குளித்தால் வராத சளி, காய்ச்சல் மழையில் நனைந்தால் ஏன் வருது? சிந்திக்கனும் மக்களே!

வீட்டில் நீண்ட நேரம் குளிக்கும் போது வராத ஜலதோஷமும், காய்ச்சலும் மழையில் சிறிது நேரம் நனைந்தாலே வந்துவிடுகிறது, அது ஏன் என்று எப்போதாவது சிந்தித்தது உண்டா? இதற்கான காரணத்தையும் தீர்வையும் பார்க்கலாம்.
  • SHARE
  • FOLLOW
குளித்தால் வராத சளி, காய்ச்சல் மழையில் நனைந்தால் ஏன் வருது? சிந்திக்கனும் மக்களே!

வீட்டில் நீண்ட நேரம் குளித்தாலும் வராத காய்ச்சலும், ஜலதோஷமும் மழையில் சிறிது நேரம் நனைந்தாலே வந்துவிடும். மழையில் நனைந்தாலே அப்படித்தான் என்றுதான் பலரும் சிந்திப்பார்கள். ஆனால் இதற்கான காரணம் என்ன, இதை தடுப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்று எப்போதாவது சிந்தித்தது உண்டா? இதற்கு காரணமும் தீர்வும் இருக்கிறது.

சில அடிப்படை காரணங்களை அறிவதன் மூலம் நம் உடலைப் புரிந்துகொள்வதும் நமது ஆரோக்கியத்தைக் கண்காணிப்பதும் எளிதாகிவிடும். மழையில் நனைந்த உடனே நோய்வாய்ப்பட்டவராக இருந்தால், இந்தக் பதிவு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது எதனால் நிகழ்கிறது மற்றும் அத்தகைய நிலையில் தன்னை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து பார்க்கலாம்.

அதிகம் படித்தவை: Hair loss prevention tips: தூங்கும் போது முடி உதிர்வைக் கட்டுப்படுத்த இதெல்லாம் செய்யுங்க

இதுகுறித்து சாரதா மருத்துவமனையின் டாக்டர். ஷ்ரே ஸ்ரீவஸ்தவா, MBBS, MD- இன்டர்னல் மெடிசின், கூறிய தகவலை பார்க்கலாம்.

after-rain-wet-health-tips

மழைக்காலமானது டைபாய்டு, வயிற்றுப்போக்கு, மஞ்சள் காமாலை போன்ற பல தொற்று பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். டெங்கு, சிக்குன்குனியா மற்றும் மலேரியா போன்ற கொசுக்களால் பரவும் நோய்களும் பருவமழையின் போது அதிகரிக்கும். மழையில் நனைவது என்பது நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும்.

மழையில் நனைந்த பிறகு பெரும்பாலானவர்களுக்கு சளி, இருமல், காய்ச்சல் போன்றவை ஏற்படும். அதேபோல் சிலருக்கு மழையின் போது வயிற்றுப்போக்கு ஏற்படும் சில சம்பவங்களும் காணப்படுகின்றன. டாக்டர். ஸ்ரீவஸ்தவாவின் கூற்றுப்படி, கடுமையான மழைப்பொழிவு மற்றும் அசுத்தமான நீர் குடிப்பதன் காரணமாக வயிற்றுப் போக்கு பிரச்சனை ஏற்படுகிறது. அதோடு மழையில் தேங்கும் நீர்கள் காரணமாக கொசுக்கள் உற்பத்தியாக டெங்கு, மலேரியா போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது.

மழையில் நனைந்தால் சளி வருமா?

பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவராக இருந்தால் எளிதாக சளி, இருமல் மற்றும் காய்ச்சல் போன்ற பிரச்சனைகளை நீங்கள் சந்திக்கலாம். மழையில் நனைந்த பிறகு நாம் எளிதில் நோய்வாய்ப்படுவதற்குக் காரணம் வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்களின் வெளிப்பாடு அதிகரிப்பதே ஆகும்.

இது சளியைத் தவிர மற்ற நோய்களின் அபாயத்தை இரட்டிப்பாக்குகிறது. குளிர்காலத்தில் மழையில் நனைந்தால், வெப்பநிலை ஏற்கனவே மிகக் குறைவாக இருக்கும், மழை உங்கள் உடல் வெப்பநிலையை மேலும் குறைக்கிறது. இது உடலை தாழ்வெப்பநிலையை சந்திக்க வைக்கிறது.

ஹைப்போதெர்மியா என்பது மனித உடல் விரைவாக உடல் வெப்பத்தை இழக்கும் மற்றும் உடலைத் தணிக்க போதுமான வெப்பத்தை உருவாக்க முடியாத ஒரு நிலை ஆகும். அப்போது அபாயகரமான குறைந்த உடல் வெப்பநிலையாகக் குறையும். ஹைப்போதெர்மியா நிலை என்பது மருத்துவ அவசரநிலை ஆகும், இது நோயெதிர்ப்பு மண்டலத்தை கஷ்டப்படுத்தி உடலை பலவீனப்படுத்தும். இதனால்தான் சிலருக்கு மழையில் நனைந்த உடனேயே காய்ச்சல் வர ஆரம்பிக்கும்.

மழையில் நனைவதால் ஏன் காய்ச்சல் வருகிறது?

மழை நீரில் நனைந்தவுடன் காய்ச்சல் ஏன் வருகிறது என்று கேட்டால், மழை நீரில் அதிக ஈரப்பதம் உள்ளது, இது வைரஸ்கள், பாக்டீரியா மற்றும் பிற நுண்ணுயிரிகளை சுறுசுறுப்பாக்கச் செய்கிறது. நீங்கள் மழையில் நனையும் போது இந்த நுண்ணுயிரிகள் உடலுக்குள் நுழையலாம் மற்றும் பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட ஒருவர் இவற்றுக்கு எளிதில் இரையாகிவிடலாம்.

பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்கள் சில நாட்கள் அல்லது ஒரு வாரம் அல்லது அதற்கு மேல் நோய்வாய்ப்பட்டிருக்கலாம். உங்கள் உடல் தன்னைத்தானே குணப்படுத்திக் கொள்ள நேரம் தேவைப்படுகிறது, அதற்கு தேவையான ஓய்வு மற்றும் மருத்துவ உதவிகளை வழங்குவது அவசியம்.

இதையும் படிங்க: Lemon clove water benefits: காலையில் காபிக்குப் பதிலா இந்த லெமன் கிராம்பு வாட்டரை குடிங்க!

மழையில் நனைந்தவுடன் காய்ச்சல் வராமல் இருக்க என்ன செய்வது?

மழையில் நனைந்தவுடன் காய்ச்சல் வராமல் இருக்க மக்கள் உடனடியாக சூடான தண்ணீரில் குளிக்க வேண்டும். அதேபோல் உணவு முறையில் சிறப்பு கவனம் செலுத்துவதும் முக்கியம். மேலும் ஆவிப்பிடித்தல், முறையான மருத்துவ நிலை மேற்கொள்வது உங்களை நோய் வாய்ப்படுவதில் இருந்து பாதுகாக்க உதவும். மழையில் நனைந்த உடன் நீண்ட நேரம் ஈரத்துணியுடன் இருப்பதும் நோய் பரவுவதற்கு காரணமாக இருக்கிறது. எனவே மழையில் நனைந்தால் உடனடியாக உடையை மாற்றவும்.

image source: freepik

Read Next

Eyes rubbing causes: கண்களை அடிக்கடி தேய்ப்பவர்களா நீங்க? முதலில் இத கவனிங்க

Disclaimer

குறிச்சொற்கள்