உடலுக்கு தேவையான புரதம், வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை வழங்கும் முட்டை, நீண்ட காலமாக ஊட்டசத்தின் சக்தியாக போற்றப்பட்டு வருகிறது. இருப்பினும், முட்டை சாப்பிட விரும்பாதவர்கள், நெறிமுறைக் காரணங்களால் முட்டையை சாப்பிடாதவர்கள் என பலர் முட்டைக்களுக்கு மாற்றாக சாப்பிடும் பொருள்களை தேடி வருகின்றனர்.
நீங்கள் முட்டை போலவே ஊட்டச்சத்து நன்மைகள் நிறைந்த, சத்தான உணவை தேடுபவர்களா? உங்களுக்காக விஞ்ஞான ஆய்வுகளுடன் கூடிய முட்டைக்கு நிகரான உணவுகள் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
முக்கிய கட்டுரைகள்
டோஃபு

டோஃபு என்பது சோயாபீன் பாலில் இருந்து எடுக்கப்படும் பனீர் வகையாகும். இவை முட்டைக்கு ஒரு சிறந்த மாற்றாக இருக்கும். இதில் புரதம், கால்சியம், இரும்பு சத்து மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. அமெரிக்கன் டயட்டெடிக் அசோசியேஷன் இதழ் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், டோஃபு முட்டைகளுக்கு ஒரு சிறந்த மாற்றாக இருக்கலாம் என்று கண்டறிந்துள்ளது. டோஃபுவின் மென்மையான அமைப்பும், லேசான சுவையும், ஆம்லெட் மற்றும் கஸ்டர்டுகளுக்கு உகந்ததாக இருக்கும் என கூறப்படுகிறது.
சியா விதை
சியா விதைகள் ஒரு நவநாகரீக உணவாக திகழ்கிறது. அவற்றின் பன்புகள் காரணமாக, அவை ஒரு சிறந்த முட்டை மாற்றாக இருக்கிறது. சியா விதையை தண்ணீரில் கலக்கும்போது ஜெல் போன்று தோற்றமளிக்கிறது. இது முட்டைகளின் நிலைத்தன்மையை ஒத்திருக்கிறது. ஜர்னல் ஆஃப் ஃபுட் சயின்ஸ் & டெக்னாலஜி வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், சியா விதைகளில், வேக வைத்த முட்டைகளில் உள்ள பயன்கள் மற்றும் கலப்பு தன்மைகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சியா விதைகள் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களின் ஆதாரமாக இருக்கிறது. மேலும் நார்ச்சத்து, கால்சியம் மற்றும் ஆக்ஸிஜனேற்றத்தை வழங்குகிறது.
இதையும் படிங்க: Best Raw Vegetables: எந்தெந்த காய்களை பச்சையாக சாப்பிட்டால் நல்லது?
ஆளிவிதை
சியா விதைகளைப் போலவே, ஆளிவிதைகளும் கலப்புத் தன்மை கொண்டுள்ளதால், அவை முட்டைக்கு ஒரு சிறந்த மற்றாக திகழ்கிறது. உணவு மற்றும் வேளாண்மை அறிவியல் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வில், பிஸ்கட் மற்றும் பிரட்டில் முட்டை சேர்ப்பதற்கு பதில் ஆளிவிதைகளை சேர்க்காலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது. ஆளிவிதைகள், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் உணவு நார்ச்சத்து ஆகியவற்றின் சிறந்த மூலமாகும். இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், ஆரோக்கியமான செரிமானத்திற்கும் உதவுகிறது. ஆளிவிதைகளை முட்டைக்கு மாற்றாகப் பயன்படுத்த, ஜெல் போன்ற நிலைத்தன்மையை உருவாக்கும் வரை ஆளிவிதைகளை தண்ணீரில் கலக்கவும்.
கொண்டைக்கடலை வேக வைத்த நீர்

கொண்டைகடலை வேக வைத்த நீர், சிறந்த முட்டை மாற்றாக திகழ்கிறது. இண்டர்நேஷனல் ஜர்னல் ஆஃப் காஸ்ட்ரோனமி & ஃபுட் சயின்ஸில் வெளியிடப்பட்ட ஆய்வில், மெரிங்யூஸ், மியூஸ்கள் போன்றவற்றில் முட்டைக்கு மாற்றாக கொண்டைக்கடலை வேக வைத்த நீர் பயன்படுத்தப்படலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது. முட்டையின் வெள்ளைக்கருவை கலக்கும் போது ஏற்படும் நுறைத்த கெட்டியான தன்மை, கொண்டைக்கடலை வேக வைத்த நீரை கலக்கும் போது கிடைக்கும். இதில் கலோரிகள் குறைவாக இருக்கும். மேலும் இதில் புரதம் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
ஆப்பிள் சாஸ்
பேக்கிங் ரெசிபிகளில் முட்டைக்கு பதிலாக ஆப்பிள் சாஸ் சேர்த்துக்கொள்ளலாம். குறிப்பாக மஃபின், கேக் மற்றும் பிஸ்கேட் ஆகியவற்றில் ஆப்பிள் சாஸ், முட்டைக்கு பதிலான ஒரு ஆரோக்கியமான மாற்றாக திகழ்கிறது. ஆப்பிளில் உள்ள இயற்கையான சர்க்கரை, பேக்கிங் தயாரிப்புகளில் ஈரப்பதம் மற்றும் இனிப்பை சேர்க்கும். அதே வேளையில், கொழுப்புகளின் தேவையை குறைக்கிறது. ஜர்னல் ஆஃப் ஃபுட் சயின்ஸில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், ஆப்பிள் சாஸ்ம் குறைந்த கொழுப்புகள் உடையது என்றும், இதில் நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளது என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
முட்டைகள் ஊட்டச்சத்து நிறைந்த உணவாக இருந்தாலும், இதற்கு நிகராக பல மாற்று உணவு பொருள்கள் உள்ளன. மேற்கூறிய பொருள்களை முட்டைக்கு மாற்றாக பயன்படுத்தும்போது, முட்டையில் உள்ள அதே சத்துக்களை பெற முடியும். இந்த மாற்றுகள் ஆராய்சியில் கண்டறியபட்டவை ஆகும். உங்கள் உணவில் இந்த மாற்றுகளை இணைப்பதன் மூலம், நீங்கள் விரும்பும் உணவுகளை உண்டு மகிழ்வீர்கள்.
Image Source: Freepik