்றாட உணவில் பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், புரதம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்த சத்தான உணவை  சேர்த்துக்கொள்ள வேண்டும். எனினும், கர்ப்ப காலத்தில் பெண்கள் எந்த மாற்றங்களையும் செய்வதற்கு முன்பாகப் பெண்கள் எந்த மாற்றங்களையும் செய்வதற்கு முன்பாக மருத்துவர் அணுகுவது அவசியம்.  குறிப்பாகக் கர்ப்ப காலத்தில் கருவின் வளர்ச்சி அல்லது எடை குறித்து கவலைப்படுபவர்கள்,  பெரிய உணவு முறை மாற்றங்களைச் செய்வதற்கு முன்பாக மருத்துவரைக் கலந்தாலோசிக்க வேண்டும்.

பொறுப்புத்துறப்பு

இதில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. எனினும், தனிப்பட்ட தகவல்களைப் பெற விரும்புபவர்கள் அல்லது புதிய முயற்சிகளைக் கையாள விரும்புபவர்கள் எப்போதும் தகுதிவாய்ந்த நிபுணரை அணுகுவது நல்லது.

இந்த பதிவும் உதவலாம்: கர்ப்ப காலத்தில் எந்த பால் ஆரோக்கியத்திற்கு நல்லது?

Image Source: Freepik

Read Next

கருத்தரிக்க முயற்சிக்கும் போது இந்த 3 விஷயங்களை மறக்காம தெரிஞ்சிக்கோங்க..

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

கௌதமி சுப்ரமணி

கௌதமி சுப்ரமணி

இளைய உள்ளடக்க எழுத்தாளர்

நான் கௌதமி சுப்ரமணியம், டிஜிட்டல் மீடியாவில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறேன். ஆரோக்கியம், உணவு, உடற்பயிற்சி, உடல் நலம், அழகு குறிப்பு போன்றவை தொடர்பான விவரங்களை ஆராய்ந்து கட்டுரைகளை எழுதி வருகிறேன். நான் எழுதும் ஒவ்வொரு பகுதியும் ஈர்க்கக்கூடியதாக இருப்பதை உறுதிசெய்து, விவரங்களுக்கு ஒரு தீவிரமான பார்வையை வளர்த்துக்கொண்டேன். மக்களுக்குத் தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான இலக்கை மேம்படுத்துவது எனது நோக்கம் ஆகும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

    Dec 22, 2025 09:15 IST

    Published By : கௌதமி சுப்ரமணி

Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content