Fri Sep 11, 2026 | 11:11 PM IST

Doctor Verified

நிமோனியாவுக்கு பால் தேநீர் ஆபத்தா? நிபுணர் கூறும் பாதுகாப்பான மூலிகை தேநீர் வகைகள்!

நிமோனியா பாதிக்கப்பட்டவர்கள் பால் தேநீர் குடிப்பது நுரையீரல் வீக்கத்தை மோசமாக்குமா? நிபுணர் விளக்கும் பாதுகாப்பான மூலிகை தேநீர் வகைகள், நிமோனியா அறிகுறிகளை குறைக்கும் இயற்கை வழிகள் இங்கே!

நுரையீரலில் ஏற்படும் வீக்கம் மற்றும் சுவாச பிரச்சனைக்கான முக்கிய காரணிகளில் ஒன்று நிமோனியா ஆகும். இது பாக்டீரியா, வைரஸ் அல்லது பூஞ்சை தொற்றால் ஏற்பட்டு, நுரையீரல் திசுக்களில் சீழ் நிரப்பப்படுகிறது. இதனால் நோயாளிக்கு நீண்ட இருமல், மூச்சு விடுவதில் சிரமம் மற்றும் உடல் பலவீனம் ஏற்படும்.

இந்நிலையில் பலர் “தேநீர் குடிக்கலாமா?” என்ற கேள்வியுடன் குழம்புகிறார்கள். குறிப்பாக, பால் தேநீர் நிமோனியாவுக்கு நல்லதா கெட்டதா என்ற சந்தேகம் பெரும்பாலோரிடமும் உள்ளது. இந்த கேள்விக்கு விடை அளித்துள்ளார் அப்பல்லோ ஸ்பெக்ட்ரா மருத்துவமனை, டெல்லியின் மூத்த நுரையீரல் நிபுணர் டாக்டர் ப்ரீத்பால் கவுர்.

நிமோனியாவில் பால் டீ குடிக்கலாமா?

“நிமோனியா காலத்தில் பால் தேநீர் தவிர்ப்பது நல்லது. பால் தேநீர் நுரையீரல் நெரிசல் மற்றும் இருமலை அதிகரிக்கக்கூடும். மேலும், அதில் உள்ள சர்க்கரை மற்றும் காஃபின் உடலின் நோயெதிர்ப்பு சக்தியை குறைத்து, நீரிழப்பை ஏற்படுத்துகிறது” என்று டாக்டர் ப்ரீத்பால் கவுர் விளக்குகிறார். பால் தேநீர் உடலின் mucus secretion அளவை அதிகரிக்கிறது, இது நுரையீரல் பகுதியில் சளி அடைப்பை ஏற்படுத்தி சுவாசத்தை மேலும் கடினப்படுத்தும் அபாயம் உண்டு.

நிமோனியாவில் எந்த டீ குடிப்பது பாதுகாப்பானது?

மருத்துவர் கூறுகிறார், சில மூலிகை தேநீர்கள் நிமோனியாவில் நிவாரணம் அளிக்கக்கூடியவை. குறிப்பாக, புதினா + யூகலிப்டஸ் + வெந்தயம் சேர்த்து தயாரிக்கும் தேநீர் மிகவும் பயனுள்ளதாகும்.

இந்த பதிவும் உதவலாம்: நிமோனியாவிலிருந்து விரைவாக குணமடைய உதவும் 5 சிறந்த உணவுகள்

இந்த மூலிகை தேநீரின் ஆரோக்கிய நன்மைகள்

புதினா (Peppermint): மெந்தோல் நிறைந்த புதினா சளியை நீர்த்துப் போகச் செய்து, இருமல் மற்றும் தொண்டை எரிச்சலை குறைக்கும்.

யூகலிப்டஸ் (Eucalyptus): சுவாசக் குழாய்களைத் திறந்து, ஆக்ஸிஜன் ஓட்டத்தை மேம்படுத்துகிறது. நிமோனியாவில் ஏற்படும் மூச்சுத்திணறலை குறைக்கும் இயற்கை வழி இது.

வெந்தயம் (Fenugreek): உடலின் அழற்சியை குறைத்து, நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது. இதன் சத்துகள் நுரையீரல் சுத்தமடையவும், தொற்று நோய்களுக்கு எதிராக போராடவும் உதவுகின்றன.

எச்சரிக்கை

மூலிகை தேநீர் குடிப்பது நல்லது என்றாலும், அதிகமாக சூடாக குடிக்கக் கூடாது. மிகவும் சூடான பானம் தொண்டையை எரிச்சலடையச் செய்து, இருமலை மோசமாக்கும் அபாயம் உண்டு. மேலும், பாலுடன் சேர்த்து தேநீர் அருந்துவது அஜீரணம், வாயு பிரச்சனை, மற்றும் வயிற்று நெரிசல் போன்ற பிரச்சனைகளை உண்டாக்கும். இது நிமோனியாவின் அறிகுறிகளை மேலும் மோசமாக்கும் வாய்ப்பும் உண்டு.

இறுதியாக..

நிமோனியாவின்போது உடல் மிகவும் பலவீனமாக இருக்கும். அப்போது பால் தேநீர் போன்ற காஃபின் அடங்கிய பானங்களைத் தவிர்த்து, மூலிகை தேநீரைத் தேர்வு செய்வது நுரையீரலுக்கு நிவாரணம் அளிக்கும். ஆனால், வீட்டிலேயே சிகிச்சை செய்வதற்குப் பதிலாக மருத்துவரின் ஆலோசனையைப் பின்பற்றுவது தான் சரியான பாதை.

Disclaimer: இந்த கட்டுரை தகவல் பரிமாற்ற நோக்கத்திற்காக மட்டுமே. இது மருத்துவ ஆலோசனை அல்ல. நிமோனியா அல்லது பிற சுவாச நோய்களுக்கு, தகுந்த மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது அவசியம்.

Read Next

காது க்ளீன் செய்ய பருத்தி துணியை பயன்படுத்தாதீங்க.. மருத்துவர் தரும் அறிவுரை

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

Ishvarya Gurumurthy

Ishvarya Gurumurthy

துணை ஆசிரியர்

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

    Nov 12, 2025 12:03 IST

    Published By : Ishvarya Gurumurthy

Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content