Cucumber Benefits: வெயில் காலத்தில் வெள்ளரிக்காயை இப்படி சாப்பிட்டால் இரட்டிப்பு பலன் கிடைக்கும்!

  • SHARE
  • FOLLOW
Cucumber Benefits: வெயில் காலத்தில் வெள்ளரிக்காயை இப்படி சாப்பிட்டால் இரட்டிப்பு பலன் கிடைக்கும்!

அது மட்டும் அல்ல, இதில் பல வகையான வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் காணப்படுகின்றன. இவை ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது. நம்மில் பலர் வெள்ளரிக்காயை தோல் நீக்கி சாப்பிடுவோம். வெள்ளரிக்காயை தோல் நீக்கி சாப்பிடுவது நல்லதா? தோல் நீக்காமல் சாப்பிடுவது நல்லதா? என்ற கேள்வி இன்றும் மக்கள் மனதில் இருக்கும் புதிர்.

இந்த பதிவும் உதவலாம் : Cucumber Face Mask: வெயில் காலத்திலும் உங்க முகம் பரு இல்லாமல் பளபளப்பாக இருக்கணுமா? இதை ட்ரை பண்ணுங்க!

ஆனால், வெள்ளரிக்காயை தோலுரிக்காமல் சாப்பிட்டால், அது உங்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா? வெள்ளரிக்காயை தோல் நீக்காமல் சாப்பிட்டால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

வெள்ளரிக்காயை தோல் நீக்கி சாப்பிடுவது நல்லதா?

வெள்ளரிக்காயில் 96 சதவீதம் தண்ணீர் உள்ளது. மேலும், இது நீரிழப்பு மற்றும் மலச்சிக்கலுக்கு மிகவும் நல்லது. இது கோடை காலத்தில் சாப்பிட மிகவும் சிறந்த உணவுகளில் ஒன்று. இதை நாம் சாலட், ஜூஸ், ரைதா என பல வகைகளில் சாப்பிடுவோம்.

வெள்ளரிக்காயை தோல் நீக்கி சாப்பிடுவதை விட தோல் நீக்காமல் சாப்பிடும் போதும் அதிக பலன்களை பெறுவீர்கள். இப்படி சாப்பிடுவதால் பல உடல் நல பிரச்சினைகளில் இருந்து விடு படுவீர்கள்.

இந்த பதிவும் உதவலாம் : குளிர்காலத்தில் வெள்ளரிக்காய் சாப்பிடுவது நல்லதா? டாக்டர் கூறுவது என்ன?

வெள்ளரிக்காயை தோலுடன் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

நீங்கள் மலச்சிக்கல் மற்றும் செரிமான பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருந்தால், நீங்கள் தோல் நீக்காத வெள்ளரிக்காயை சாப்பிடலாம். ஏனெனில், அதன் தோலில் கரையாத நார்ச்சத்து உள்ளது. இது மலச்சிக்கல் மற்றும் அது தொடர்பான பிரச்சனைகளை பெருமளவு குறைக்கும். இது குடல் இயக்கத்தை மேம்படுத்துகிறது. இது மலத்தை மென்மையாக்குகிறது மற்றும் குடல் இயக்கத்தை ஊக்குவிக்கிறது.

வெள்ளரிக்காய் தோல் வைட்டமின் ஏ, பீட்டா கரோட்டின் நல்ல மூலமாகும். பார்வை ஆரோக்கியமாக இருக்க வேண்டுமெனில், தோல் நீக்கப்படாத வெள்ளரிக்காயை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

தோல் நீக்காத வெள்ளரிக்காயில் கலோரிகளின் அளவு மிகவும் குறைவு. நார்ச்சத்து மற்றும் கரடுமுரடான தன்மை அதிகம் காணப்படும். இதை சாப்பிட்டால் நீண்ட நேரம் வயிறு நிறைந்திருக்கும். இது உங்கள் பசியைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இந்த வழியில் நீங்கள் எளிதாக எடை குறைக்க முடியும்.

இந்த பதிவும் உதவலாம் : Diabetes: நீரிழிவு நோயாளிகள் வெள்ளரிக்காய் சாப்பிடுவது நல்லதா? உண்மை என்ன?

வைட்டமின் கே வெள்ளரித் தோலில் உள்ளது. இது இரத்தம் உறைவதைத் தடுக்க மிகவும் உதவியாக இருக்கும். வைட்டமின் கே எலும்புகளை வலுவாக வைத்திருக்க உதவுகிறது.

அஸ்கார்பிக் அமிலம் வெள்ளரிக்காய் தோலில் உள்ளது. இது வயதானதைக் கட்டுப்படுத்துகிறது மற்றும் ஆக்ஸிஜனேற்ற சேதத்திலிருந்து பாதுகாக்க உதவுகிறது.

வெள்ளரிக்காயை எப்படி சாப்பிடுவது நல்லது?

வெள்ளரிக்காயின் தோலை நீக்குவது அதன் ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆரோக்கிய நன்மைகளை இழக்க வழிவகுக்கும். எனவே, அவற்றின் சரியான ஊட்டச்சத்து நன்மைகளை பெற தோல் நீக்காமல் உட்கொள்ள வேண்டும்.

வெள்ளரிக்காயை நன்கு கழுவி, வெதுவெதுப்பான நீரில் சிறிது உப்பு மற்றும் மஞ்சள் மற்றும் சிறிது சமையல் சோடா சேர்த்து 10 நிமிடம் ஊற வைக்கவும். பின்னர், அதை மீண்டு நன்றாக தேய்த்து கழுவவும். பின்னர் அதை அப்படிய சாப்பிடலாம்.

Pic Courtesy: Freepik

Read Next

Neer Mor Benefits: அடிக்கும் வெயிலை சமாளிக்க ஒரு கிளாஸ் நீர் மோர் குடிங்க டியூட்.!

Disclaimer