Sat Sep 12, 2026 | 12:06 AM IST

Expert

இந்த 5 அறிகுறிகள் இருக்கா? முடிக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம்.. அதைத் தடுக்க நீங்க சாப்பிட வேண்டிய ரெசிபிகள்

இன்று பலரும் முடி உதிர்வு, வறண்ட மற்றும் உலர்ந்த முடி, நுனி முடி பிளவு போன்ற முடி சார்ந்த  பிரச்சனைகளைச் சந்தித்து வருகின்றனர். இதில் பொதுவான முடி சார்ந்த பிரச்சனைகள் குறித்தும், அதிலிருந்து விடுபட உதவும் உணவுகள் குறித்தும் நிபுணர் பகிர்ந்துள்ளதைக் காணலாம்.

இன்றைய நவீன காலத்தில் மோசமான வாழ்க்கைமுறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுமுறையின் காரணமாக பலரும் பலதரப்பட்ட பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். இதில் முடி தொடர்பான பிரச்சனைகளும் அடங்குகிறது. போதிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் பராமரிப்பு இல்லாமை காரணமாக, மக்கள் தங்களது அன்றாட வாழ்வில் முடி உதிர்வு, வறண்ட மற்றும் உலர்ந்த முடி, நுனி முடி பிளவு உள்ளிட்ட பல்வேறு முடி சார்ந்த பிரச்சனைகளைச் சந்திக்கும் பிரச்சனைகளைச் சந்திக்கும் சூழல் ஏற்படலாம்.

இதில் நாம் புறக்கணிக்கக் கூடாத முடி பிரச்சனைகள் குறித்தும், முடி ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் ரெசிபிகள் குறித்தும் ஆரோக்கிய ஊட்டச்சத்து நிபுணராக விளங்கும் குஷி சாப்ரா அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். அதைப் பற்றி இங்குக் காண்போம்.

தலைமுடி பிரச்சனைகள், அதைத் தீர்க்க உதவும் ரெசிபிகள்

நிபுணரின் கூற்றுப்படி, பெரும்பாலான மக்கள் தங்கள் தலைமுடியை வெளிப்புறமாக கவனித்துக்கொள்கிறார்கள். ஆனால் உங்கள் தலைமுடியின் உண்மையான ஆரோக்கியம் உள்ளிருந்து தொடங்குகிறது! இந்த எச்சரிக்கை அறிகுறிகள் உடலுக்கு மேற்பரப்புக்கு அப்பாற்பட்ட ஒன்றைச் சொல்ல முயற்சிக்கின்றன என்று கூறினார்.

வறண்ட, உடையக்கூடிய கூந்தல்

இது புரதம் மற்றும் ஒமேகா குறைபாட்டைக் குறிக்கிறது. முடி உதிர்தலைப் போக்க உதவும் லட்டு ரெசிபியை நிபுணர் பகிர்ந்துள்ளார். அதை எடுத்துக் கொள்வதன் மூலம், தலைமுடி பளபளப்பாகவும் ஆரோக்கியமாகவும் மாறுவதை உணரலாம்.

அதிகப்படியான முடி உதிர்வு

இது குறைந்தளவிலான வைட்டமின் டி மற்றும் இரும்புச்சத்து குறைபாட்டைக் குறிக்கிறது.

தொடர்ச்சியான பொடுகு

துத்தநாகக் குறைபாடு மற்றும் நீரிழப்புக்கான ஒரு பொதுவான அறிகுறியாகும். இந்நிலையில், உணவில் பூசணி விதைகளைச் சேர்த்து சரியாக நீரேற்றம் செய்வதன் மூலம் சரிசெய்யலாம்.

நாள்பட்ட மன அழுத்தம்

குறைந்த இரும்பு அளவு மற்றும் நாள்பட்ட மன அழுத்தம் போன்றவை முடி மெலிவதற்கு காரணமாக இருக்கலாம். எனது கலா சனா பீட்ரூட் டிக்கியைச் சேர்க்கலாம். ஃபோலேட்டை அதிகரிக்கலாம் மற்றும் தினமும் 10 நிமிடங்கள் தியானம் செய்யலாம்.

இந்த பதிவும் உதவலாம்: பொசுபொசுனு முடி ஸ்ட்ராங்கா வளர வீட்டிலேயே நீங்க பின்பற்ற வேண்டியவை..

முடி நரைப்பது

வைட்டமின் பி12 மற்றும் தாமிரக் குறைபாட்டால் முன்கூட்டியே நரைத்தல் ஏற்படுகிறது. இதற்கு உச்சந்தலையில் ஊட்டச்சத்திற்காக பால், கருப்பு எள் விதைகள் மற்றும் சர்க்கரைவள்ளிக்கிழங்கு காய்கறி டிக்கி ஆகியவற்றைச் சேர்க்கலாம்.

எனவே முடி ஆரோக்கியத்தையும், அதிக ஊட்டச்சத்து மற்றும் நல்வாழ்வையும் மேம்படுத்த உடலை உள்ளிருந்து வேலை செய்ய வைப்பது அவசியமாகும்.

முடி பிரச்சனைகளப் போக்க உதவும் ரெசிபிகள்

முடி உதிர்தலை மாற்றும் லட்டு

தேவையான பொருட்கள்

  • வெள்ளை எள் - 1/4 கப்
  • கருப்பு எள் - 1/4 கப்
  • பூசணி விதைகள் - 1/4 கப்
  • வால்நட்ஸ் - 1/2 கப்
  • உலர்ந்த தேங்காய் - 1/4 கப்
  • மெட்ஜூல் பேரீச்சம்பழம் - 10-12 (குழி நீக்கப்பட்டது)
  • எலாய்ச்சி பவுடர் - 1/2 தேக்கரண்டி

சேமிப்பு

  • வெளிப்புற குளிர்சாதன பெட்டி: 7 நாட்கள்
  • குளிர்சாதன பெட்டியில்: 12 நாட்கள்

சிறந்த நேரம்

  • மதியம் அல்லது மாலை சிற்றுண்டி / இனிப்பு

நன்மைகள்

வலுவான முடி மற்றும் மந்தமான முடி உதிர்தலுக்கு உதவக்கூடிய துத்தநாகம், ஒமேகா-3, பயோட்டின், இரும்பு மற்றும் ஆக்ஸிஜனேற்றிகளைக் கொண்டுள்ளது.

சர்க்கரைவள்ளிக் கிழங்கு காய்கறி டிக்கி

தேவையான பொருட்கள்

  • வேகவைத்த சர்க்கரைவள்ளிக் கிழங்கு - 1 கப் (மசித்தது)
  • துருவிய கேரட் - 1/4 கப்
  • நறுக்கிய கேப்சிகம் - 1/4 கப்
  • நறுக்கிய வெங்காயம் - 1/4 கப்
  • கொத்தமல்லி இலைகள்
  • ஜீரா தூள், கருப்பு மிளகு, இளஞ்சிவப்பு உப்பு
  • கடலைப்பருப்பு - 1–2 தேக்கரண்டி (அரைத்தது)
  • நெய்/ஆலிவ் எண்ணெய் - ஆழமற்ற வறுத்தலுக்கு

செய்முறை

  1. இந்த அனைத்து பொருட்களையும் கலக்க வேண்டும்
  2. அவற்றை டிக்கிகளாக வடிவமைக்கலாம்
  3. பின், மொறுமொறுப்பாக வறுக்கலாம்

நன்மைகள்

இவை உச்சந்தலை மற்றும் முடி வளர்ச்சிக்குத் தேவையான வைட்டமின் ஏ ஊட்டச்சத்து நிறைந்ததாகும்.

இந்த பதிவும் உதவலாம்: முடி உதிர்வை தடுக்க செம்பருத்தி ஹேர் பேக் – மருத்துவர் மைதிலி கூறும் எளிய முறை!

எலுமிச்சை நீரில் ஹலீம் விதைகள்

தேவையான பொருட்கள்

  • ஹலீம் விதைகள் (இரவில் ஊறவைத்தது) – 1 தேக்கரண்டி
  • எலுமிச்சை நீர் அல்லது வெதுவெதுப்பான நீர்

எப்படி உட்கொள்ள வேண்டும்

  • அதிகாலையில் குடிக்கலாம்

நன்மைகள்

இந்த பானம் சிறந்த இரும்பு மற்றும் புரதம் நிறைந்ததாகும். இவை இரண்டுமே முடி உதிர்தலைக் கட்டுப்படுத்த உதவும் ஆதாரமாகும்.

View this post on Instagram

A post shared by Khushi Chhabra • Holistic Health Nutritionist (@nutritionwith_khushi)

கொண்டைக்கடலை பீட்ரூட் டிக்கி+ இரும்பு சூப்

தேவையான பொருட்கள் (டிக்கி)

  • வேகவைத்த கொண்டைக்கடலை - 1⁄2 கப் (துருவியது/மசித்தது)
  • வேகவைத்த பீட்ரூட் துருவியது - 1⁄2 கப்
  • கடலைப்பருப்பு - 1–2 தேக்கரண்டி
  • மசாலா & கொத்தமல்லி
  • நெய்/ஆலிவ் எண்ணெய் - ஆழமற்ற வறுக்க

செய்முறை

  1. இவை கலந்து டிக்கிஸ் செய்ய வேண்டும்
  2. ஷாலோ ஃப்ரை செய்யவும்

குறிப்பு: இரும்புச்சத்து நிறைந்த சூப்

  1. மீதமுள்ள வேகவைத்த சன்னா தண்ணீரைப் பயன்படுத்தலாம்
  2. நெய், சீரகம் மற்றும் கொத்தமல்லி தட்கா சேர்க்கலாம்
  3. பின், சூடாக குடிக்க வேண்டும்

நன்மைகள்

இது சிறந்த முடி அடர்த்திக்குத் தேவையான இரும்பு-ஃபோலேட் கலவையைக் கொண்டுள்ளது.

முருங்கை நெல்லிக்காய் தேன் - கூந்தலை வலுப்படுத்தும் பேஸ்ட்

தேவையான பொருட்கள்

  • தேன் - 2 டேபிள் ஸ்பூன்
  • முருங்கைப் பொடி - 1 டேபிள் ஸ்பூன்
  • நெல்லிக்காய் பொடி - 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை

  1. இந்தக் கலவையை உச்சந்தலையில் தடவ வேண்டும்.
  2. 20-25 நிமிடங்கள் வைத்து பின்னர்கழுவலாம்
  3. இதை வாரத்திற்கு 1–2 முறை பயன்படுத்துவது நல்லது.

நன்மைகள்

இதில் உள்ள வைட்டமின் சி, ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் தாதுக்கள் முடியின் வேர்களை அதிகரிக்க உதவுகிறது.

இந்த ரெசிபிகளைப் பயன்படுத்தி, ஆரோக்கியமான மற்றும் வலுவான முடியைப் பெறலாம்.

பொறுப்புத்துறப்பு

இதில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. எனினும், தனிப்பட்ட தகவல்களைப் பெற விரும்புபவர்கள் அல்லது புதிய முயற்சிகளைக் கையாள விரும்புபவர்கள் எப்போதும் தகுதிவாய்ந்த நிபுணரை அணுகுவது நல்லது.

இந்த பதிவும் உதவலாம்: பட்டு போன்ற மென்மையான முடி வேணுமா? வீட்டிலேயே கிடைக்கும் இந்த பொருள்களை வைத்து ஹேர் மாஸ்க் செய்யுங்க..

Image Source: Freepik

Read Next

பட்டு போன்ற மென்மையான முடி வேணுமா? வீட்டிலேயே கிடைக்கும் இந்த பொருள்களை வைத்து ஹேர் மாஸ்க் செய்யுங்க..

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

கௌதமி சுப்ரமணி

கௌதமி சுப்ரமணி

இளைய உள்ளடக்க எழுத்தாளர்

நான் கௌதமி சுப்ரமணியம், டிஜிட்டல் மீடியாவில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறேன். ஆரோக்கியம், உணவு, உடற்பயிற்சி, உடல் நலம், அழகு குறிப்பு போன்றவை தொடர்பான விவரங்களை ஆராய்ந்து கட்டுரைகளை எழுதி வருகிறேன். நான் எழுதும் ஒவ்வொரு பகுதியும் ஈர்க்கக்கூடியதாக இருப்பதை உறுதிசெய்து, விவரங்களுக்கு ஒரு தீவிரமான பார்வையை வளர்த்துக்கொண்டேன். மக்களுக்குத் தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான இலக்கை மேம்படுத்துவது எனது நோக்கம் ஆகும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

    Nov 04, 2025 13:57 IST

    Published By : கௌதமி சுப்ரமணி

Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content