Sat Sep 12, 2026 | 12:03 AM IST

Doctor Verified

லாக்டோஸ் இன்டாலரன்ஸ் – பலருக்கும் தெரியாத பால் பிரச்சனை!

உலகில் 3 பேரில் 2 பேருக்கு லாக்டோஸ் இன்டாலரன்ஸ் உள்ளது என்கிறார் ஹார்வர்டு மருத்துவர் சௌரப் சேதி. பால், தயிர், ஐஸ்கிரீம், சீஸ் போன்றவை உடலுக்கு எப்படிச் செரிக்காது என்பதையும், அதற்கான மாற்று வழிகளையும் இங்கே அறிந்துகொள்ளுங்கள்.

பால் என்பது ஆரோக்கியத்தின் அடையாளமாக கருதப்படுகிறது. ஆனால் அதே பால் சிலருக்கு பிரச்சனையின் மூலமாகவும் இருக்கிறது. உலகளவில் சுமார் மூன்று பேரில் இரண்டு பேர் வரை பாலைச் செரிக்க முடியாமல் தவிக்கிறார்கள் என்று ஹார்வர்டு மற்றும் ஸ்டான்ஃபோர்ட் பயிற்சி பெற்ற குடல்நோய் நிபுணர் டாக்டர் சௌரப் சேதி கூறுகிறார்.

லாக்டோஸ் இன்டாலரன்ஸ் என்றால் என்ன?

பாலில் உள்ள இயற்கை சர்க்கரை “லாக்டோஸ் (Lactose)” எனப்படும். இதை உடலில் லாக்டேஸ் (Lactase) என்ற என்சைம் உடைத்து செரிக்க வேண்டும். ஆனால், சிலரின் உடலில் இந்த லாக்டேஸ் என்சைம் குறைவாக இருக்கும். இதனால் பால் குடித்தவுடன் வயிற்று வீக்கம், குளிர்ச்சியுடன் கூடிய வலி, வாயுத் தொல்லை, செரிமானக் குறைபாடு போன்ற பிரச்சனைகள் தோன்றுகின்றன. இதுவே லாக்டோஸ் இன்டாலரன்ஸ் என்று அழைக்கப்படுகிறது.

அறிகுறிகள்

டாக்டர் சௌரப் சேதி கூறுகையில், பெரும்பாலானோர் இந்த அறிகுறிகளை வேறு காரணங்களுக்காகப் பார்க்கிறார்கள். பலர் பால் குடித்த பிறகு வயிற்று வலி, அமிலம், வீக்கம் போன்றவை ஏற்படும்போது வேறு காரணங்களுக்காக என்று நினைக்கிறார்கள். ஆனால் உண்மையில் லாக்டோஸ்தான் மறைந்த குற்றவாளி. இது பெரும்பாலும் பால், சீஸ், தயிர், ஐஸ்கிரீம் போன்ற பொருட்களை உட்கொண்ட பிறகு ஏற்படுகிறது.

பால் மாற்றினால் போதுமா? இல்லை!

பலர் இதற்கான தீர்வாக “லாக்டோஸ் ஃப்ரீ பால்” அல்லது “பிளாண்ட் பேஸ்டு மில்க்” குடிக்கத் தொடங்குகிறார்கள். ஆனால் டாக்டர் சௌரப் சேதி எச்சரிக்கிறார்,“பாலைக் கைவிட்டது மட்டும் போதாது. சீஸ், ஐஸ்கிரீம், பட்டர், தயிர் போன்றவையும் சிலருக்கு அறிகுறிகளைத் தூண்டும்.” அதாவது, பால் மாற்றினாலும் பால் சார்ந்த உணவுகள் லாக்டோஸ் அளவை பொருத்து இன்னும் பிரச்சனைகளை உண்டாக்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்: கொழுப்புகள் நல்லதா? கெட்டதா? உணவு சமைக்க எந்த எண்ணெய்களைப் பயன்படுத்தலாம்? டாக்டர் பால் பரிந்துரை

நல்ல செய்தி – நெய் பாதுகாப்பானது!

மருத்துவர் சௌரப் சேதி கூறுகையில், “நெய் (Ghee) என்பது லாக்டோஸ் இல்லாதது. அதனால் இது பால் ஒத்துக்கொள்ளாதவர்களுக்கும் பாதுகாப்பானது” என்றார். இதன் காரணம், நெய் தயாரிக்கும் போது பாலில் உள்ள லாக்டோஸ் மற்றும் கேசீன் போன்ற பொருட்கள் முழுமையாக நீக்கப்படுகின்றன.

லாக்டோஸ் இல்லாத பால் மாற்றுகள்

லாக்டோஸ் இன்டாலரன்ஸ் உள்ளவர்கள், பின்வரும் மாற்றுகளைப் பயன்படுத்தலாம் –

* லாக்டோஸ் ஃப்ரீ மில்க் (Lactose-free milk) – பால் சுவையை வைத்துக் கொண்டு, லாக்டோஸ் நீக்கப்பட்ட வகை.

* அல்மண்ட் மில்க் (Almond milk) – குறைந்த கலோரி மற்றும் நல்ல கொழுப்பு.

* சோயா மில்க் (Soy milk) – புரதம் நிறைந்தது.

* ஓட்ஸ் மில்க் (Oat milk) – நார்ச்சத்து மற்றும் மென்மையான சுவை கொண்டது.

* கோகோநட் மில்க் (Coconut milk) – இயற்கை கொழுப்பு மற்றும் நார்ச்சத்து நிறைந்தது.

இந்த மாற்றுகளை உடல்நிலை, சுவை விருப்பம், மற்றும் ஊட்டச்சத்து தேவைகளைப் பொருத்து தேர்வு செய்யலாம்.

View this post on Instagram

A post shared by Saurabh Sethi MD MPH | Gastroenterologist (@doctor.sethi)

லாக்டோஸ் இன்டாலரன்ஸ் இருந்தால் என்ன செய்ய வேண்டும்?

* மருத்துவரின் ஆலோசனையுடன் லாக்டோஸ் டெஸ்ட் (Lactose Tolerance Test) செய்யலாம்.

* பால் சார்ந்த உணவுகளை ஒன்றன்பின் ஒன்றாக நீக்கி பாருங்கள். எந்த உணவு பிரச்சனையை உண்டாக்குகிறது என்பதை கண்டறியுங்கள்.

* பால் குடிப்பதற்கு முன் லாக்டேஸ் என்சைம் சப்பிள்மென்ட்ஸ் எடுத்தால் சிலருக்கு உதவியாக இருக்கும்.

* தண்ணீர் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை சேர்த்து செரிமானத்தை மேம்படுத்தலாம்.

இறுதியாக..

லாக்டோஸ் இன்டாலரன்ஸ் என்பது ஒரு “பெரிய பிரச்சனை அல்ல, ஆனால் புரிந்துகொள்ளப்படாத ஒன்று.” பாலை முற்றிலும் தவிர்க்காமல், மாற்று வழிகளை சரியாகத் தேர்வு செய்தால் உடல் ஆரோக்கியத்தை எளிதில் பராமரிக்கலாம். நெய், லாக்டோஸ் ஃப்ரீ மில்க், அல்லது பிளாண்ட் பேஸ்டு பால் வகைகள் ஆகியவை சிறந்த தேர்வுகள். உங்கள் உடல் எந்த உணவுக்கு எப்படி பதில் அளிக்கிறது என்பதை கவனித்தால், செரிமானமும், ஆரோக்கியமும் சமநிலையில் இருக்கும்.

Disclaimer: இந்த கட்டுரை பொதுவான ஆரோக்கிய விழிப்புணர்வுக்காக எழுதப்பட்டுள்ளது. மருத்துவ ஆலோசனைக்கு மாற்றாக இதை எடுத்துக்கொள்ளக்கூடாது. செரிமானக் குறைபாடு அல்லது பால் ஒத்துக்கொள்ளாமை இருந்தால், தயவுசெய்து மருத்துவரிடம் ஆலோசனை பெறுங்கள்.

Read Next

ரூட் கனால் சிகிச்சை ஏன் அவசியம்.? மருத்துவர் விளக்கம்..

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

Ishvarya Gurumurthy

Ishvarya Gurumurthy

துணை ஆசிரியர்

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

    Oct 06, 2025 14:16 IST

    Published By : Ishvarya Gurumurthy

Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content