Thu Oct 29, 2026 | 04:29 PM IST

Side Effects of Lady Finger : வெண்டைக்காய் யாரெல்லாம் சாப்பிடக்கூடாது தெரியுமா?

Side Effects of Lady Finger : வெண்டைக்காய் யாரெல்லாம் சாப்பிடக்கூடாது தெரியுமா?Side Effects of Lady Finger : வெண்டைக்காய் யாரெல்லாம் சாப்பிடக்கூடாது தெரியுமா?

Lady Finger benefits : ஆரோக்கியமாக இருக்க, காய்கறிகளை உட்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். குறிப்பாக, பச்சை காய்கறிகள் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அதில் வெண்டைக்காயும் ஒன்று. இதில் பல வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்து மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் உள்ளது. எனவே, இது எடையை பராமரிக்க உதவுவது மட்டுமல்லாமல், கண்கள் மற்றும் எலும்புகளுக்கு மிகவும் நல்லது.

அதே நேரத்தில், இதில் ஃபிளாவனாய்டுகள் மற்றும் பாலிபினால்கள் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளது. மேலும், இது உடலில் தீங்கு விளைவிக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களை நடுநிலையாக்க உதவுகிறது. இப்படி வெண்டைக்காயில் எண்ணற்ற நன்மைகள் இருந்தாலும், சிலர் அதை உட்கொள்ளவதை தவிர்ப்பது நல்லது என்று கூறப்படுகிறது. அந்தவகையில், யாரெல்லாம் வெண்டைக்காயை சாப்பிடக்கூடாது என பார்க்கலாம்.

இந்த பதிவும் உதவலாம் : வெறும் வயிற்றில் வெண்டைக்காய் தண்ணீரை குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?

ஒவ்வாமை உள்ளவர்கள்

யாருக்கேனும் அலர்ஜி இருந்தால், அவர்கள் வெண்டைக்காயை தவிர்ப்பது நல்லது. அதாவது, பச்சை காய்கறிகள், கோகோ அல்லது செம்பருத்தி போன்றவற்றால் ஒவ்வாமை ஏற்பட்டால் வெண்டைக்காயை சாப்பிட வேண்டாம். இல்லையெனில், நீங்கள் தோல் பிரச்சினைகள் அல்லது இரைப்பை பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள்

சிறுநீரகம் தொடர்பான பிரச்சினை உள்ளவர்கள் வெண்டைக்காய் சாப்பிடக்கூடாது. குறிப்பாக உங்களுக்கு சிறுநீரக கல் பிரச்சனை இருந்தாலோ அல்லது இதற்கு முன் இந்த பிரச்சனை இருந்தாலோ இதை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. சிறுநீரக கல் பிரச்சனை உள்ளவர்கள் ஆக்சலேட் நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும். இதில் ஆக்சலேட் காணப்படுவதால், அது உங்களுக்கு தீங்கு விளைவிக்கும்.

இந்த பதிவும் உதவலாம் : காய்கறிகளை சமைக்காமல் சாப்பிடுவதால் கிடைக்கும் 5 ஆரோக்கிய நன்மைகள்!!!

குடல் பிரச்சினை உள்ளவர்கள்

யாரேனும் இரைப்பை குடல் பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருந்தால், அவர்கள் வெண்டைக்காயை தவிர்ப்பது நல்லது. உதாரணமாக, நீங்கள் அடிக்கடி வாயு தொல்லை, வயிற்று வீக்கம், வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சினைகளை சந்தித்தால் நீங்கள் வெண்டைக்காய் சாப்பிடுவதை நிறுத்த வேண்டும். மீறி சாப்பிட்டால், வாயு மற்றும் வீக்கம் அதிகமாக ஏற்படும்.

நீரிழிவு நோயாளிகள்

ஓக்ராவில் நார்ச்சத்து மிக நல்ல அளவில் காணப்படுவதால், அதன் நுகர்வு ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது என்று கருதப்படுகிறது. ஆனால், நீரிழிவு நோயாளிகள் இதை உண்ணும் போது சில பக்க விளைவுகளை சந்திக்க நேரிடும். எனவே, மருத்துவர்களின் ஆலோசனையை எடுப்பது நல்லது.

இந்த பதிவும் உதவலாம் : இரவு உணவில் கட்டாயம் சேர்க்க வேண்டிய 4 நார்ச்சத்து உணவுகள் இங்கே

இரத்தம் உறைதல் பிரச்சனை உள்ளவர்கள்

வைட்டமின் கே ஓக்ராவில் காணப்படுகிறது. இது இரத்த உறைதலில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால், ரத்தம் உறைதல் பிரச்னை உள்ளவர்கள் அல்லது இதற்கான மருந்து சாப்பிடுபவர்கள் மருத்துவரின் ஆலோசனையை எடுப்பது நல்லது.

Read Next

→ அறுவை சிகிச்சைக்கு முன்னும் பின்னும் என்ன சாப்பிட வேண்டும்? இதோ உங்களுக்கான பட்டியல்

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

Devaki Jeganathan

Senior Sub Editor

நான் தேவகி ஜெகநாதன், டிஜிட்டல் மீடியாவில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். கல்வி, வேலைவாய்ப்பு, லைஃப்ஸ்டைல் மற்றும் ஜோதிடம் மீது அதீத ஆர்வம் கொண்டவர். தற்போது, குழந்தை நலன், வீட்டு வைத்தியம், அழகு குறிப்பு, உடற்பயிற்சி மற்றும் உணவு தொடர்பான தலைப்புகளில் கட்டுரைகளை எழுதி வருகிறேன். மக்களுக்கு தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் அவர்களை விழிப்புணர்வுடன் வைத்திருப்பதே எனது நோக்கம். எனக்கு பயணம் செய்வதும், புகைப்படம் எடுப்பதும் பிடிக்கும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.