ஸ்லீப் பாராலிசிஸ் எதனால் ஏற்படுகிறது தெரியுமா? அதைத் தவிர்க்க என்ன செய்யலாம்?

  • SHARE
  • FOLLOW
ஸ்லீப் பாராலிசிஸ் எதனால் ஏற்படுகிறது தெரியுமா? அதைத் தவிர்க்க என்ன செய்யலாம்?

ஏனெனில், இந்நிலையில் எதுவும் நடக்காதது போல் உடலின் இயக்கத்தை மீண்டும் அடைவோம். மேலும் இந்நிலை மிகவும் ஆபத்தானதாகவும் இருக்கலாம். குறிப்பாக, தூக்க பாராலிஸிஸ் நிலையில் தெளிவான மாயத்தோற்றங்கள் மற்றும் வரவிருக்கும் அழிவின் உணர்வு தோன்றலாம். இந்த பாராலிஸிஸ் நிலையை அனுபவிப்பர்கள் தங்களது சுற்றுப்புறங்களை முழுமையாக அறிந்திருப்பர். ஆனால், உதவிக்காக யாரையும் அழைக்கவோ அல்லது தங்களது கை கால்களை அசைக்கவோ முடியாமல் தங்களது சொந்த உடலில் சிக்கிக்கொண்டதாக உணர்வர்.

இந்த பதிவும் உதவலாம்: உஷார்! இந்த பழக்கங்களால் உங்க கண் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம்!

அடோனியா

தூக்கத்தின் போது, பொதுவாக நம் உடல்கள் அடோனியா என்றழைக்கப்படும் முடக்கு நிலைக்கு நுழைகிறது. இது நம் கனவுகள் செயல்படுத்துவது தடுக்கப்படுகிறது. எனினும், தூக்க பாராலிஸிஸின் போது, மூளையின் கட்டளைகளுக்கும் உடலின் பதிலளிக்கும் திறனுக்கும் இடையே உள்ள தொடர்பு துண்டிக்கப்படுகிறது. மனம் விழித்தாலும் கூட இந்த அடோனியா ஏற்படலாம். ஸ்லீப் பாராலிஸிஸ் பொதுவாக பாதிப்பில்லாதது ஆகும். எனினும் இது சில விநாடிகள் முதல் இரண்டு நிமிடங்கள் வரை நீடிக்கும் போது, இது திகிலூட்டும் அனுபவமாக இருக்கும்.

ஸ்லீப் பாராலிஸிஸ் ஏற்பட காரணங்கள்

இது பெரும்பாலும் நார்கோலெப்சி போன்ற சில தூக்கக் கோளாறுகளுடன் தொடர்புடையதாகும். அதாவது தசைக் கட்டுப்பாட்டின் திடீர் இழப்பு மற்றும் அதிகப்படியான பகல்நேர தூக்கம் போன்றவற்றால் ஏற்படலாம் என கூறப்படுகிறது. மேலும் ஒழுங்கற்ற தூக்க அட்டவணைகள், தூக்கமின்மை, மன அழுத்தம் மற்றும் சில மருந்துகள் போன்றவை ஸ்லீப் பாராலிஸிஸ் ஏற்படுவதற்கான காரணிகளாகும். ஸ்லீப் பாராலிஸிஸ் ஆனது ஒரு தீவிரமான மருத்துவ நிலையாக கருதப்படாவிட்டாலும், இது தூக்க பிரச்சனையின் அறிகுறியாகக் கருதப்படுகிறது. ஸ்லீப் பாராலிஸிஸ் தூண்டுவதை புரிந்து கொள்வது, அதன் நிகழ்வைக் குறைக்க தனிநபர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.

ஸ்லீப் பாராலிஸிஸ் அபாயத்தைக் குறைப்பதற்கான வழிகள்

உறக்க நேர வழக்கம்

சரியான உறக்க நேர வழக்கத்தைக் கையாள்வது மிகவும் இன்றியமையாத ஒன்றாகும். சூடான குளியல் அல்லது நினைவாற்றல் தியானம் போன்ற செயல்பாடுகள் தூக்க முடக்கத்திற்கான பொதுவான தூண்டுதல்களான மன அழுத்தத்தையும், பதட்டத்தையும் குறைக்க உதவுகிறது. அதே சமயம், தூங்கும் முன்பாக டிவி பார்ப்பது அல்லது மின்னணு சாதனங்களைப் பயன்படுத்துவது போன்ற தூண்டுதல் செயல்களைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், திரைகளிலிருந்து வெளிப்படும் நீல ஒளி, தூக்கத்தை ஒழுங்குபடுத்தும் மெலடோனின் என்ற ஹார்மோனின் உற்பத்தியில் குறுக்கிட்டு தூக்கத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Nose Bleeding Causes: மூக்கில் இரத்தம் வருவதற்கு என்ன காரணங்கள் தெரியுமா? எப்படி சரிசெய்வது?

நிலையான தூக்க அட்டவணை

இது ஸ்லீப் பாராலிஸிஸைத் தடுப்பதற்கான மிகச் சிறந்த வழிகளில் ஒன்றாகும். இந்த நிலையான தூக்க அட்டவணையில் ஒவ்வொரு நாளும் ஒரே நேரத்தில் படுக்கைக்குச் சென்று விழிப்பது அடங்கும். இவை உடலின் உள் கடிகாரத்தைச் சீராக்க உதவுகிறது. மேலும் தூக்க சுழற்சிகள் சீர்குலைந்து தூக்க முடக்கத்திற்கு வழிவகுக்கும் வாய்ப்புகளைக் குறைக்கிறது. அதன் படி, ஓர் இரவுக்கு 7-9 மணிநேர தூக்கத்தை இலக்காகக் கொள்ள வேண்டும்.

சரியான தூக்க சூழ்நிலை

ஓய்வின் தரத்தில் தூக்க சூழல் முக்கிய பங்கு வகிக்கிறது. அதன்படி, படுக்கையறையை இருட்டாகவும், அமைதியாகவும், குளிர்ச்சியாகவும் வைத்திருப்பது உறந்துவதற்கு உகந்த நிலையாகும். மேலும், அமைதியான சூழலை உருவாக்க இருட்டடிப்பு திரைச்சீலைகள், மின்விசிறியைப் பயன்படுத்துவதைக் கவனிக்க வேண்டும். இது தவிர, போதுமான ஆதரவை வழங்கும் வசதியான மெத்தை மற்றும் தலையணைகள் போன்றவற்றின் உதவியுடன் தூக்கத்தின் தரத்தை மேம்படுத்தலாம். இது ஸ்லீப் பாராலிஸிஸ் ஏற்படுவதற்கான வாய்ப்பைக் குறைக்க உதவுகிறது.

மன அழுத்தத்தை நிர்வகிப்பது

மன அழுத்தம் மற்றும் பதட்டம் ஆகியவை தூக்கக் கோளாறுகள், ஸ்லீப் பாராலிஸிஸ் ஏற்படுவதற்கு முக்கிய காரணங்களாகும். இதை நிர்வகிக்க பயனுள்ள வழிகளைக் கண்டறிவது முக்கியமாகும். இதன் மூலம் ஸ்லீப் பாராலிஸிஸ் தீவிரத்தைக் கணிசமாகக் குறைக்கலாம். மேலும் அறிவாற்றல் நடத்தை சிகிச்சை, ஆழ்ந்த சுவாசப் பயிற்சிகள் போன்ற நுட்பங்கள், மன அழுத்தத்தை நிர்வகிப்பதுடன், தூக்கத்தின் தரத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. கூடுதலாக, வழக்கமான உடல் செயல்பாடு ஒரு இயற்கையான மன அழுத்த நிவாரணியாக செயல்பட்டு, சிறந்த தூக்கத்தை ஊக்குவிக்கிறது.

இந்த வழிகளைக் கையாள்வதன் மூலம் தூக்க முடக்கத்தின் தீவிரத்தைக் குறைக்கலாம். மேலும், நல்ல ஆரோக்கியமான தூக்கத்தைப் பெறலாம்.

இந்த பதிவும் உதவலாம்: நின்று கொண்டு தண்ணீர் குடிக்கும் பழக்கம் இருக்கா உங்களுக்கு? முதலில் இத கவனிங்க!

Image Source: Freepik

Read Next

அதிகமா ஸ்வீட் சாப்டீங்களா.? அப்போ இத செஞ்சே ஆகனும்..

Disclaimer