உங்கள் கண்பார்வை திறனை மேம்படுத்த இந்த பழங்கள் மற்றும் காய்கறி ஜூஸ் உதவும்!

  • SHARE
  • FOLLOW
உங்கள் கண்பார்வை திறனை மேம்படுத்த இந்த பழங்கள் மற்றும் காய்கறி ஜூஸ் உதவும்!


முன்பெல்லாம் கண்பார்வை தொடர்பான பிரச்சனைகள் முதியவர்களுக்கு மட்டுமே என்று கருதப்பட்டது. ஆனால், இன்றைய காலகட்டத்தில் இளைஞர்களுடன் சேர்ந்து குழந்தைகளுக்கும் சிறுவயதிலேயே கண் கண்ணாடிகள் போட துவங்கியுள்ளனர். பலர் கண் பார்வையை மேம்படுத்த பல்வேறு வகையான மருந்துகளை பயன்படுத்துகின்றனர்.

இந்த பதிவும் உதவலாம் : வெறும் வயிற்றில் வெண்டைக்காய் தண்ணீரை குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?

ஆனால், பல நேரங்களில் அவற்றின் பயன்பாடு விரும்பிய பலனைத் தருவதில்லை. இதுபோன்ற சூழ்நிலையில், பார்வையை மேம்படுத்த, பல வகையான பழங்கள் மற்றும் காய்கறி சாறுகளை வீட்டிலேயே தயாரித்து உட்கொள்ளலாம். இந்த சாற்றை வயதானவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு கொடுக்கலாம். இவை, உங்கள் கண்பார்வையை மேம்படுத்துவதுடன், செரிமான அமைப்பை ஆரோக்கியமாகவும் வைக்கும். அவற்றை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

தக்காளி ஜூஸ்

தக்காளி சாறு உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும். இதில், சோடியம், பொட்டாசியம், நார்ச்சத்து, இரும்புச்சத்து, வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி என பல வகையான சத்துக்கள் காணப்படுகின்றன. இதனை, உட்கொள்வதால் பார்வைத்திறன் அதிகரிப்பது மட்டுமின்றி கண் தொடர்பான நோய்களும் குணமாகும். தக்காளி சாறு குடிப்பதால் கண்புரை அபாயமும் குறைகிறது.

ஆம்லா ஜூஸ்

நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் உடலில் ஏற்படும் பல நோய்கள் எளிதில் குணமாகும். இதில், உள்ள வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் கண்களை பாதிப்பில் இருந்து பாதுகாத்து பார்வையை மேம்படுத்துகிறது. முழு நெல்லிக்காய் சாறு குடிப்பது நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது மற்றும் பல வகையான வைரஸ் நோய்களின் அபாயத்தை குறைக்கிறது.

இந்த பதிவும் உதவலாம் : காய்கறிகளை சமைக்காமல் சாப்பிடுவதால் கிடைக்கும் 5 ஆரோக்கிய நன்மைகள்!!!

ஆரஞ்சு ஜூஸ்

கிட்டத்தட்ட அனைவருக்கும் ஆரஞ்சு சாறு பிடிக்கும். இதன் இனிப்பு மற்றும் புளிப்புச் சுவை கண்பார்வையை மேம்படுத்துவது மட்டுமின்றி, கண்புரை நோயின் அபாயத்தையும் குறைக்கிறது. ஆரஞ்சு பழச்சாறு குடிப்பதால் கண் நரம்புகள் வலுவடையும். ஆரஞ்சு சாற்றில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஃபோலேட் கண்களை ஆரோக்கியமாக வைக்கிறது.

கேரட் & பீட்ரூட் ஜூஸ்

கேரட் மற்றும் பீட்ரூட் சாறும் குடித்து வர கண்பார்வை மேம்படும். கேரட்டில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் பீட்ரூட்டில் உள்ள லுடீன் மற்றும் ஜியாக்சாண்டின் ஆகியவை விழித்திரையை ஆரோக்கியமாக வைத்திருப்பதோடு கண் நோய்களையும் தடுக்கிறது. இந்த சாற்றை ஒரு நாளைக்கு ஒரு முறை குடிக்கலாம்.

இந்த பதிவும் உதவலாம் : குயினோவா ஏன் சாப்பிட வேண்டும்?

கீரை ஜூஸ்

கண்பார்வைக்கு கீரை சாறு மிகவும் ஆரோக்கியமானது. இந்த ஜூஸை குடிப்பதால் உடலுக்கு இரும்புச்சத்தும் கிடைக்கும், இது உடல் சோர்வை எளிதில் போக்குகிறது. கீரைச் சாற்றில் வைட்டமின் ஏ, சி, கே, மாங்கனீசு, கால்சியம், இரும்புச்சத்து மற்றும் மெக்னீசியம் ஆகியவை கண்பார்வையை மேம்படுத்துகின்றன.

கண்பார்வையை மேம்படுத்த இந்த ஜூஸ் தயாரித்து குடிக்கலாம். இருப்பினும், உங்களுக்கு ஏதேனும் நோய் அல்லது ஒவ்வாமை பிரச்சனை இருந்தால், உங்கள் மருத்துவருடன் கலந்தாலோசித்த பின்னரே இந்த சாற்றை உட்கொள்ளுங்கள்.

Pic Courtesy: Freepik

Read Next

Apple Juice Benefits: தினமும் காலை ஆப்பிள் ஜூஸ் குடிப்பது நல்லதா?

Disclaimer