World Idli Day: பற்கள் இல்லாத சிறு குழந்தைகள் முதல் பற்களை இழந்த முதியவர்கள் வரை அனைவரும் எளிதாகவும் விரும்பி உண்ணக்கூடிய உணவுப் பொருள் ஏதேனும் இருந்தால் இட்லி மட்டும்தான் என்று உறுதியாகச் சொல்லலாம். இட்லி ஒரு சுவையான உணவு மட்டுமல்ல, அதை சாப்பிடுவது உடல் பருமன் முதல் எடை இழப்பு வரை பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது.
இட்லியின் மற்றொரு தனிச்சிறப்பு என்னவென்றால், அது ஜீரணிக்க மிகவும் எளிதானது. அதனால் கர்ப்பிணிகள், அறுவை சிகிச்சை செய்தவர்கள் இட்லி சாப்பிடுவது நல்லது என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

இட்லியின் சிறப்பை கொண்டாடும் வகையில், உலகம் முழுவதும் மார்ச் 30ஆம் தேதி அன்று, உலக இட்லி தினம் (World Idli Day) கொண்டாடப்படுகிறது. அந்தவகையில் இன்று உலக இட்லி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் இட்லியை உண்பதால் என்ன நன்மைகள் கிடைக்கும்? என்பதை இங்கே காண்போம்.
இதையும் படிங்க: காலை டிஃபன்.. வகைவகையான இட்லி ரெடி.! ரொம்ப நல்லது..
இட்லி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் (Benefits Of Idli)
செரிமான அமைப்புக்கு நல்லது
இட்லி சாப்பிடுவதால் வயிறு நிரம்பியதாக இருக்கும். இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் செரிமானத்தை எளிதாக்குகிறது. இதன் விளைவாக, செரிமான அமைப்பு சிறப்பாக செயல்படுகிறது.
தசைகள் வலுபெறும்
இட்லி புளித்த உணவு என்பதால், தசை வளர்ச்சிக்கு தேவையான புரதச்சத்து இதில் நிறைந்துள்ளது.
இதயத்திற்கு நல்லது
இட்லி தயாரிப்பில் எண்ணெய், நெய் போன்ற கொழுப்பை உண்டாக்கும் பொருட்கள் இல்லை. மசாலா எதுவும் இல்லை. எனவே இவை ஆரோக்கியத்திற்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. மேலும் இதில் உள்ள இயற்கை கொழுப்பு இதய ஆரோக்கியத்தை மேலும் மேம்படுத்துகிறது.
எடை குறையும்
உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் கண்டிப்பாக உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டிய உணவுப் பொருள் இட்லி. இதில் கலோரிகளும் குறைவு. எவ்வளவு சாப்பிட்டாலும் உடல் எடை அதிகரிக்காது.
குடலுக்கு நல்ல
புளிக்கக்கூடிய உணவுகளில் புரோபயாடிக்குகள் அடங்கும். இவற்றை உண்பதன் மூலம் உடலுக்கு தேவையான வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் கிடைக்கும். அவை உடலுக்கு தீங்கு விளைவிக்கும் கார்போஹைட்ரேட், கொழுப்பு மற்றும் புரதங்களை அழித்து குடல்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகின்றன.
Image Source: Freepik