குடிப்பதை நிறுத்த முடியவில்லையா? அப்போ இதை ட்ரை பண்ணுங்க..

  • SHARE
  • FOLLOW
குடிப்பதை நிறுத்த முடியவில்லையா? அப்போ இதை ட்ரை பண்ணுங்க..


இதனால் உடல்நல பாதிப்புகள் ஏற்படுகிறது. அப்படிப்பட்டவர்கள் சில விஷயங்களைச் செய்வதன் மூலம் உடல்நிலை சீக்கிரம் கெடாமல் பார்த்துக் கொள்ளலாம் என்கின்றனர் நிபுணர்கள். அது எப்படி என்பதை இங்கே காண்போம். 

உப்பை குறைக்கவும்

அதிக உப்பு, மது குடிப்பவர்களுக்கு ஆபத்தானது. அதிக உப்பு கல்லீரலை கடுமையாக சேதப்படுத்தும். மதுவுக்கும் அப்படித்தான். அதனால், கல்லீரல் பாதிப்பு இருமடங்காகும் என்று கூறப்படுகிறது. ஆகையால் உப்பை கண்டிப்பாக குறைக்க வேண்டும். 

அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் படி, நீங்கள் ஒரு நாளைக்கு 2,300 மில்லிகிராம் உப்பை உண்ண வேண்டும். ஆனால், பெரும்பான்மையான மக்கள் 50% அதிகமாக எடுத்துக் கொள்கிறார்கள். எனவே, மது அருந்துபவர்கள் உப்பைக் குறைக்க வேண்டும்.

நீரேற்றமாக இருங்கள்

மது அருந்தினால், கல்லீரல் மற்றும் சிறுநீரகம் பாதிக்கப்படும். இதை குறைக்க நிறைய தண்ணீர் குடிப்பது மிகவும் அவசியம். மயோ கிளினிக்கின் படி, போதுமான அளவு தண்ணீர் குடிப்பதால் சிறுநீரகம் மற்றும் கல்லீரலின் சுமையை குறைக்கலாம். நீர் கல்லீரலில் கழிவுகளை வெளியேற்ற உதவுகிறது.

எனவே தினமும் குறைந்தது 8 முதல் 12 கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும். வயது, உணவு, தட்பவெப்பநிலை, பயன்படுத்தப்படும் மருந்துகள் ஆகியவற்றைப் பொறுத்து இது நபருக்கு நபர் மாறுபடும்.

இதையும் படிங்க: அச்சச்சோ… மது அருந்துவதால் பெண்களுக்கு இவ்வளவு ஆபத்தா.?

ஆரோக்கியமான எடை

ஒரு நபரின் எடை மற்றும் கல்லீரல் செயல்பாட்டிற்கு இடையே நேரடி தொடர்பு உள்ளது. அதனால்தான், ஆரோக்கியமான எடையை பராமரிக்க வேண்டும். அதிக எடை கல்லீரலில் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இது கல்லீரல் அழற்சி மற்றும் ஃபைப்ரோஸிஸுக்கு வழிவகுக்கிறது. 

இந்த நிலையைத் தவிர்க்க எடையைக் கவனிக்க வேண்டும். ஆரோக்கியமான எடை என்பது பிஎம்ஐ பரிந்துரைத்த எடை. அதாவது, உயரத்துக்கு ஏற்ற எடை இருக்க வேண்டும்.

உடற்பயிற்சி

உடற்பயிற்சி என்பது இதயத்துக்கு மட்டுமல்ல தசைகளுக்கும். கல்லீரலுக்கும் நிறைய தேவை. உடற்பயிற்சி இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. கல்லீரலில் உள்ள கொழுப்பை குறைக்கிறது. கல்லீரல் சிரோசிஸ் உள்ளவர்களுக்கு உடல் செயல்பாடு நன்மை பயக்கும் என்று ஆய்வுகள் காட்டுகின்றன. 

அமெரிக்க சுகாதாரம் மற்றும் மனித சேவைகள் துறையின் நிபுணர்களின் கூற்றுப்படி, நீங்கள் வாரத்திற்கு குறைந்தது 150 முதல் 300 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

ஆரோக்கியமான உணவு

மற்றொரு முக்கியமான காரணி உணவு. மது அருந்துபவர்கள் ஆரோக்கியமான உணவை உண்ண வேண்டும். உண்ணும் உணவையும் கல்லீரல் பதப்படுத்துகிறது. ஏற்கனவே மதுவால் பாதிக்கப்பட்ட கல்லீரல், ஆரோக்கியமற்ற உணவுகளை உண்பதால் மேலும் பாதிக்கப்படும் என்கின்றனர் நிபுணர்கள். இது நீண்ட காலத்திற்கு கல்லீரல் நோய்க்கு வழிவகுக்கும். எனவே, மது அருந்துபவர்கள் சத்துக்கள் நிறைந்த நல்ல உணவை கண்டிப்பாக சாப்பிட வேண்டும் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

Read Next

Meat Side Effects: அதிக இறைச்சி சாப்பிட்டால் புற்றுநோய் வருமா? ஆய்வு முடிவுகள் இதோ!

Disclaimer

குறிச்சொற்கள்