Benefits Of Onion Peels: நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் சில உணவுப் பொருள்கள் பல்வேறு விதமான நன்மைகளைத் தருகின்றன. அந்த வகையிலேயே தினசரி நம் உணவில் எடுத்துக் கொள்ளும் வெங்காயமும் அடங்கும். இதில் வெங்காயத்தின் உட்புறப்பகுதியை மட்டும் உணவிற்குப் பயன்படுத்தி வெங்காயத் தோல்களை உரித்து எரிந்து விடுவர். ஆனால் இந்த வெங்காயத் தோலும் பல்வேறு விதமான நன்மைகளைத் தரக்கூடியது என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும். வெங்காயத் தோல்கள் நல்ல ஊட்டச்சத்து உள்ளடக்கத்தைக் கொண்டிருக்கின்றன. எனவே, இந்த வெங்காயத் தோலை தூக்கி எறியாமல், அதனின் நன்மைகளை அறிந்து அதற்கேற்றாற்போல பயன்படுத்த வேண்டும்.
வெங்காயத் தோலின் ஊட்டச்சத்துகள்
வெங்காயத் தோலில் நார்ச்சத்து, ஆக்ஸிஜனேற்றிகள், வைட்டமின் ஏ, சி மற்றும் ஈ போன்றவை நிறைந்துள்ளது. இவை பார்வைத் திறனை மேம்படுத்துதல், தோல் மற்றும் கூந்தலுக்கு உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Blood Pressure Remedies: இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த அருமையான வீட்டு வைத்தியம்!

வெங்காயத் தோலின் நன்மைகள்
இதில் வெங்காயத் தோல் தரும் பல்வேறு நன்மைகளைக் காணலாம்.
உரம்
உரம் தயாரிப்பதற்கு சிறந்த பொருளாக வெங்காயத் தோல் உதவுகிறது. இவற்றில் பொட்டாசியம், கால்சியம், இரும்பு மற்றும் மெக்னீசியம் போன்ற சத்துக்கள் உள்ளன. எனவே இவை உரம் தயாரிப்பதற்கு ஏற்றதாக அமைகிறது.
முடி டோனர்
வெங்காயத் தோலானது முடி பராமரிப்பிற்கும் உதவுகிறது. இவற்றை ஹேர் டோனராகவும் பயன்படுத்தி உலர்ந்த மற்றும் மந்தமான கூந்தலுக்கு உபயோகிக்கலாம். வெங்காயத் தோலைத் தண்ணீரில் பிரவுன் நிறமாக மாறும் வரை கொதிக்க வைத்து டோனரைத் தயாரிக்கலாம். இதனை பாட்டில் ஒன்றில் சேமித்து வைத்து தலையில் தேய்க்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Newborn Jaundice Treatment: பிறந்த குழந்தைகளின் மஞ்சள் காமாலைக்கான இயற்கை சிகிச்சை முறைகள்
தோல் அரிப்புகள் நீங்க
வெங்காயத் தோல்கள் பூஞ்சை காளான் பண்புகளைக் கொண்டுள்ளது. இது எளிதாக தோல், தடிப்புகள் மற்றும் தடகள பாதங்களில் ஏற்படும் அரிப்புகள் போன்றவற்றை நீக்க உதவுகிறது. மேலும், வெங்காயத் தோல் நீரை சருமத்தில் தடவுவதன் மூலம் நிவாரணம் அடையலாம்.
சுவையூட்டுவதற்கு
வெங்காயத் தோல்கள், சிறந்த சுவையூட்டியாகப் பயன்படுகிறது. வெங்காயத் தோலை வறுத்து சாப்பிடுவதன் மூலம், உணவுகளின் நிறம் மற்றும் சுவையை அதிகரிக்கலாம்.
சூப் மற்றும் கிரேவி
சூப் மற்றும் குழம்பு செய்யும் போது, வெங்காயத் தோலைச் சேர்க்கலாம். இது குழம்பு மற்றும் கிரேவிக்கு துடிப்பான நிறத்தைக் கொடுப்பதுடன், கெட்டியான கிரேவியைத் தருகிறது. கொதிக்க பிறகு தோல்களை அகற்றி விடலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Platelet Count Increase Tips: உடலில் பிளேட்லெட்டுகள் இயற்கையாக அதிகரிப்பதற்கான வீட்டு வைத்தியம்
நல்ல தூக்கத்திற்கு
வெங்காயத் தோல்களில் எல்-டிரிப்டோபான் என்ற அமினோ அமிலம் உள்ளது. இது இயற்கையான மயக்க மருந்தாகச் செயல்படுகிறது. வெங்காயத் தோல் தேநீர் குடிப்பது நரம்புகளை அமைதிப்படுத்தி நல்ல தூக்கத்தை ஊக்குவிக்கிறது.
வெங்காயத் தோல் தேநீர்
வெங்காயத் தோல் தேநீர் அருந்துவது சருமத்திற்கும், ஆரோக்கியத்திற்கும் உதவியாக இருக்கும். இதன் மூலம் உயர் இரத்த அழுத்தம், உடல் பருமன், மற்றும் நோய்த்தொற்றுகளைக் கட்டுப்படுத்துகிறது. மேலும் இது நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது. இந்த வெங்காயத் தோலை சுமார் 10 முதல் 20 நிமிடங்கள் தண்ணீரில் கொதிக்க வைத்து பின் தோல்களை வடிகட்டி ஆரோக்கியமான தேநீரைக்குடிக்கவும்.
இவை அனைத்தும் வெங்காயத் தோல் தரும் அற்புத பயன்களாகும். எனவே வெங்காயத் தோல்களைத் தூக்கி எரியாமல் அவற்றை இது போன்ற நல்ல பயன்களுக்கு உபயோகப்படுத்தலாம். மேலும், வெங்காயத் தோல்களைப் பயன்படுத்தும் முன், அதில் இரசாயன சிகிச்சைகள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் இல்லாதவை என்பதை உறுதிப்படுத்தி கொள்ள வேண்டும்.
இந்த பதிவும் உதவலாம்: Cracked Mouth Corner Treatment: வாயில் விரிசல் ஏற்பட்டுள்ளதா? இந்த வீட்டு வைத்தியங்களை முயற்சி செய்யுங்க
Image Source: Freepik