Expert

கருத்தரிக்க முயற்சிக்கும் போது இந்த 3 விஷயங்களை மறக்காம தெரிஞ்சிக்கோங்க..

பெரும்பாலான பெண்களிடம் கருவுறுதல் பிரச்சனை அதிகரித்துக் காணப்படுகிறது. ஆனால், கருத்தரிக்கும் போது பெரும்பாலானோர் கவனிக்கத் தவறவிடும் சில மறைமுகத் தூண்டுதல்கள் உள்ளன. இதில் அவற்றைப் பற்றி காண்போம்.
  • SHARE
  • FOLLOW
கருத்தரிக்க முயற்சிக்கும் போது இந்த 3 விஷயங்களை மறக்காம தெரிஞ்சிக்கோங்க..

ஒவ்வொரு பெண்ணும் தங்களது வாழ்நாளில் தாயாக மாறுவது ஒரு அழகான உணர்வு ஆகும். ஆனால், பல்வேறு காரணங்களால் கருத்தரிப்பு ஏற்படுவதில் பெண்கள் பல பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். இதில் மலட்டுத்தன்மை தொடர்பான பிரச்சினைகளும் அடங்குகிறது. இந்நிலையில், இனப்பெருக்க ஆரோக்கியத்தைப் பேணிக் காப்பது அவசியமாகக் கருதப்படுகிறது. ஆனால், இது வீக்கம் தொடர்பாகவும் ஏற்படலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா? இதில் வீக்கம் காரணமாக கருவுறுதல் பிரச்சனை ஏன் அதிகரித்துக் காணப்படுகிறது. இது குறித்த தகவல்களை தாய்மார்களுக்கான முழுமையான ஆரோக்கிய நிபுணர் சாரா பெரூபே அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதைப் பற்றி இங்குக் காண்போம்.


முக்கியமான குறிப்புகள்:-


வீக்கம் என்பது எப்போதும் வெளிப்படையாகத் தெரிவதில்லை. பொதுவாக, காயம் ஏற்பட்ட பிறகு ஏற்படும் வீக்கமாக அதைக் கருதுகின்றனர். ஆனால், உடலின் உள்ளுறுப்புகளைப் பாதிக்கக்கூடிய அல்லது நாள்பட்ட வீக்கமானது, ஹார்மோன் சமநிலையைக் குலைத்து, இனப்பெருக்க திசுக்களைச் சேதப்படுத்தி, கருத்தரிப்பைக் கடினமாக்கும் ஒரு மறைமுகக் காரணியாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. சமீபத்திய ஆய்வுகள், குறைந்த அளவிலான நாள்பட்ட வீக்கம் பெண்களின் கருவுறுதலுக்கு, குறிப்பாக எண்டோமெட்ரியோசிஸ் அல்லது பிசிஓஎஸ் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு, எவ்வளவு முக்கியமானது என்பதை வெளிப்படுத்துகின்றன.

கருத்தரிக்க முயற்சிக்கும் போது கவனிக்கத் தவறவிடும் 3 மறைமுகத் தூண்டுதல்கள்

இது குறித்து நிபுணர் தனது பதிவில் கூறியதாவது, “பெரும்பாலான பெண்களிடம், அவர்களின் கருவுறுதல் பிரச்சனைகள் "ஹார்மோன் சம்பந்தப்பட்டவை" என்று கூறப்படுகிறது. ஆனால், ஹார்மோன்களைச் சீர்குலைக்கும் மிகப்பெரிய காரணிகளில் சில, அழற்சியில் இருந்து தொடங்குகின்றன என்பதை யாரும் விளக்குவதில்லை. மேலும், யாரும் நமக்குக் கற்றுக்கொடுக்காத ஒரு விஷயம் இங்கே உள்ளது” என்று கூறி சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

அழற்சி அரிதாகவே ஆய்வகப் பரிசோதனைகளில் தென்படும். ஆனால், பதில்கள் கிடைப்பதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே, அது அறிகுறிகளில் வெளிப்படுகிறது. அதன் படி, வயிற்று உப்புசம், குறுகிய லூட்டியல் கட்டங்கள், மனநிலை மாற்றங்கள், பதட்டம், சோர்வு, ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சிகள், எல்லா நேரமும் பசிப்பது அல்லது சுத்தமாகப் பசிக்காமல் இருப்பது போன்ற விஷயங்கள் அழற்சிக்கு அறிகுறியாக இருக்கலாம். ஆனால், இவை தற்செயலானவை அல்ல.

உடலில் அழற்சி ஏற்படுவதற்கான அறிகுறிகள்

உங்கள் உடலில் அழற்சி ஏற்பட்டுள்ளது என்பதையும், உங்கள் உடல் உங்களுடன் தொடர்பு கொள்ள முயற்சிக்கிறது என்பதையும் காட்டும் அறிகுறிகள் குறித்து மருத்துவர் பகிர்ந்துள்ளார்.

இதில் மிகவும் கடினமான பகுதி என்னவென்றால்?

மறைக்கப்பட்ட தூண்டுதல்கள் இன்னும் இருந்தால், நீங்கள் "எல்லாவற்றையும் சரியாகச் செய்தாலும்" கூட, உங்கள் உடலில் அழற்சி இருக்கலாம்.

இந்த பதிவில், கருத்தரிக்க முயற்சிக்கும் பெரும்பாலான பெண்களுக்குக் கற்றுக்கொடுக்கப்படாத 3 அழற்சித் தூண்டுதல்களைப் பற்றி குறிப்பிட்டார். அவை இரத்த சர்க்கரை, குடல் ஆரோக்கியம் மற்றும் தினசரி வெளிப்பாடுகள் போன்றவை ஆகும்.

இந்த பதிவும் உதவலாம்: கர்ப்பம் தரிக்கும் வாய்ப்புகளை மேம்படுத்த பின்பற்ற வேண்டிய ஆரோக்கியமான வாழ்க்கை முறை..

தூண்டுகோல் 1: இரத்த சர்க்கரை ஏற்ற இறக்கங்கள்

இரத்த சர்க்கரை ஒரு பிரச்சனையாக இருக்க, நீரிழிவு நோய் இருக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால், இந்த லேசான ஏற்ற இறக்கங்கள் கூட அழற்சியை அதிகரிக்கலாம், அண்டவிடுப்பை சீர்குலைக்கலாம் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் அளவைக் குறைக்கலாம்.

இதனால் சாப்பிட்ட பிறகு ஏற்படும் சோர்வு, தீவிரமான உணவு ஆசைகள் அல்லது பசியாக இருக்கும்போது ஏற்படும் நடுக்கம் போன்ற அறிகுறிகள் ஏற்படும்.

என்ன செய்ய வேண்டும்?

  • ஒவ்வொரு கார்போஹைட்ரேட்டுடனும் புரதம் அல்லது ஆரோக்கியமான கொழுப்பைச் சேர்த்து உண்ண வேண்டும்.
  • விழித்த ஒரு மணி நேரத்திற்குள் சாப்பிடலாம். இதற்கு சமச்சீரான உணவுகளை உருவாக்கலாம் (வெறும் "ஆரோக்கியமான" உணவுகள் அல்ல).
  • உணவைத் தவிர்க்கக் கூடாது. இது உடலுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தி கார்டிசோலை அதிகரிக்கிறது (இதை எளிமையாக வைத்துக்கொள்ளுங்கள். சீரான இரத்த சர்க்கரை = குறைந்த அழற்சி)

தூண்டுகோல் #2: குடல் அழற்சி

குடல் அழுத்தத்தில் இருந்தால், சரியாகச் சாப்பிட்டாலும் அழற்சி ஏற்படலாம்.

இதன் அறிகுறிகளில், வயிறு உப்புசம், சீரற்ற குடல் இயக்கம், தோல் பிரச்சனைகள், மூளை மந்தம் அல்லது "உடல் வீங்கியது" போன்ற உணர்வு ஏற்படலாம்.

குடலில் அழற்சி ஏற்படும்போது, அது ஊட்டச்சத்து உறிஞ்சுதல், ஹார்மோன் நச்சு நீக்கம் மற்றும் நோயெதிர்ப்பு சமநிலை போன்றவற்றை பாதிக்கிறது. இவை அனைத்தும் கருத்தரிப்பிற்கு மிக முக்கியமானவை.

image

signs-of-gut-damage-you're-probably-ignoring-and-how-to-fix-it-naturally-Main

View this post on Instagram

A post shared by Sarah Bérubé | Holistic Wellness for Miscarriage Moms (@sarahthedetoxcoach)

என்ன செய்ய வேண்டும்?

  • முழுமையான, எளிய உணவுகளில் கவனம் செலுத்த வேண்டும். நார்ச்சத்து உட்கொள்ளலை படிப்படியாக அதிகரிக்கலாம்.
  • வயிறு உப்புசம் அல்லது சோர்வை ஏற்படுத்தும் உணவுகளை அடையாளம் காண வேண்டும்
  • செரிமானத்தை மேம்படுத்த வேண்டும் (நன்றாக மென்று சாப்பிடுவது, மெதுவாக சாப்பிடுவது, சாப்பிடும்போது மன அழுத்தத்தை நிர்வகிப்பது).
  • குறிப்பிட்ட புரோபயாடிக் மற்றும் தாதுக்களைப் பற்றி சிந்திக்க வேண்டும்.

தூண்டுகோல் #3: சுற்றுச்சூழல் நச்சுகள் (தினசரி நாம் கவனிக்காதவை)

நாம் எப்போதும் BPA பற்றி கேட்கிறோம். ஆனால் நோயெதிர்ப்பு மண்டலத்தை பாதித்து ஹார்மோன்களை சீர்குலைக்கும் வாசனைப் பொருட்கள், PFAS அல்லது துப்புரவுப் பொருட்கள் பற்றி கேட்பதில்லை. இதற்கு எல்லாவற்றையும் மாற்ற வேண்டியதில்லை. ஆனால் தினசரி வெளிப்பாடு சேர்ந்து கொண்டே செல்கிறது.

என்ன செய்ய வேண்டும்?

  • அதிகம் பயன்படுத்தும் பொருட்களிலிருந்து தொடங்க வேண்டும்
  • வாசனை இல்லாத அல்லது அத்தியாவசிய எண்ணெய் அடிப்படையிலான பொருட்களைத் தேர்ந்தெடுக்கலாம்
  • சலவைத் தூளை மாற்ற வேண்டும் (இது மிகவும் முக்கியமானது)
  • தண்ணீரை வடிகட்ட வேண்டும்.
  • முடிந்தவரை ஒட்டாத பாத்திரங்களைத் தவிர்க்க வேண்டும்

சிறிய மாற்றங்களின் மூலம் குறைந்த அழற்சியை ஏற்படுத்துவதுடன், சிறந்த ஹார்மோன் சமிக்ஞையை மேம்படுத்தலாம்.

நீங்கள் கருத்தரிக்க முயற்சிக்கும்போது, இந்த சிறிய மாற்றங்கள் ஹார்மோன் ஆரோக்கியம், முட்டையின் தரம் மற்றும் மாதவிடாய் சுழற்சியின் சீரான தன்மை ஆகியவற்றில் ஒரு அர்த்தமுள்ள மாற்றத்தை ஏற்படுத்துகின்றன என்று குறிப்பிடுகிறார்.

இந்த பதிவும் உதவலாம்: Fertility Diet: பெண்களே சீக்கிரம் குழந்தை பிறக்கணுமா? - கருவுறுதல் நிபுணர் சொல்லும் இந்த உணவுகள கட்டாயம் சாப்பிடுங்க

Image Source: Freepik

Read Next

கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் முட்டை சாப்பிடலாமா? நிபுணர்கள் கூறும் நன்மைகள் மற்றும் அவசியமான எச்சரிக்கைகள்!

Disclaimer

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

  • Dec 11, 2025 21:26 IST

    Published By : கௌதமி சுப்ரமணி

குறிச்சொற்கள்