
வாழைப்பழம் என்பது எந்த வயதினராலும் விரும்பி சாப்பிடப்படும் மிக சத்தான பழம். ஆனால் அதன் ஆரோக்கிய நன்மைகள் அது எந்த நிலை (Stage) ல் இருக்கிறது என்பதையே பொறுத்தது என்பது உங்களுக்குத் தெரியுமா?
முக்கியமான குறிப்புகள்:-
AIIMS, ஹார்வர்ட், ஸ்டான்ஃபோர்டு ஆகியவற்றில் பயிற்சி பெற்ற காஸ்ட்ரோஎன்டரோலஜிஸ்ட் டாக்டர் சௌரப் சேதி, வாழைப்பழத்தின் 4 நிலைகளில் உள்ள வேறுபட்ட ஊட்டச்சத்துக்கள் குறித்து விளக்கி இருக்கிறார். இப்போது ஒவ்வொரு நிலையையும் பார்த்து, எது எதற்கு நல்லது என்பதை தெளிவாக பார்ப்போம்.
நிலை 1 — பச்சை வாழைப்பழம் (Green Banana)
குடல் ஆரோக்கியத்திற்கு சிறந்தது. பழுக்காமல் இருக்கும் பச்சை வாழைப்பழங்களில் அதிகளவு Resistant Starch உள்ளது. இது ஒரு வகை நார்ச்சத்து; குடலுக்கு இயற்கையான ப்ரிபயாட்டிக்.
இதன் நன்மைகள்:
* நார் அதிகம்
* சர்க்கரை குறைவாக (100g ≈ 10g sugar)
* செரிமானம் சீராக்கும்
* இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவும்
குறிப்பு: சற்று கசப்பான சுவையும், சிலருக்கு ஜீரணிக்க சிரமமும் இருக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: சட்டென உடல் எடையைக் குறைக்க இந்த சூப் ரெசிபிஸ் செய்து சாப்பிடுங்க..
நிலை 2 — வெளிர் பச்சை வாழைப்பழம் (Light Green Banana)
தினசரி சாப்பிட சிறந்த ஆரோக்கியமான தேர்வு. டாக்டர் சேதி கூறுவதில், இந்த நிலைதான் நாரும் சர்க்கரையும் சமநிலை உள்ள ‘Perfect Stage’.
ஊட்டச்சத்து:
* 100g ≈ 2.5g நார்
* பொட்டாசியம் அதிகம்
* குடலுக்கு soft & friendly
நன்மைகள்:
* இரத்த சர்க்கரை ஸ்திரமாகும்
* குடல் ஆரோக்கியம் மேம்படும்
* நீண்ட நேரம் ஆற்றல் கிடைக்கும்
இது தான் தினமும் சாப்பிட Doctors பரிந்துரைக்கும் ‘Healthiest Stage’.
நிலை 3 — மஞ்சள் வாழைப்பழம் (Fully Yellow Banana)
உடனடி ஆற்றல் (Energy) தேவைப்படும் போது இதை சாப்பிடலாம். முழுமையாக மஞ்சள் ஆனபோது, வாழைப்பழத்தில் இருக்கும் ஸ்டார்ச் சர்க்கரையாக மாறுகிறது.
நன்மைகள்:
* உடனடி எரிசக்தி
* ஜீரணிக்க எளிது
* வைட்டமின் C & B5 அதிகம்
* உடற்பயிற்சிக்கு முன் சிறந்தது
குறிப்பு: Resistant starch அளவு குறைந்திருக்கும்.
View this post on Instagram
நிலை 4 — பழுப்பு புள்ளிகள் கொண்ட வாழைப்பழம் (Brown Spotted Banana)
சுவைக்கும், Smoothie-களுக்கும் சிறந்தது. இந்த நிலை வாழைப்பழம் மிகவும் இனிப்பானதும், மென்மையானதுமாக இருக்கும்.
ஊட்டச்சத்து:
* சர்க்கரை அதிகம் (100g ≈ 17g sugar)
* நார் சற்று குறைவு
* ஆன்டி-ஆக்ஸிடென்ட் அதிகம்
பயன்:
*ருசியான snacks, smoothies, banana breadக்கு perfect
*குழந்தைகளுக்கும் சுலபமாக ஜீரணமாகும்
குறிப்பு: இரத்த சர்க்கரை உயர்வுக்கு prone ஆகும் — diabetic க்கு daily use வேண்டாம்.
எந்த நிலை வாழைப்பழம் மிகவும் ஆரோக்கியமானது?
Light Green Banana (சற்று பச்சை) தான் முழு உடலுக்கும் Best. ஏனெனில்:
* நார் அதிகம்
* சர்க்கரை குறைவு
* குடல் ஆரோக்கியம் மேம்படும்
* இரத்த சர்க்கரை ஸ்திரம்
* நாள் முழுவதும் sustained energy
அதனால் தினமும் சாப்பிட வேண்டிய வாழைப்பழம்:
சற்று பச்சை (Light Green).
இறுதியாக..
வாழைப்பழத்தின் ஒவ்வொரு நிலையும் தனித்தனி நன்மைகளை கொண்டது. ஆனால் ஆரோக்கியம் + நார் + குறைந்த சர்க்கரை + energy ஆகிய அனைத்தையும் சமநிலைப்படுத்தும் நிலை — வெளிர் பச்சை வாழைப்பழம்.
Disclaimer: இந்த கட்டுரை மருத்துவ ஆலோசனை ஆகாது. வயிற்று கோளாறுகள் அல்லது செரிமான பிரச்சனைகள் உள்ளவர்கள் தங்களின் மருத்துவரை அணுகி தனிப்பட்ட ஆலோசனை பெற்ற பின்னரே உணவுகளைத் தேர்வு செய்யவும்.
How we keep this article up to date:
We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.
Current Version
Nov 15, 2025 11:28 IST
Published By : Ishvarya Gurumurthy