இனி மாதுளை தோலை தூக்கி வீசாதீங்க. சருமத்திற்கு நன்மை தரும் மாதுளை தோலின் மகிமைகள் இதோ.

  • SHARE
  • FOLLOW
இனி மாதுளை தோலை தூக்கி வீசாதீங்க. சருமத்திற்கு நன்மை தரும் மாதுளை தோலின் மகிமைகள் இதோ.

சருமத்திற்கு மாதுளை தோலின் அற்புத நன்மைகள்

மாதுளைப் பழம் மட்டுமல்லாமல், மாதுளைத் தோலும் ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. சருமத்திற்கு மாதுளைத் தோல் தரும் நன்மைகளைக் காணலாம்.

சருமத்தை ஈரப்பதமாக்க

வறண்ட சருமம், சிவத்தல், அரிப்பு, எரிச்சல் போன்ற தோல் பிரச்சனைகளுக்கு மாதுளைத் தோல் பெரிதும் நன்மை தருகிறது. இந்த தோல் பிரச்சனைகளுக்கு மாதுளை தோல் சிறந்த இயற்கையான மாய்ஸ்சரைசராக செயல்படுகிறது. மாதுளைத் தோலில் உள்ள எலாஜிக் அமிலம், சருமத்தில் ஈரப்பதத்தைத் தக்க வைப்பதுடன், அதிக ஈரப்பதத்துடன் வைக்க உதவுகிறது.

செல் மீளுருவாக்கத்திற்கு

மாதுளைத் தோலில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது ஃப்ரீ ரேடிக்கல்களை நடுநிலையாக்கி சேதமடைந்த சரும செல்களை சரி செய்கிறது. சருமத்திற்குத் தேவையான ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்களை வழங்கி இயற்கை ஈரப்பதத்தை அகற்றவிடாமல் பாதுகாக்கிறது. மேலும், சருமத்தில் காணப்படும் வடுக்கள் மற்றும் காயங்களுக்குச் சிகிச்சையளிக்க உதவுகிறது.

தோல் நோய்த்தொற்றுக்களுக்கு சிகிச்சையளிக்க

மாதுளை தோல் பாக்டீரியா மற்றும் பூஞ்சை தோல் நோய்த்தொற்றுக்களுக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது. மாதுளைத் தோலில் இயற்கையான மூலப் பொருளாக ஆக்ஸிஜனேற்ற் மற்றும் ஆன்டி மைக்ரோபியல் பண்புகள் நிறைந்துள்ளன. இது சருமத்தின் தடைக்கு சேதம் விளைவிக்கும் தொற்றுநோய்களுக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது.

சருமத் துளைகளைச் சுருக்க

சரும பிரச்சனைகளில் ஒன்று மிகப்பெரிய துளைகள் காணப்படுவதாகும். சில நேரங்களில் முகப்பருவுக்கு சிகிச்சையளிப்பது என்பது கடினமாக இருக்கலாம். இந்த நேரங்களில் மாதுளை தோலில் உள்ள துவர்ப்பு பண்புகள், துளைகளின் அளவைக் குறைக்க உதவுகிறது. மாதுளைத் தோல்கள் சருமத்தை இறுக்கமாக்கி தொய்வடையாமல் தடுக்க உதவுகின்றன.

முன்கூட்டியே வயதாகும் அறிகுறிகளைத் தடுக்க

அதிக சூரிய ஒளி, மாசுபாடு போன்ற முன்கூட்டியே முதுமைக்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. இதன் முதல் அறிகுறியாக நெற்றி, கண்களுக்குக் கீழ் மற்றும் வாயைச் சுற்றியுள்ள பகுதிகளில் முதுமை அறிகுறிகள் தோன்றலாம். இந்த நேர்த்தியான கோடுகள் மற்றும் சுருக்கங்களின் தோற்றத்தைக் குறைக்க்க இயற்கையான தேர்வாக மாதுளை தோல் உதவுகிறது. விதை எண்ணெயுடன் மாதுளை தோல் பயன்படுத்துவது, கொலாஜனை உடைக்கும் நொதிகளைத் தடுக்க உதவுகிறது. சருமத்தில் செல் வளர்ச்சியை அதிகப்படுத்தி, முதுமையின் ஆரம்ப அறிகுறிகளை தாமதப்படுத்துகிறது.

Read Next

Coffee For Skin: பளபளப்பான சருமத்தை பெற காஃபியை இப்படி யூஸ் பண்ணுங்க!

Disclaimer