Benefits of Eating Chicken : தினமும் சிக்கன் சாப்பிட்டால் என்ன ஆகும் தெரியுமா?

  • SHARE
  • FOLLOW
Benefits of Eating Chicken : தினமும் சிக்கன் சாப்பிட்டால் என்ன ஆகும் தெரியுமா?

சிக்கனில் புரதம், வைட்டமின் பி 12, கோலின் போன்ற பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது. இவற்றை அளவாக தினமும் சாப்பிட்டு வந்தால் பல ஆரோக்கிய நன்மைகளை பெறலாம். அந்தவகையில், தினமும் சிக்கன் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள் மற்றும் எவ்வளவு சாப்பிடலாம் என்பது பற்றி பார்க்கலாம்.

ஒரு நாளைக்கு எவ்வளவு சிக்கன் சாப்பிடலாம்?

100 கிராம் கோழி மார்பகத்தின் 124 கிலோகலோரி, 20 கிராம் புரதம் மற்றும் 3 கிராம் கொழுப்பு உள்ளது. எனவே, நீங்கள் 65-75 கிலோ எடையுள்ள சராசரி நபராக இருந்தால், ஒரு நாளைக்கு சுமார் 200 கிராம் வரை சிக்கன் சாப்பிடலாம்.

இந்த பதிவும் உதவலாம் : இரவு உணவில் கட்டாயம் சேர்க்க வேண்டிய 4 நார்ச்சத்து உணவுகள் இங்கே

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்

சளி, காய்ச்சல் மற்றும் சுவாச பிரச்சினை என பல தொற்றுகளுக்கு இன்றும் சிக்கன் சூப் வீடுகளில் கொடுக்கப்படுகிறது. இது நாசி மற்றும் தொண்டை நெரிசலை குறைக்கும். சிக்கன் சூப் நியூட்ரோபில்களின் இடம்பெயர்வைத் தடுக்கிறது என ஆய்வுகள் கூறுகின்றனர். இது ஒரு வகை நோயெதிர்ப்பு உயிரணுக்கள், இதன் மூலம் பொதுவான தொற்றுநோய்களின் போது ஏற்படும் வீக்கத்தைத் தடுக்கிறது மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

முழுமையான உணவு

சிக்கன் புரதத்தின் சிறந்த மூலம். எனவே, கொஞ்சமான சாப்பிட்டாலும் நிறைவான உணவு எடுத்துக்கொண்டதை போன்ற உணர்வை ஏற்படுத்தும். எனவே, உங்கள் தீராத பசியை அடக்க சிறிதளவு சிக்கன் சாப்பிட்டால் போதும். இதனால், உங்களின் உடல் எடையும் சரியாக மேம்படுத்த உதவும். அதே போல, சிக்கனில் செரோடோனின் (Serotonin) ஹார்மோன் உற்பத்திக்கு உதவும் டிரிப்டோபான் (Tryptophan) உள்ளது. இந்த செரோடோனின் ஹார்மோன் உடலின் புத்துணர்ச்சிக்கு உதவும் ஹார்மோன்.

நினைவாற்றல் அதிகரிக்கும்

கோழிக்கறியில் உள்ள கோலின் மற்றும் வைட்டமின் பி12 உள்ளதால் நினைவாற்றல் மேம்பட உதவுகிறது. இயல்பாகவே அதிகளவு கோலின் உட்கொள்வபர்களின் நினைவாற்றல் சிறப்பாக இருப்பதாக பல ஆய்வு முடிவுகள் கூறுகின்றனர். அதே போல, சிக்கன் குழந்தைகளில் மூளை வளர்ச்சியை ஊக்குவிப்பதோடு, நரம்பு மண்டலம் சரியாக செயல்பட உதவுகிறது மற்றும் வயதானவர்களில் அறிவாற்றல் செயல்திறனுக்கு உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம் : க்ரீன் டீயில் என்ன கலந்து குடிக்கலாம்? ஆரோக்கியமான க்ரீன் டீயை இனி சுவையாக மாற்றலாம்.

ஊட்டச்சத்து நிறைந்தது

சிக்கனில் புரதம், கலோரிகள் மற்றும் உடலுக்கு ஆரோக்கியம் தரும் கொழுப்புகள் அதிகம் உள்ளது. இவை, நமது உடலின் இயக்கத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்களின் சரியான அளவை வழங்குகிறது. மேலும், இதில் டிரிப்டோபான் மற்றும் வைட்டமின் பி 5 உள்ளதால் மன அழுத்தத்தை குறைப்பதற்கு உதவுகிறது.

எலும்புகள் வலுவடையும்

சிக்கனில் புரதம் தவிர பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் போன்ற பல தாதுக்கள் நிறைந்துள்ளது. இவை எலும்புகளை வலுவாக்குகிறது. ஆஸ்டியோபோரோசிஸ் (osteoporosis) எனப்படும் எலும்பு தொடர்பான பிரச்சனையை தடுப்பதோடு, இதில் உள்ள செலினியம் கீல்வாதத்தின் அபாயத்தைக் குறைக்கிறது. ஆண்கள் துத்தநாகம் நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும், ஏனெனில் இது டெஸ்டோஸ்டிரோன் அளவைக் கட்டுப்படுத்தவும், விந்தணு உற்பத்தியை அதிகரிக்க உதவும்.

உடல்சோர்வை நீக்கும்

பொதுவாக இரத்த சோகை, இரும்புச்சத்து குறைப்பாடு உள்ளவர்கள் அடிக்கடி உடல் சோர்வு பிரச்சனையை சந்திப்பார்கள். இவர்கள் சிக்கன் சாப்பிடுவதால், உடலுக்கு தேவையான இரும்புச்சத்து கிடைக்கும். அதே சமயம் நிம்மதியான உறக்கத்திற்கு உதவும். மேலும், பெண்கள் மாதவிடாய் காலத்தில் சந்திக்கும் உடல் ரீதியிலான பிரச்சனைகளை நீக்கும்.

இதய ஆரோக்கியத்தை ஊக்குவிக்கும்

சிக்கனில் வைட்டமின் பி 6 நிறைந்திருப்பதால், இது மாரடைப்பைத் தடுக்கிறது. வைட்டமின் பி 6 மாரடைப்பு அபாயத்துடன் இணைக்கப்பட்ட முக்கிய கூறுகளில் ஒன்றான ஹோமோசைஸ்டீனின் அளவை குறைக்கிறது. இது தவிர, கோழி நியாசினின் சிறந்த மூலம். இது இதய நோய்க்கு வழிவகுக்கும் கொழுப்பைக் குறைக்க உதவுகிறது. மேலும் இது ஒமேகா -3 கொழுப்பு அமிலங்களின் நல்ல மூலமாகவும் இருப்பதால் இதயத்திற்கு நல்லது.

புற்றுநோய் அபாயத்தை குறைக்கும்

சிக்கன் சாப்பிடுவதால், பெருங்குடல் புற்றுநோயின் அபாயத்தை குறைக்கும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சிக்கனில் உள்ள சேர்மங்கள் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளின் தேக்கத்தை குறைப்பதால், புற்றுநோய் அபாயத்தை குறைக்கிறது.

Image Source: Freepik

Read Next

Side Effects of Lady Finger : வெண்டைக்காய் யாரெல்லாம் சாப்பிடக்கூடாது தெரியுமா?

Disclaimer

குறிச்சொற்கள்