Fri Sep 11, 2026 | 10:17 PM IST

Expert

செரிமானம் முதல் பளபளப்பான சருமம் வரை.. கிராம்பு தண்ணீர் தரும் அதிசய நன்மைகள்

அன்றாட வாழ்வில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளுக்கு சிறந்த இயற்கை தீர்வாக கிராம்பு அமைகின்றன. இதில் கிராம்பு தண்ணீரைத் தயார் செய்வது எப்படி மற்றும் அதன் நன்மைகள் குறித்து ஊட்டச்சத்து நிபுணர் பகிர்ந்துள்ளதைக் காணலாம்.

குளிர்காலம் அனைவருக்கும் நிம்மதியான, மகிழ்ச்சியான காலநிலையாக இருப்பினும், பல்வேறு நோய்த்தொற்றுக்கள் அதிகரிக்கும் காலமாகவும் அமைகிறது. ஏனெனில், இந்த காலகட்டத்தில் உடலில் நோயெதிர்ப்புச் சக்தி குறைந்து காணப்படுகிறது. குறிப்பாக, நோயெதிர்ப்புச் சக்தி பலவீனமாக உள்ளவர்கள், குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் என அனைவரும் எளிதில் நோய்த்தொற்றுக்களால் பாதிக்கப்படுகின்றனர். எனவே, இது போன்ற காலநிலையில் உடலை பாதுகாப்பாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்வது அவசியமாகும்.

குளிர்காலம் உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும் வேளையில், நோயெதிர்ப்புச் சக்தி குறைவதால் இருமல், சளி, தொண்டை வலி, காய்ச்சல் போன்ற பருவகால நோய்களுக்கு நாம் ஆளாக நேரிடுகிறோம். சந்தை மருந்துகளால் நிரம்பி வழிந்தாலும், சில நேரங்களில் எளிமையான தீர்வுகள் இயற்கையிலிருந்து வருகின்றன. அத்தகைய எளிய தீர்வாகவே கிராம்பு தண்ணீர் அமைகிறது. இதில் கிராம்பு தண்ணீர் குடிப்பது என்னென்ன நன்மைகளைத் தரும் என்பது குறித்தும், அதை எப்படி தயார் செய்யலாம் என்பது குறித்தும் ஊட்டச்சத்து நிபுணர் அபூர்வா அகர்வால் அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். அதைப் பற்றி இங்குக் காண்போம்.

கிராம்பு நீர் என்றால் என்ன?

இது குறித்து ஊட்டச்சத்து நிபுணர் தனது பதிவில் கூறியதாவது,”வயிறு உப்புசம், மெதுவான வளர்சிதை மாற்றம், PMS பிடிப்புகள், மந்தமான சருமம் அல்லது நீர் தேக்கம் ஆகியவை உங்கள் அன்றாட வழக்கத்தின் ஒரு பகுதியாக மாறிவிட்டால்… கிராம்பு நீர் நீங்கள் முயற்சிக்கும் எளிதான தீர்வாக இருக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர், இந்த எளிய பானம் ஆக்ஸிஜனேற்றிகள், அழற்சி எதிர்ப்பு கலவைகள் மற்றும் உங்கள் உடலை உள்ளிருந்து குணப்படுத்த உதவும் இயற்கை செரிமான நொதிகளால் நிரம்பியுள்ளது என்று கூறினார்.

2-3 கிராம்புகளுடன் கலந்த நீர், அவற்றின் எண்ணெய்களை வெளியிடுகிறது. இது உங்களுக்கு பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு மற்றும் செரிமான நன்மைகளை வழங்குகிறது. இவையே கிராம்பு நீர் ஆகும்.

கிராம்பு நீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க

  • கிராம்பில் யூஜெனால் உள்ளது, இவையே உடலில் இயற்கையாகவே வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்கிறது
  • இவை பிடிவாதமான கொழுப்பை வேகமாக எரிக்க உதவுகிறது
  • எனவே, இது எடை இழப்பு நடைமுறைகளுக்கு சிறந்த கூடுதலான தேர்வாக அமைகிறது

இந்த பதிவும் உதவலாம்: இரவில் தூங்குவதற்கு முன் கிராம்பு தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் இங்கே..

தொற்றுகளை எதிர்த்துப் போராட

  • கிராம்பு நீரில் உள்ள வலுவான ஆண்டிமைக்ரோபியல் பண்புகளுடன் தொற்றுநோய்களை எதிர்த்துப் போராடுகிறது
  • மேலும் இவை பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது
  • தொண்டை புண், இருமல் மற்றும் காய்ச்சல் போன்ற அறிகுறிகளைக் குறைக்க உதவுகிறது

ஹார்மோன் சமநிலை மற்றும் மாதவிடாய் நிவாரணம்

  • கிராம்பில் உள்ள ஆரோக்கியமிக்க பண்புகள் மாதவிடாய் பிடிப்பைக் குறைக்கிறது
  • மேலும், இது PMS வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது
  • இந்த நீர் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது
  • சூடான கிராம்பு நீர் உட்கொள்வது, மாதவிடாய் காலத்தில் குறிப்பாக இனிமையானது
  • இவை ஹார்மோன்களை சமநிலைப்படுத்துகிறது

நீர் தேக்கத்தைக் குறைக்க

  • கிராம்பு நீர் ஆனது இயற்கை டையூரிடிக் ஆக செயல்படுகிறது. எனவே இது உடலில் நீர் தேக்கத்தைக் குறைக்கிறது
  • இவை உடலில் இருக்கும் அதிகப்படியான உப்பு மற்றும் வீக்கத்தை வெளியிட உதவுகிறது
  • குறிப்பாக, இது வீக்க நாட்களுக்கு பெரிதும் உதவுகிறது.

பளபளப்பான மற்றும் தெளிவான சருமம் பெற

  • இதில் வலுவான ஆக்ஸிஜனேற்றிகள் உள்ளன
  • இது முகப்பருவை ஏற்படுத்தும் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது
  • பாக்டீரியா மற்றும் ஹார்மோன் சமநிலையின்மையால் ஏற்படும் முகப்பருவுக்கு உதவுகிறது
  • இவை சருமத்தை சுத்தப்படுகிறது.

இது தவிர, செரிமானத்தை மேம்படுத்தவும், நாள்பட்ட வீக்கத்தைக் குறைக்கவும் கிராம்பு தண்ணீர் உதவுகிறது. மேலும் இதன் மூலம் குடல் ஆரோக்கியம், நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வை ஆதரிக்கலாம்.

View this post on Instagram

A post shared by Apurva Agarwal (@nutritionist_apurvaagarwal_fts)

கிராம்பு தண்ணீர் தயார் செய்வது எப்படி?

  • 1 கிளாஸ் தண்ணீரில் 2-3 கிராம்புவைச் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்
  • இதை 3-4 நிமிடங்கள் மிதமான சூட்டில் வைக்கலாம்.
  • பின்னர், இந்த பானத்தை வெதுவெதுப்பாக்கி குடிக்கலாம்.

சிறந்த நேரம்: காலை வெறும் வயிற்றில் அல்லது மதிய உணவுக்குப் பிறகு இந்த பானத்தை எடுத்துக் கொள்ளலாம்.

கிராம்பு தண்ணீர் எவ்வாறு நன்மை பயக்கும்?

கிராம்புகளில் யூஜெனால் நிறைந்துள்ளது. இது செரிமானத்தை மேம்படுத்தும், வீக்கத்தைக் குறைக்கும், கல்லீரல் நச்சு நீக்கத்தை ஆதரிக்கும் மற்றும் வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்கும் ஒரு இயற்கை சேர்மம் ஆகும் - இது இந்த பானத்தை தினசரி ஆரோக்கியத்திற்கு நம்பமுடியாத அளவிற்கு பயனுள்ளதாகவும் மாற்றுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: சாப்பிட்ட பிறகு கிராம்பு டீ குடிப்பதில் எவ்வளவு நன்மைகள் இருக்கு தெரியுமா?

Image Source: Freepik

Read Next

குளிர்காலத்தில் உடலை டிடாக்ஸ் செய்ய உதவும் மூன்று சிறந்த பானங்கள்.. நிபுணர் தரும் டிப்ஸ்

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

கௌதமி சுப்ரமணி

கௌதமி சுப்ரமணி

இளைய உள்ளடக்க எழுத்தாளர்

நான் கௌதமி சுப்ரமணியம், டிஜிட்டல் மீடியாவில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறேன். ஆரோக்கியம், உணவு, உடற்பயிற்சி, உடல் நலம், அழகு குறிப்பு போன்றவை தொடர்பான விவரங்களை ஆராய்ந்து கட்டுரைகளை எழுதி வருகிறேன். நான் எழுதும் ஒவ்வொரு பகுதியும் ஈர்க்கக்கூடியதாக இருப்பதை உறுதிசெய்து, விவரங்களுக்கு ஒரு தீவிரமான பார்வையை வளர்த்துக்கொண்டேன். மக்களுக்குத் தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான இலக்கை மேம்படுத்துவது எனது நோக்கம் ஆகும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

    Dec 02, 2025 13:43 IST

    Published By : கௌதமி சுப்ரமணி

Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content