Benefits Of Ginger: தினமும் இஞ்சி சாப்பிட்டால் என்ன ஆகும் தெரியுமா?

  • SHARE
  • FOLLOW
Benefits Of Ginger: தினமும் இஞ்சி சாப்பிட்டால் என்ன ஆகும் தெரியுமா?


Health benefits of Ginger: பல நூற்றாண்டு காலமாக ஆசிய உணவிலும் மருத்துவத்திலும் இஞ்சி பயன்படுத்தப்பட்டு வருகிறது. நீங்கள் இஞ்சியை பொடியாகவோ, எண்ணெயாகவோ அல்லது சாறாகவோ உட்கொள்ளலாம். இது பல சமையல் வகைகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள், வீட்டு வைத்தியம் மற்றும் அழகுசாதனப் பொருட்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

குறிப்பாக இந்தியாவில் ஆயுர்வேத மருத்துவத்தில் இஞ்சி மூலப்பொருளாக திகழ்கிறது. இத்தகைய அளப்பரிய பயன்பாடுகளால் இஞ்சி பல்லாயிரம் வருடங்களாக சமையல் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: Benefits of Almonds: பாதாம் சாப்பிட்டா என்ன நடக்கும் தெரியுமா?

இஞ்சியால் ஏற்படும் நன்மைகள் என்ன?

ஜீரண சக்தியை மேம்படுத்தும்

தினமும் உணவுக்கு முன்பு சிறிதளவு இஞ்சியை உப்பு சேர்த்து சாப்பிட்டால் உமிழ்நீர் சுரக்க உதவும். இது ஜீரண சக்தியை மேம்படுத்துகிறது. நாட்பட்ட அஜீரணக் கோளாறான டைஸ்பெப்ஸ்யா உள்ளவர்கள் இஞ்சியை உணவில் சேர்க்க வேண்டும் என்று மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது. இது வயிற்று வலியையும், வயிற்று போக்கையும் மற்றும் பல வயிறு சார்ந்த பிரச்னைகளை தீர்க்க உதவுகிறது.

குமட்டலை நிறுத்துகிறது

குமட்டல், வாந்தி போன்ற பிரச்னைகளுக்கு இஞ்சி சிறந்த மருந்தாக திகழ்கிறது. கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படும் காலை நேர உபாதையை போக்க இஞ்சி உதவுகிறது. இஞ்சியில் உள்ள வேதிப்பொருள், நரம்பு மண்டலத்தை கட்டுப்படுத்தி குமட்டல், வாந்தி மற்றும் மயக்கத்தை கட்டுப்படுத்துகிறது. செரிமான பிரச்னை உள்ளவர்கள் தினமும் இஞ்சியை சேர்த்து வரும்போது பாதிப்புகள் குறைவதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றனர்.

கீழ்வாதத்தை நீக்குகிறது

இஞ்சியில் ஜிஞ்சரால் எனும் பொருள் உள்ளது. இது மூட்டு மற்றும் தசை வலிக்கு நிவாரணமாக உள்ளது. பொதுவாக உடற்பயிற்சி செய்பவர்கள், விளையாடுபவர்களுக்கு சுளுக்கு, கால் வலி, தசை வலி போன்றவை ஏற்படும். அவர்களுக்கு இஞ்சி சிறந்த மருந்தாக திகழும். ஹாங்காங்கில் மூட்டு வலி உள்ளவர்களுக்கு மசாஜ் செய்வதில் இஞ்சி எண்ணெய் உபயோகிக்கப்படுகிறது. ஆஸ்டியோஆர்திரிட்டிஸ் மூட்டு பிரச்சனை உள்ளவர்களிடம் ஆராய்ந்து பார்த்ததில், இது சிறந்த முடிவுகளை கொடுத்துள்ளது.

எடை இழப்புக்கு வலி வகுக்கும்

எடை குறைப்பதில் இஞ்சி முக்கிய பங்கு வகிக்கிறது. உடல் பருமனாக உள்ளவர்களின் இடுப்பு பகுதியை குறைப்பது சவாலான ஒன்று. இதற்கு இஞ்சி உதவுகிறது. வீக்கத்தை குறைப்பதில் இஞ்சி சிறந்த பங்கு வகிக்கிறது. உடல் எடையை குறைக்கும் பயணத்தில் உள்ளவர்கள் இஞ்சியை எடுத்துக்கொள்வது நல்லது.

இதையும் படிங்க: Benefits Of Muskmelon: முலாம் பழத்தில் இத்தனை நன்மையா?

இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தும்

இஞ்சில் உள்ள ஜிஞ்சரால், இரத்த சர்க்கரை அளவை சீராக வைத்திருப்பதில் சிறந்த பங்கு வகிக்கிறது. இஞ்சி கார்போஹைட்ரேட்டுகளை உடைக்கும் என்சைம்களைக் குறைக்கிறது, எனவே இது குளுக்கோஸ் (சர்க்கரை) வளர்சிதை மாற்றத்திற்கு உதவுகிறது. வகை 2 நீரிழிவு நோயாளிகள் பெரும்பாலும் போதுமான இன்சுலின் உற்பத்தி செய்வதில்லை, இது குளுக்கோஸ் உங்கள் உடல் முழுவதும் பரவுவதை உறுதி செய்வதற்கும் உங்கள் இரத்த ஓட்டத்தில் சேராமல் இருப்பதற்கும் உதவுகிறது.

கொலஸ்ட்ராலை குறைக்கிறது

தினமும் இஞ்சி சாப்பிடுவதால் ட்ரைகிளிசரைடுகள், மொத்த கொழுப்பு மற்றும் கெட்ட கொழுப்புன் அளவுகளை குறைப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. ஆனால் கொலஸ்ட்ராலைக் குறைக்க இஞ்சியை எடுத்துக் கொள்ளலாம் என்று திட்டவட்டமாகச் சொல்ல முடியாது.

Image Source: Freepik

Read Next

Protein Rich Vegetarian Foods: எந்த சைவ உணவில் புரதம் அதிகம் உள்ளது என்று உங்களுக்கு தெரியுமா?

Disclaimer

குறிச்சொற்கள்