How to use pomegranate peel for skin care: தினமும் மாதுளை உட்கொள்வது நம் உடல் ஆரோக்கியம் மட்டுமல்லாமல் சரும ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும் என்பதை நாம் அறிந்திருப்போம். ஆம். உண்மையில் மாதுளம்பழம் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைத் தருகிறது. மாதுளம்பழத்தை உட்கொண்டு நாம் மாதுளை தோலை தூக்கி எறிந்து விடுகிறோம். ஆனால் மாதுளை தோல் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைத் தரும் என்பது உங்களுக்குத் தெரியுமா?
குறிப்பாக, சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், அழகு சார்ந்த நன்மைகளுக்கும் மாதுளை தோல் முக்கியமானதாகும். மாதுளைத் தோல் பயன்படுத்துவது சருமத்தில் செல்களை மீளுருவாக்கம் செய்ய உதவுகிறது. மேலும் இது சருமத்தை நச்சுத்தன்மையாக்குவதுடன், கடுமையான புற ஊதாக் கதிர்களில் இருந்து பாதுகாப்பது போன்ற பல்வேறு நன்மைகளைத் தருகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Banana Peel Benefits: சரும பிரச்சனையை நீக்க வாழைப்பழத் தோல் உதவுமா?
மாதுளை தோல் பவுடர் தயார் செய்யும் முறை
மாதுளை தோலை வைத்து பவுடராக தயார் செய்து சருமத்திற்குப் பயன்படுத்தலாம்.
- முதலில் மாதுளை தோலை எடுத்து நன்றாக கழுவ வேண்டும்.
- பிறகு, அதை ஒரு வடிகட்டியில் வைத்து, தண்ணீர் முழுவதுமாக அகற்ற வேண்டும்.
- அதன் பின் ஒரு பருத்தி துணி ஒன்றின் உதவியுடன் தோல்களை பரப்பி நன்கு உலர வைக்க வேண்டும். இதை வெயிலில் உலர்த்தலாம்.
- இது நன்கு காய்ந்ததும் கடினமாகி விடும்.
- பிறகு அதை மிக்ஸியில் சேர்த்து பொடியாக்கி விடலாம்.
- இப்போது இந்த பொடியைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

சருமத்தை பொலிவாக்க மாதுளை பவுடர் பயன்படுத்தும் முறை
மாதுளை பவுடர் கொடு பல்வேறு வழிகளில் சருமத்தைப் பொலிவாக்கலாம்.
மாதுளை, ஓட்ஸ், தயிர் ஃபேஸ் பேக்
தேவையானவை
- மாதுளை பவுடர் - 2 தேக்கரண்டி
- தயிர் - 2 தேக்கரண்டி
- ஓட்ஸ் - 1 தேக்கரண்டி
- மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
செய்முறை
- பாத்திரம் ஒன்றில் மாதுளை தூள், ஓட்ஸ், மஞ்சள் தூள் சேர்த்து கலக்க வேண்டும்.
- மேலும் இதில் தயிர் சேர்த்து கெட்டியான பேஸ்ட்டை உருவாக்கலாம்.
- இந்தக் கலவையை முகத்தில் சமமாக தடவ வேண்டும்.
- இதை 15 நிமிடங்கள் வைத்து குளிர்ந்த நீரில் கழுவலாம்.
- மாய்ஸ்சரைசர் மற்றும் சன்ஸ்கிரீனைப் பயன்படுத்தி, ஈரப்பதத்தை அப்படியே வைத்திருக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Orange Peel Skin Benefits: இது தெரிஞ்சா இனி ஆரஞ்சு பழத் தோலை தூக்கி போட மாட்டீங்க
அரிசி தண்ணீர், முல்தானி மிட்டி, மாதுளை ஃபேஸ் பேக்
தேவையானவை
- முல்தானி மிட்டி - 1 தேக்கரண்டி
- அரிசி தண்ணீர் - 2-3 தேக்கரண்டி
- எலுமிச்சை சாறு - 4-6 சொட்டுகள்
- மாதுளை பவுடர் - 2 தேக்கரண்டி
செய்முறை
- முதலில் பாத்திரம் ஒன்றில் மாதுளை பவுடர் எடுத்து, அதில் முல்தானி மிட்டி தூள், அரிசி தண்ணீர் மற்றும் எலுமிச்சை சாறு சேர்க்க வேண்டும்.
- இது சீரான நிலைத்தன்மையை அடையும் வரை பேஸ்ட்டாக உருவாக்கலாம்.
- இந்தக் கலவையை முகத்தில் தடவி 20-25 நிமிடங்கள் வைக்கலாம்.
- அதன் பிறகு குளிர்ந்த நீரில் கழுவலாம்.

மாதுளை, கற்றாழை, எலுமிச்சைச் சாறு ஃபேஸ்பேக்
தேவையானவை
- மாதுளை பவுடர் - 2 தேக்கரண்டி
- எலுமிச்சை சாறு - 1 தேக்கரண்டி
- வைட்டமின் சி காப்ஸ்யூல் - 1
- அலோ வேரா ஜெல் - 2 தேக்கரண்டி
செய்முறை
- முதலில் பாத்திரத்தில் மாதுளை பவுடர், எலுமிச்சை சாறு சேர்க்க வேண்டும்.
- பிறகு இதில் கற்றாழை ஜெல் சேர்த்து, நொறுக்கப்பட்ட வைட்டமின் சி காப்ஸ்யூலைச் சேர்த்து கெட்டியான பேஸ்ட்டை உருவாக்க வேண்டும்.
- முகத்தைத் தண்ணீரில் நனைத்து கலவையை 25-30 நிமிடங்கள் வைத்திருக்க வேண்டும்.
- இதைக் குளிர்ந்த நீரில் கழுவி, ஈரப்பதமாக வைக்க மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்தலாம்.
இவ்வாறு எளிமையான முறையில் மாதுளைத் தோல் ஃபேஸ் பேக் தயார் செய்யலாம். இதை சருமத்திற்குப் பயன்படுத்துவது சருமத்தைப் பொலிவாக வைக்க உதவுகிறது. எனினும், இந்த ஃபேஸ் பேக் தயார் செய்ய பயன்படுத்தும் பொருள்கள் ஏதேனும் உங்களுக்கு உணர்திறன் வாய்ந்ததாக இருப்பின் அந்தக் கலவையைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது நல்லது.
இந்த பதிவும் உதவலாம்: இனி மாதுளை தோலை தூக்கி வீசாதீங்க. சருமத்திற்கு நன்மை தரும் மாதுளை தோலின் மகிமைகள் இதோ.
Image Source: Freepik