Foods to avoid with papaya: உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பழங்கள், காய்கறிகள் போன்றவற்றை எடுத்துக் கொள்வது அவசியமாகும். அந்த வகையில் பல்வேறு வகையான வைட்டமின்கள், தாதுக்கள் நிறைந்த பழங்களில் பப்பாளிப்பழமும் ஒன்று. இதனை நம் அன்றாட உணவில் ஒரு பகுதியாக சேர்த்துக் கொள்ளலாம். பழங்களை உட்கொள்வது நாள் முழுவதும் செயல்படத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களையும் வழங்குகிறது. மேலும் இது குறைந்த கிளைசெமிக் இண்டெக்ஸ், அதிக நார்ச்சத்துக்கள் நிறைந்த பழமாகும். இந்த எளிய பழம் உடலில் பல்வேறு முக்கிய செயல்பாடுகளுக்குப் பங்கு வகிக்கிறது. எனினும், பப்பாளியின் அதிகபட்ச நன்மைகளைப் பெற சில உணவு வகைகளுடன் அதை இணைப்பதைத் தவிர்க்க வேண்டும்.
பப்பாளியை ஏன் அதிகம் உட்கொள்ளக் கூடாது?
இது நார்ச்சத்து மற்றும் பப்பைன் போன்ற நொதிகளின் சிறந்த வளமான மூலமாகும். இதனை அதிகளவில் உட்கொள்வது வயிற்றின் புறணி எரிச்சல் அல்லது தளர்வான மலத்தை ஏற்படுத்தலாம். இந்த நார்ச்சத்துக்கள் தண்ணீரை உறிஞ்சுகிறது. எனவே போதுமான நீரேற்றம் மற்றும் அதிக நார்ச்சத்துக்களுடன் இதை உட்கொள்வது வழக்கமான தன்மையை மேம்படுத்துவதற்கு பதில், மலச்சிக்கல்லை உண்டாக்கலாம். இதில் பப்பாளியுடன் தவிர்க்க வேண்டிய சில உணவுகளைக் காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: மறந்தும் இந்த உணவுகளை சியா விதைகளுடன் சாப்பிட்ராதீங்க!
பப்பாளியுடன் சேர்த்து சாப்பிடக் கூடாத உணவுகள்
காரமான உணவு
பொதுவாக காரமான உணவுகள் வயிற்றில் எரிச்சலை ஏற்படுத்துகிறது. இதை பப்பாளியுடன் இணைப்பது தவறான தேர்வாகும். இதை இணைப்பது இணைப்பது செரிமான அசௌகரியத்தை ஏற்படுத்துகிறது. மேலும் இரைப்பை குடல் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கலாம். பப்பாளியுடன் காரமான உணவு சேர்ப்பது வயிற்றுப் பிடிப்பு, நெஞ்செரிச்சல் அல்லது அமில வீக்கத்தை ஏற்படுத்தலாம் எனக் கூறப்படுகிறது. மேலும் பப்பாளியில் உள்ள குளிர்ச்சியான தன்மை, காரமான உணவின் வெப்பத்துடன் இணைப்பது குடலில் எதிர்விளைவுகளை ஏற்படுத்தி, பிற உடல்நலப் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது.
புளித்த உணவுகள்
கிம்ச்சி போன்ற புளித்த உணவுகளை பப்பாளியுடன் இணைக்கக் கூடாது. ஏனெனில், புளித்த உணவுகளில் உள்ள புரோபயாடிக்குகள் பப்பாளியில் உள்ள என்சைம்களுடன் கலந்து செரிமானத்தை சீர்குலைக்கலாம். மேலும் இரைப்பை குடல் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.
மாவுச்சத்து நிறைந்த உணவுகள்
சோளம் அல்லது உருளைக்கிழங்கு போன்ற மாவுச்சத்து நிறைந்த உணவுகளை பப்பாளியுடன் இணைப்பது நல்ல செரிமானத்தைத் தராது. எனவே இதை ஒன்றாக சாப்பிடுவதைத் தவிர்க்க பரிந்துரைக்கப்படுகிறது. மேலும் பப்பாளியில் பப்பேன் போன்ற செரிமான நொதிகள் உள்ளது. இவை அதிக மாவுச்சத்து இல்லாத நிலையில் சிறப்பாக செயல்படுகிறது. மேலும் இது செரிமான செயல்முறையை மெதுவாக்குவதுடன் வீக்கம் அல்லது அசௌகரியத்தை ஏற்படுத்தலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Papaya Health Benefits: தினமும் பப்பாளி சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு எவ்வளவு நல்லது தெரியுமா?
கொழுப்பு நிறைந்த உணவுகள்
வறுத்த மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளுடன் பப்பாளியைச் சேர்த்து உட்கொள்வது செரிமான அசௌகரியத்தை ஏற்படுத்துகிறது. மேலும் பப்பாளி ஒரு குறைந்த கொழுப்பு நிறைந்த பழம் என்பதால், இதை அதிக கொழுப்புள்ள உணவுகளுடன் சேர்ப்பது வீக்கம், அஜீரணத்தை உண்டாக்கும் என்பது நிரூபிக்கப்படுகிறது.
பால் மற்றும் பால் பொருள்கள்
பப்பாளியுடன் பால் சேர்த்து உட்கொள்வது நல்ல தேர்வாக இருக்காது. ஏனெனில் பப்பாளியில் உள்ள பாப்பைன் மற்றும் சைமோபபைன் போன்ற நொதிகள் பாலை சுருட்டி, செரிமான அமைப்பின் செயல்பாட்டை பாதிக்கிறது. இந்தக் கலவையானது வீக்கம், வாயு மற்றும் பிடிப்புகள் போன்றவற்றை ஏற்படுத்துகிறது.
பப்பாளியின் சில பக்க விளைவுகள்
இது போன்ற உணவு சேர்க்கையைத் தவிர, பப்பாளி சில பக்க விளைவுகளைக் கொண்டுள்ளது. சில நபர்களுக்கு பப்பாளி ஒவ்வாமை இருக்கலாம். இதனால் படை நோய், வீக்கம் அல்லது சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் உண்டாகும். மேலும் அதிகளவு உட்கொள்வதும் வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பிரச்சனையை ஏற்படுத்துகிறது. எனவே பப்பாளியை சரியான அளவில் உட்கொள்வது உடலுக்குப் பாதுகாப்பை ஏற்படுத்தலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Papaya Benefits: வெறும் வயிற்றில் பப்பாளி சாப்பிடுங்க. என்னென்ன நன்மைகள் கிடைக்கும் பாருங்க
Image Source: Freepik