Fri Sep 11, 2026 | 10:18 PM IST

Doctor Verified

தினமும் பிளாக் காபி குடிங்க.. கல்லீரலுக்கு அற்புத நன்மைகள்.! – உணவியல் நிபுணர் விளக்கம்..

பிளாக் காபி கல்லீரலுக்கு எவ்வாறு நன்மை தருகிறது? எவ்வளவு அளவில் குடிக்கலாம்? நிபுணர் திவ்யா காந்தி கூறும் அறிவியல் ஆதாரத்துடன் கூடிய விளக்கம்.

பலருக்கு காலை நேரத்தை உற்சாகமாக ஆரம்பிக்க காபி முக்கிய பங்கை வகிக்கிறது. குறிப்பாக பிளாக் காபி குடிப்பவர்களுக்கு, அது சுவை மட்டுமல்ல, பல்வேறு ஆரோக்கிய நன்மைகளையும் வழங்குகிறது. மிதமான அளவில் பிளாக் காபி குடிக்கும் போது, மன விழிப்புணர்வு, உடல் எனர்ஜி, வளர்சிதை மாற்றம் ஆகியவை மேம்படுவதுடன், பல நீண்டகால நோய்களின் அபாயமும் குறைகிறது.

கல்லீரல் ஆரோக்கியத்தில் பிளாக் காபி வகிக்கும் பங்கு குறித்து அறிய, நாங்கள் திவ்யா காந்தி உணவுமுறை மற்றும் ஊட்டச்சத்து மருத்துவமனைக்குச் சென்று, உணவியல் நிபுணர் திவ்யா காந்தி அவர்களிடம் பேசியோம்.

பிளாக் காபி கல்லீரலுக்கு ஏன் நல்லது? – நிபுணர் விளக்கம்

கல்லீரல் நோய்களின் அபாயம் குறைகிறது

NCBI-யின் ஆய்வுகள் படி, தினமும் பிளாக் காபி குடிப்பவர்களுக்கு, மது அல்லாத கொழுப்பு கல்லீரல் நோய் (NAFLD) வருவதற்கான வாய்ப்பு குறைகிறது. கல்லீரல் புற்றுநோய் உட்பட கல்லீரல் தொடர்பான பிற நோய்களின் அபாயமும் குறைவதாக ஆய்வு காட்டுகிறது. நிபுணர்கள் கூறுவதாவது — பிளாக் காபியின் பொலிஃபீனால்கள் கல்லீரல் செல்களை பாதுகாக்கும் வகையில் செயல்படுகின்றன.

கல்லீரல் நொதிகளை ஒழுங்குபடுத்துகிறது

தேசிய சுகாதார நிறுவனங்கள் (NIH) வெளியிட்ட தகவலின்படி, பிளாக் காபி உட்கொள்வதால், கல்லீரல் நொதிகளின் அளவு சமநிலையில் இருக்கும், நொதிகளின் செயல்பாடு மேம்படும். கல்லீரல் நொதிகள் சரியாக செயல்பட்டால் மட்டுமே, உடலில் நச்சு நீக்கம் மற்றும் செரிமான செயல்கள் சீராக நடைபெறும்.

இந்த பதிவும் உதவலாம்: கல்லீரல் நச்சுகளை நீக்க உதவும் புரோபயாடிக் உணவுகள் – நிபுணர் பரிந்துரை!

கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்துகிறது

பிளாக் காபியில் உள்ள இயற்கை பியோகேமிக்கல்கள் - உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்ற, வளர்சிதை மாற்றத்தை மெருகேற்ற, கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்த முக்கிய பங்கை வகிக்கின்றன. “கல்லீரல் நன்றாக செயல்பட்டால் மட்டுமே, உடல் சரியான எனர்ஜி மேலாண்மையில் இயங்கும்” என நிபுணர் குறிப்பிடுகிறார்.

ஆக்ஸிஜனேற்றிகள் (Antioxidants) நிறைந்தவை

பிளாக் காபி என்பது வீக்கத்தை குறைக்கும், செல்களின் சேதத்தைத் தடுக்கும், வயதை தாமதமாக்கும். ஆக்ஸிஜனேற்றிகளின் மிகச்சிறந்த மூலங்களில் ஒன்று. நிபுணர்கள் கூறுவதாவது — தினசரி பிளாக் காபி குடிப்பது கல்லீரலில் ஏற்படும் அழற்சியை குறைத்து பாதுகாப்பு சுவரை ஏற்படுத்துகிறது.

ஒரு நாளைக்கு எவ்வளவு பிளாக் காபி?

ஒரு நாளுக்கு அதிகபட்சம் 400 mg கஃபீன் (அதாவது 1–4 கப் பிளாக் காபி). ஆனால், வயது, உடல் நிலை, கஃபீன் சகிப்புத்தன்மை என அனைத்தையும் வைத்தே எவ்வளவு குடிக்க வேண்டும் என்பது தீர்மானிக்கப்பட வேண்டும் என நிபுணர் திவ்யா காந்தி கூறுகிறார்.

இறுதியாக..

பிளாக் காபி ஒரு சாதாரண பானமல்ல; அது கல்லீரலை காக்கும் ஒரு இயற்கையான மருத்துவ துணைபொருளாக செயல்படுகிறது. மிதமான அளவில் தினசரி குடிப்பது கல்லீரல் ஆரோக்கியத்தை பாதுகாக்க, நொதிகளை சீராக்க, நச்சுகளை அகற்ற, வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்த உதவுகிறது.

Disclaimer: இந்த கட்டுரை தகவல் வழங்கும் நோக்கத்திற்காக மட்டுமே. நீங்கள் கல்லீரல் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டிருந்தால், பிளாக் காபி சேர்க்கும் முன் உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெறுங்கள்.

Read Next

கல்லீரல் நச்சுகளை நீக்க உதவும் புரோபயாடிக் உணவுகள் – நிபுணர் பரிந்துரை!

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

Ishvarya Gurumurthy

Ishvarya Gurumurthy

துணை ஆசிரியர்

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

    Nov 15, 2025 15:24 IST

    Published By : Ishvarya Gurumurthy

Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content