How to make cucumber chutney in Tamil: வெள்ளரிக்காய் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது என நாம் அனைவருக்கும் தெரியும். உடலை நீரேற்றமாக வைப்பது முதல் உடல் எடையை குறைப்பது வரை பல நன்மைகளை வழங்குகிறது. நாம் பெரும்பாலும் வெள்ளரிக்காயை சாலட், ராய்தா செய்து சாப்பிட்டிருப்போம். எப்போதாவது வெள்ளரிக்காயில் சட்னி செய்து சாப்பிட்டிருக்கீங்களா? சரியாகத்தான் படித்தீர்கள்.
நாம் பெரும்பாலும் இட்லி, தோசைக்கு சாம்பார், தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, புதினா சட்னி என ஒரே சட்னி வைத்து சலித்து போயிருக்கும். இந்த முறை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு வெள்ளரிக்காய் வைத்து சட்னி செய்து கொடுங்கள். வீட்டில் உள்ளவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள். இதற்கான ரெசிபியை நாங்கள் கூறுகிறோம்.
இந்த பதிவும் உதவலாம் : Chettinad Vara Milagai Chutney: இட்லி தோசைக்கு டக்கரான சட்னி.. செட்டிநாடு வர மிளகாய் சட்னி ரெசிபி இதோ..
தேவையான பொருட்கள் :
வெள்ளரிக்காய் - 2.
கடலை பருப்பு - 2 ஸ்பூன்.
பச்சை மிளகாய் - 3.
புளி - சிறு நெல்லிக்காய் அளவு.
தேங்காய் - ½ மூடி.
வெல்லம் - 1 ஸ்பூன்.
கடுகு - ½ ஸ்பூன்.
சீரகம் - ½ ஸ்பூன்.
கறிவேப்பிலை - 1 கொத்து.
பெருங்காயம் - 1 சிட்டிகை.
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
வெள்ளரிக்காய் சட்னி செய்முறை:

- முதலில் கடாய் ஒன்றை அடுப்பில் வைத்து, அதில் கடலை பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுத்து தனியே வைக்கவும்.
- இதை தொடர்ந்து, எடுத்து வைத்துள்ள தேங்காயினை துருவி தயார் நிலையில் வைக்கவும்.
- இப்போது, சட்னி செய்ய எடுத்து வைத்துள்ள வெள்ளரிக்காய், பச்சை மிளகாய் ஆகியவற்றை கழுவி சுத்தம் செய்து பின் பொடிப்பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
- பின், மிக்ஸி ஜாரில் நறுக்கிய வெள்ளரிக்காய், பச்சை மிளகாய், கடலை பருப்பு, புளி, தேங்காய் துருவல், வெல்லம் ஆகியவற்றை சேர்த்து சிறிதளவு தண்ணீருடன் சேர்த்து நன்கு அரைத்து, ஒரு பாத்தில் தனியே எடுத்து வைக்கவும்.
இந்த பதிவும் உதவலாம் : CWC Priyanka Special: மாதம்பட்டியை வாயடைக்க வைத்த பிரியங்காவின் குட்டி வங்காய குரா!!
- இப்போது, சட்னியை தாளிக்க கடாய் ஒன்றினை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடேற்றவும்.
- எண்ணெய் காய்ந்ததும் இதில் கடுகு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, சட்னி பாத்திரத்தில் ஊற்றினால் சுவையான மற்றும் ஆரோக்கியம் நிறைந்த வெள்ளரிக்காய் சட்னி தயார். இந்த சட்னியை இட்லி, தோசையுடன் சேர்த்து சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும்.
வெள்ளரிக்காய் சாப்பிடுவதன் நன்மைகள்:

வெள்ளரிக்காயில், சோடியம், கால்சியம், மக்னேசியம், இரும்பு, பாஸ்பரஸ், கந்தகம், சிலிகன், குளோரின் போன்ற தாதுப்பொருட்கள் உள்ளது.
நீரிழப்பை சரி செய்யும்
வெள்ளரிக்காய் சாப்பிடுவது உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது மற்றும் நீரிழப்பு அபாயத்தை குறைக்கிறது. வெள்ளரிக்காயில் நல்ல அளவு எலக்ட்ரோலைட்டுகள் இருப்பதால், வெள்ளரிக்காயை தினமும் சாப்பிடுவதன் மூலம் நீர்ச்சத்து குறைவதைத் தவிர்க்கலாம்.
இந்த பதிவும் உதவலாம் : Cauliflower Bajji Recipe: உங்க குழந்தைக்கு காலிஃபிளவர் பஜ்ஜி இப்படி செஞ்சி கொடுங்க!
கண்களுக்கு நல்லது
கண்பார்வையை மேம்படுத்தும் வைட்டமின் ஏ வெள்ளரியில் நிறைந்துள்ளது. வெள்ளரிக்காயை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் கண்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.
உடல் எடையை கட்டுப்படுத்தும்

வெள்ளரிக்காயில் உள்ள கலோரிகளின் அளவு மிகக் குறைவு. இது உங்கள் எடையைக் குறைக்க உதவியாக இருக்கும்.
சிறந்த செரிமானம்
வெள்ளரிக்காயில் நார்ச்சத்து அதிக அளவில் காணப்படுவதால், உணவு எளிதில் ஜீரணமாகும். வயிறு சம்மந்தமான பிரச்சனைகளும் இதன் மூலம் குணமாகும்.
Pic Courtesy: Freepik