Health Benefits of Eating Muskmelon Seeds: முலாம்பழத்தின் இனிப்பு மற்றும் புத்துணர்ச்சியூட்டும் சுவைக்கு யார் தான் அதை விரும்ப மாட்டார்கள். முலாம்பழம் சுவை மட்டுமல்லாமல், பல்வேறு உடல் ஆரோக்கிய நன்மைகளைத் தருகிறது. இந்த குளிர்ச்சி மிக்க பழமான முலாம்பழம் மட்டுமல்லாமல், அதன் விதைகளும் உடலுக்குப் பலதரப்பட்ட நன்மைகளைத் தருகிறது. ஆனால், இந்த விதைகளையே பலரும் நிராகரிக்கிறோம். உண்மையில் இந்த விதைகளில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடல் ஆரோக்கியத்திற்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது.
முலாம்பழ விதைகளின் ஊட்டச்சத்துக்கள்
முலாம்பழ விதைகளில் வைட்டமின்கள் ஏ, கே, சி, பி 1, ஈ போன்ற அத்தியாவசிய வைட்டமின்களும், புரதம், துத்தநாகம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் போன்றவையும் நிறைந்து காணப்படுகிறது. இந்த பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த விதைகளை சாதாரண அறை வெப்பநிலையில் உலரவைத்து, ஈரப்பதம் அனைத்தையும் நீக்கி, சமையலில் பயன்படுத்தலாம். இந்த ஆரோக்கியமிக்க ஊட்டச்சத்துக்கள் நிறைந்த முலாம்பழ விதைகளை உட்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் சிலவற்றைக் காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Muskmelon Benefits: புற்றுநோய் தடுப்பு முதல் இதய ஆரோக்கியம் வரை.. முலாம்பழம் நன்மைகள் இங்கே..
முலாம்பழ விதைகள் உட்கொள்வதன் நன்மைகள்
புரதங்கள் நிறைந்த விதைகள்
பெரும்பாலான பழங்களின் விதைகளைப் போலவே, முலாம்பழ விதைகளும் புரதச்சத்துக்கள் நிறைந்த நல்ல மூலமாகும். இது தசை பழுது, தசையின் வளர்ச்சி மற்றும் உடலின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் உதவுவதாக அமைகிறது. குறிப்பக சைவ உணவு உட்கொள்ளும் நபர்கள் புரத உட்கொள்ளலை அதிகரிக்க முலாம்பழ விதைகள் கூடுதலான சிறப்பு மிக்க விதையாகக் கருதப்படுகிறது.
நோய் அபாயத்தைக் குறைக்க
முலாம்பழ விதைகளில் வைட்டமின் சி மற்றும் பீட்டா கரோட்டின் போன்ற ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்து காணப்படுகிறது. இந்த ஊட்டச்சத்துக்கள் நிறைந்த கலவகள் உடலில் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை எதிர்த்துப் போராட உதவுகிறது. மேலும், இந்த விதைகள் ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்திலிருந்து செல்களைப் பாதுகாக்க ஏதுவாக அமைகிறது. கூடுதலாக, முலாம்பழ விதைகளில் நிறைந்துள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் நோய் ஏற்படும் அபாயத்தைக் குறைத்து, ஒட்டுமொத்த நல்வாழ்விற்கும் ஆறுதலாக அளிக்கிறது.
வீக்கத்தைத் தவிர்க்க
முலாம்பழ விதைகளில் பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற பல்வேறு முக்கிய தாதுக்களும் நிறைந்துள்ளது. இந்த ஊட்டச்சத்துக்கள் வலுவான மற்றும் ஆரோக்கியமான எலும்புகளைப் பராமரிக்க உதவுகிறது. இந்த தாதுக்கள் எலும்பு வலிமைக்கு உதவுகிறது. கூடுதலாக, சரியான நரம்பு மற்றும் தசை செயல்பாட்டை ஆதரிக்கிறது. உடலை ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் மற்றும் வீக்கத்திலிருந்து பாதுகாக்க உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Muskmelon Seeds Benefits: இது தெரிஞ்சா கிர்ணி விதையை விடவே மாட்டீங்க.!
எலும்பு வலுவாக
முலாம்பழ விதைகளில் பொட்டாசியம், துத்தநாகம் மற்றும் மக்னீசியம் போன்ற முக்கிய தாதுக்கள் உள்ளது. இவை ஆரோக்கியமான எலும்புகள் மற்றும் பற்களை ஊக்குவிக்கின்றன. இந்த தாதுக்கள் எலும்பு அடர்த்திக்கு பங்களிக்கிறது. இதன் மூலம் ஆஸ்டியோபோரோசிஸ் எனும் உடையக்கூடிய பலவீனமான எலும்பு நிலைமைகளைத் தடுக்க முடியும். எலும்புகளை வலுவாக வைக்க இந்த முலாம்பழ விதைகளை உட்கொள்ளலாம்.
இதய ஆரோக்கியத்திற்கு
முலாம்பழ விதைகளில் ஒமேகா -3 மற்றும் ஒமேகா-6 போன்ற கொழுப்பு அமிலங்கள் காணப்படுகிறது. இது தவிர மோனோசாச்சுரேட்டட் மற்றும் பாலி அன்சாச்சுரேட்டட் போன்ற கொழுப்பு அமிலங்களும் உள்ளது. இந்த அமிலங்கள் அனைத்துமே இதய ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஏனெனில், இந்த அமிலங்கள் உடலில் கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுகிறது. இவை ஆரோக்கியமான இரத்த அழுத்தத்தை மேம்படுத்தி, ஒட்டுமொத்த இதய ஆரோக்கியத்தைப் பாதுகாக்கிறது.
செரிமான ஆரோக்கியத்திற்கு
முலாம்பழ விதைகளில் நார்ச்சத்துக்கள் சிறந்த மற்றும் வளமான மூலமாகக் கருதப்படுகிறது. இது செரிமானத்தை மேம்படுத்த உதவும் விதைகளாகும். மேலும், குடல் இயக்கத்தை மேம்படுத்தி, மலச்சிக்கல் தொடர்பான அறிகுறிகளைக் குறைக்கிறது. முலாம்பழ விதைகளை உட்கொள்வதன் மூலம் ஆரோக்கியமான குடல் நுண்ணுயிரியை மேம்படுத்தலாம். செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், எடை மேலாண்மைக்கும் முலாம்பழ விதைகள் முக்கிய பங்காற்றுகின்றன.
இவ்வாறு முலாம்பழ விதைகளை உட்கொள்வதன் மூலம் உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் வகையில் பல்வேறு வகையான உடல்நல பிரச்சனைகளிலிருந்து விடுபட முடியும்.
இந்த பதிவும் உதவலாம்: Muskmelon Seeds Benefits: இதய ஆரோக்கியம் முதல் சரும நன்மைகள் வரை முலாம்பழ விதைகள் தரும் ஆரோக்கிய நன்மைகள்
Image Source: Freepik