Fri Sep 11, 2026 | 11:42 PM IST

Expert

இந்த 6 அறிகுறிகள் இருக்கா? உங்க கல்லீரலுக்கு உடனடி நச்சு நீக்கம் தேவை.. நிபுணர் தரும் கூடுதல் குறிப்புகள்

கல்லீரல் உடலின் மிக முக்கிய உறுப்பாகும். ஆனால், உடலில் கல்லீரல் உறுப்பை டிடாக்ஸ் செய்வதற்கு சில அறிகுறிகள் தோன்றலாம். இதில் கல்லீரலை டிடாக்ஸ் செய்வதற்கான அறிகுறிகளையும், கல்லீரலை ஆரோக்கியமாக வைப்பதற்கான குறிப்புகள் குறித்தும் நிபுணர் பகிர்ந்துள்ளதைக் காணலாம்.

உடலில் உள்ள பல்வேறு முக்கிய உறுப்புகளில் ஒன்றாக கல்லீரல் அமைகிறது. இது உடலிலிருந்து நச்சுகளை அகற்றவும், ஹார்மோன்களை சமநிலைப்படுத்தவும், ஆற்றலை சீராக வைத்திருக்கவும் உதவுகிறது. ஆனால், இன்றைய காலத்தில் மோசமான வாழ்க்கைமுறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுமுறைகளின் காரணமாக கல்லீரல் ஆரோக்கியம் எதிர்மறையாகப் பாதிக்கப்படுகிறது. இதனால் கல்லீரல் தொடர்பான நோய்களை இன்று பலரும் சந்திக்கின்றனர். எனவே கல்லீரல் ஆரோக்கியத்தை பாதுகாக்க கூடுதல் கவனிப்பு அவசியமாகும்.

மகிழ்ச்சி தரும் விதமாக, இந்த கல்லீரல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க சிறப்பு சுத்திகரிப்புகள் அல்லது சப்ளிமெண்ட்ஸ் தேவையில்லை. அதன் படி ஆரோக்கியமற்ற உணவுகளைத் தவிர்ப்பதுடன், சீரான உணவுமுறையைக் கையாள்வதன் மூலம் கல்லீரல் தொடர்பான நோய்களிலிருந்து விடுபடலாம். ஆனால், கல்லீரலை சுத்தம் செய்ய விரும்புபவர்கள் எந்த நேரத்தில் சுத்தம் செய்யலாம் என்பது குறித்து தெரியாமல் போகலாம். ஆனால், உடலில் சில அறிகுறிகள் ஏற்படும் போது கல்லீரலை டிடாக்ஸ் செய்ய வேண்டும்.

இதில் கல்லீரலுக்கு உடனடி டிடாக்ஸ் தேவை என்பதற்கான அறிகுறிகள் குறித்து ஹார்மோன் மற்றும் குடல் ஆரோக்கிய பயிற்சியாளரும், உணவியல் நிபுணருமான மன்பிரீத் கல்ரா அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். இதில் அதைப் பற்றிக் காண்போம்.

இந்த பதிவும் உதவலாம்: ஜங்க் உணவு OUT – ப்ரோக்கோலி IN! Fatty Liver-ஐ தடுக்கும் இயற்கை மருந்து இதுதான்!

கல்லீரலுக்கு உடனடி டிடாக்ஸ் தேவை என்பதற்கான 6 அறிகுறிகள்

நிபுணரின் கூற்றுப்படி, “உங்கள் கல்லீரல் 24×7 அமைதியாக நச்சுகளை வடிகட்டவும், ஹார்மோன்களை ஒழுங்குபடுத்தவும், வளர்சிதை மாற்றத்தை சமநிலைப்படுத்தவும் செயல்படுகிறது. ஆனால் அது குப்பை உணவு, மன அழுத்தம் அல்லது மருந்துகளால் அதிகமாக இருக்கும்போது - அது துன்பத்தின் அறிகுறிகளைக் காட்டத் தொடங்குகிறது” என நிபுணர் பரிந்துரைக்கிறார்.

கீழே கொடுக்கப்பட்ட இந்த அறிகுறிகள் இருக்கும் போது கல்லீரலுக்கு உடனடி டிடாக்ஸ் தேவை என்பதைக் குறிக்கிறது.

1.நிலையான சோர்வு

“முழு ஓய்வுக்குப் பிறகும் சோர்வாக இருப்பது உங்கள் கல்லீரல் நச்சுகளை திறம்பட அகற்றவில்லை என்பதாகும்” என்று நிபுணர் கூறுகிறார். சில சமயங்களில், நம் உடல் போதுமான ஓய்வு எடுத்த பிறகும் சோர்வை உணரக்கூடும். இது கல்லீரலை டிடாக்ஸ் செய்ய வேண்டும் என்பதைக் குறிக்கிறது.

2.தலைவலி அல்லது மூளை மூடுபனி

“நச்சு குவிப்பு கவனத்தை மந்தமாக்கி மூளையின் செயல்பாட்டை மெதுவாக்கும்” என்று நிபுணர் கூறுகிறார். உடலில் நச்சுக்கள் குவியும் போது அது தலைவலியை ஏற்படுத்தக்கூடும். மேலும் இது மூளை மூடுபனிக்கு வழிவகுக்கிறது. இவை அனைத்துமே கல்லீரலை சுத்தம் செய்வதற்கான நேரமாகக் கருதப்படுகிறது.

3.முகப்பரு அல்லது அரிப்பு தோல்

நிபுணரின் கூற்றுப்படி, “உங்கள் கல்லீரலால் நச்சுகளை வெளியேற்ற முடியாதபோது, உங்கள் தோல் வேலையைச் செய்ய முயற்சிக்கிறது - இது தடிப்புகள் அல்லது வெடிப்புகளுக்கு வழிவகுக்கிறது” என்று கூறுகிறார். உடலில் நச்சுக்கள் குவியும் போது, அதன் அறிகுறிகள் சருமத்தில் தோன்றக்கூடும். இவை உடலை நச்சு நீக்கம் செய்ய ஊக்குவிக்கிறது.

4.வீக்கம் & மோசமான செரிமானம்

“மந்தமான பித்த ஓட்டம் உணவுக்குப் பிறகு வீக்கம், வாயு அல்லது அசௌகரியத்தை ஏற்படுத்தும்” என்று நிபுணர் பரிந்துரைக்கிறார். உணவு உட்கொண்ட பிறகு செரிமான அசௌகரியங்களைச் சந்திக்கும் நிலை ஏற்படுவது கல்லீரல் நச்சு நீக்கத்திற்கு வழிவகுக்கிறது.

இந்த பதிவும் உதவலாம்: மஞ்சள்.. கல்லீரலுக்கு நல்லதா.? கெட்டதா.? ஹார்வர்டு டாக்டரின் பதில்..

5.கசப்பான சுவை அல்லது வாய் துர்நாற்றம்

“இது உங்கள் கல்லீரல் மற்றும் பித்தப்பை நச்சுகளால் அதிகமாக நிரம்பியிருப்பதற்கான அறிகுறி” என நிபுணர் கூறினார். அதாவது, உடலில் நச்சுக்கள் நிரம்பியிருக்கும் போது, அதை எடுத்துக் கூறும் விதமாக, வாயில் கசப்பான சுவையுடன், துர்நாற்றமும் ஏற்படலாம்.

6.ஹார்மோன் சமநிலையின்மை

நிபுணர் கூறியதாவது, “மோசமான கல்லீரல் நச்சு நீக்கம் ஈஸ்ட்ரோஜன் ஆதிக்கம், PMS மற்றும் மனநிலை ஊசலாட்டங்களுக்கு வழிவகுக்கும்” என்று கூறியுள்ளார். கல்லீரல் நச்சு நீக்கம் செய்யாத போது ஈஸ்ட்ரோஜன் ஆதிக்கம் ஏற்பட்டு பல்வேறு உடல், மனநலம் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படக்கூடும்.

இந்த அறிகுறிகள் அனைத்தும், உங்கள் கல்லீரலை நச்சு நீக்கம் செய்வதை ஊக்குவிக்கிறது.

கல்லீரலை இயற்கையாகவே குணப்படுத்த 3 நிபுணர் குறிப்புகள்

1.சூடான எலுமிச்சை நீரில் நாளைத் தொடங்குவது

காலையில் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சேர்த்து குடிப்பது பித்த ஓட்டத்தை அதிகரிக்கவும், நச்சு நீக்கத்திற்கும் உதவுகிறது.

2.கல்லீரலை விரும்பும் உணவுகளைச் சேர்ப்பது

கல்லீரலை நச்சு நீக்கவும், கல்லீரல் ஆரோக்கியத்தை ஆதரிக்கவும் பீட்ரூட், நெல்லிக்காய், பூண்டு, மஞ்சள் மற்றும் இலை கீரைகளை தினமும் சேர்க்க வேண்டும்.

3.ஆல்கஹால் மற்றும் சர்க்கரையைக் குறைப்பது

கல்லீரலின் சுமையைக் குறைத்து இயற்கையான மீளுருவாக்கத்தை அனுமதிக்க ஆல்கஹால் மற்றும் சர்க்கரை உட்கொள்ளலைக் குறைக்க வேண்டும்.

இந்த குறிப்புகள் கல்லீரல் தன்னைத்தானே குணப்படுத்த ஊக்குவிக்கிறது.

பொறுப்புத்துறப்பு

இதில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. எனினும், தனிப்பட்ட தகவல்களைப் பெற விரும்புபவர்கள் அல்லது புதிய முயற்சிகளைக் கையாள விரும்புபவர்கள் எப்போதும் தகுதிவாய்ந்த நிபுணரை அணுகுவது நல்லது.

இந்த பதிவும் உதவலாம்: கல்லீரல் ஆரோக்கியமாக இருக்க சாப்பிட வேண்டிய உணவு மற்றும் மூலிகைகள்.. மருத்துவர் பரிந்துரை..

Image Source: Freepik

Read Next

மழைக்காலத்தில் யானைக்கால் நோயிலிருந்து பாதுகாக்க 7 முக்கிய வழிகள்.. மருத்துவர்கள் எச்சரிக்கை..

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

கௌதமி சுப்ரமணி

கௌதமி சுப்ரமணி

இளைய உள்ளடக்க எழுத்தாளர்

நான் கௌதமி சுப்ரமணியம், டிஜிட்டல் மீடியாவில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறேன். ஆரோக்கியம், உணவு, உடற்பயிற்சி, உடல் நலம், அழகு குறிப்பு போன்றவை தொடர்பான விவரங்களை ஆராய்ந்து கட்டுரைகளை எழுதி வருகிறேன். நான் எழுதும் ஒவ்வொரு பகுதியும் ஈர்க்கக்கூடியதாக இருப்பதை உறுதிசெய்து, விவரங்களுக்கு ஒரு தீவிரமான பார்வையை வளர்த்துக்கொண்டேன். மக்களுக்குத் தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான இலக்கை மேம்படுத்துவது எனது நோக்கம் ஆகும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

    Oct 24, 2025 13:14 IST

    Published By : கௌதமி சுப்ரமணி

Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content